
இன்றைக்கு சுவையான ராகி பால் கொழுக்கட்டை மற்றும் இனிப்பு பணியாரம் ரெசிபிஸை சிம்பிளாக வீட்டிலேயே எப்படி செய்யறதுன்னு பார்ப்போம்.
ராகி பால் கொழுக்கட்டை செய்ய தேவையான பொருட்கள்.
ராகி மாவு-2 கப்.
வெல்லம்-1 கப்.
ஏலக்காய் தூள்-1 தேக்கரண்டி.
தேங்காய் பால்-1 கப்.
துருவிய தேங்காய்-1 கைப்பிடி.
உப்பு-சிறிதளவு.
ராகி பால் கொழுக்கட்டை செய்முறை விளக்கம்.
முதலில் பவுலில் ராகி மாவு 2 கப் எடுத்துக் கொள்ளவும். அதில் உப்பு சிறிதளவு சேர்த்து கலந்துவிட்ட பிறகு சுடுத்தண்ணீரை சிறிது சிறிதாக ஊற்றி மாவை சாப்பாத்தி மாவு பதத்திற்கு நன்றாக பிசைந்துக் கொள்ளவும்.
இப்போது அடுப்பில் 2 டம்ளர் தண்ணீர் வைத்து நன்றாக கொதித்த பின் அதில் மாவை சிறிது சிறிதாக பால் போன்று உருட்டி போட்டு 10 நிமிடம் வேகவிடவும். இதில் ஏலக்காய் தூள் 1 தேக்கரண்டி சேர்த்துக் கொள்ளவும். இப்போது வெல்லம் 1 கப் சேர்த்து நன்றாக கரையும் வரை விடவும்.
தேங்காய் 1 கப் எடுத்து மிக்ஸியில் சிறிது தண்ணீர் விட்டு அரைத்து பாலை எடுத்து கொழுக்கட்டையில் கலந்துவிடவும். கடைசியாக, துருவிய தேங்காய் 1 கைப்பிடி தூவி இறக்கினால் சுவையான ராகி பால் கொழுக்கட்டை தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.
இனிப்பு பணியாரம் செய்ய தேவையான பொருட்கள்.
அரிசி-1 ½ கப்.
இட்லி அரிசி- ½ கப்.
உளுந்து-1/4 கப்.
கருப்பட்டி-2 கப்.
சுக்குப்பொடி-1 சிட்டிகை.
ஏலக்காய்-5
நெய்-தேவையான அளவு.
உப்பு-1 தேக்கரண்டி.
இனிப்பு பணியாரம் செய்முறை விளக்கம்.
முதலில் ஒரு பாத்திரத்தில் 1 ½ கப் அரிசி, ½ கப் இட்லி அரிசி, ¼ உளுந்து சேர்த்து தண்ணீர் ஊற்றி 4 மணி நேரம் ஊற வைத்துக்கொள்ளவும். பிறகு அதை மிக்ஸியில் சேர்த்து கெட்டியாக அரைத்துக்கொள்ளவும்.
அடுப்பில் ஃபேனை வைத்து 2 கப் கருப்பட்டி, ¼ கப் தண்ணீர் வீட்டு நன்றாக கரைய விடவும். இதில் 5 ஏலக்காய்யை தட்டி சேர்த்துக்கொண்டு, 1 சிட்டிகை சுக்கு பவுடரையும் சேர்த்துக் கொள்ளவும். இப்போது பாகு நன்றாக தயாரானதும் அதை மாவில் ஊற்றி அத்துடன் 1 தேக்கரண்டி உப்பு சேர்த்து கலந்துவிட்டு அரைமணி நேரம் அப்படியே விட்டுவிடுங்கள்.
இப்போது அடுப்பில் பணியாரம் செய்யும் பாத்திரத்தை வைத்து குழியில் நெய் தடவிய பிறகு மாவை ஒவ்வொரு குழியிலும் ஊற்றவும். நன்றாக வெந்ததும் திருப்பிப் போட்டு வேகவிட்டு எடுத்துக்கொள்ளவும். அவ்வளவு தான் சுவையான இனிப்பு பணியாரம் தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.