பால்கொழுக்கட்டை பண்டிகைகளுக்கு என்றே ஸ்பெஷலாக செய்யப்படும் இனிப்பு வகையாகும். இதை பிள்ளையார் சதூர்த்திக்கு பிள்ளையாருக்கு செய்து படைப்பார்கள். காரைக்குடியில் இந்த இனிப்பு தோன்றியிருந்தாலும் மதுரை, தஞ்சாவூர், கேரளாவில் மிகவும் பிரபலமாகும். அத்தகைய சிறப்பு மிக்க பால் கொழுக்கட்டையை சுலபமாக வீட்டிலேயே எப்படி செய்யறதுன்னு பாக்கலாம் வாங்க.
செட்டிநாடு பால் கொழுக்கட்டை செய்ய தேவையான பொருட்கள்:
அரிசி மாவு-1கப்.
உப்பு- சிறிதளவு.
வெல்லம்-1கப்.
துருவிய தேங்காய்- 2 தேக்கரண்டி.
ஏலக்காய்-2
தேங்காய் பால்-1 கப்
செட்டிநாடு பால் கொழுக்கட்டை செய்முறை விளக்கம்:
முதலில் ஃபேனில் அரிசி மாவு 1 கப்பை நன்றாக வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளவும். பிறகு அதில் உப்பு சிறிது சேர்த்து சுடுத்தண்ணீரை சிறிது சிறிதாக ஊற்றி நன்றாக மாவை பிசைந்து கொள்ளவும். இப்போது அதை சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி எடுத்து வைத்துக்கொள்ளவும்.
இப்போது ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு அதில் உருண்டைகளை போட்டு 10 நிமிடம் வேகவைக்கவும். இப்போது ஒரு ஃபேனில் 1கப் வெல்லம் சேர்த்து ½ கப் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும். வெல்லம் நன்றாக கொதித்ததும் அதை வடிக்கட்டி கொழுக்கட்டை இருக்கும் பாத்திரத்தில் ஊற்றி 10 நிமிடம் வேக வைத்து அதில் 2 தேக்கரண்டி துருவிய தேங்காய், ஏலக்காய் 2 சேர்த்து அடுப்பில் இருந்து இறக்கிவிடவும்.
கடைசியாக தேங்காய் பால் 1 கப் சேர்த்து கிண்டிவிட்டு பவுலில் ஊற்றிப் பரிமாறவும். அவ்வளவு தான் சுவையான செட்டிநாடு ஸ்பெஷல் பால் கொழுக்கட்டை தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டில் ஒருமுறை டிரை பண்ணி பாருங்கள்.
மைசூர் போண்டா செய்ய தேவையான பொருட்கள்:
தயிர்-1 கப்.
பேக்கிங் சோடா-1 சிட்டிகை.
பச்சை மிளகாய்-1
ஜீரகம்-1தேக்கரண்டி.
இஞ்சி-1 துண்டு.
கருவேப்பிலை-சிறிதளவு.
மைதா மாவு-1கப்.
உப்பு-சிறிதளவு.
எண்ணெய்- தேவையான அளவு.
மைசூர் போண்டா செய்முறை விளக்கம்:
முதலில் ஒரு பாத்திரத்தில் தயிர் 1 கப், பேக்கிங் சோடா 1 சிட்டிகை, சிறிதாக நறுக்கிய பச்சை மிளகாய் 1, ஜீரகம் 1 தேக்கரண்டி, பொடியாக நறுக்கிய இஞ்சி 1 துண்டு, கருவேப்பிலை சிறிதளவு, மைதா மாவு 1 கப், உப்பு சிறிதளவு, எண்ணெய் சிறிதளவு சேர்த்து நன்றாக போண்டா பதத்திற்கு பிசைந்து எடுத்துக்கொள்ளவும்.
இப்போது இந்த மாவை 1 மணி நேரம் ஊற வைத்துப் பிறகு கடாயில் எண்ணெய்யை கொதித்க வைத்து அதில் சிறிது சிறிது உருண்டையாகப் போட்டு நன்றாக பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும். அவ்வளவு தான் சுவையான மைசூர் போண்டா தயார். இதை தேங்காய் சட்னியுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவை அல்டிமேட்டாக இருக்கும். நீங்களும் இந்த ரெசிப்பியை ஒருமுறை டிரை பண்ணி பாருங்கள்.