டேஸ்டியான தேங்காய்ப் பால் பிரிஞ்சி சாதம் வித் கோவக்காய் பொரியல் செய்யலாமா?

Coconut milk brinji rice with kovakkai poriyal recipes
Coconut milk brinji rice with kovakkai poriyal recipesimage credit - youtube.com
Published on

ன்றைக்கு சுவையான ரெஸ்டாரெண்ட் ஸ்டைல் தேங்காய்ப்பால் பிரிஞ்சி சாதம் வித் கோவக்காய் பொரியல் எப்படி வீட்டிலேயே சிம்பிளா செய்வது என்று பார்ப்போம் வாங்க.

தேங்காய்ப்பால் பிரிஞ்சி சாதம் செய்ய தேவையான பொருட்கள்;

தேங்காய்-1

தேங்காய் எண்ணெய்-1 குழிக்கரண்டி.

பட்டை-1

கிராம்பு-1

சோம்பு-1 தேக்கரண்டி.

ஏலக்காய்-4

வெங்காயம்-2

பச்சை மிளகாய்-4

இஞ்சி பூண்டு பேஸ்ட்-1 தேக்கரண்டி.

கேரட்-1

பீன்ஸ்-1கப்.

உருளை-1

கொண்டைக்கடலை-1கப்.

உப்பு-1 தேக்கரண்டி.

புதினா, கொத்தமல்லி- தேவையான அளவு.

அரிசி-1 கப்.

கொத்தமல்லி- சிறிதளவு.

தேங்காய் பால் பிரிஞ்சி சாதம் செய்முறை விளக்கம்:

முதலில் முழு தேங்காய் நன்றாக துருவி அதை மிக்ஸியில் சேர்த்து தண்ணீர் சிறிது ஊற்றி அரைத்து வடிக்கட்டி எடுத்துக்கொள்ளவும்.

இப்போது குக்கரில் 1 குழிக்கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்த்து பட்டை 1, கிராம்பு 1, சோம்பு 1 தேக்கரண்டி, ஏலக்காய் 4 சேர்த்துவிட்டு பொடியாக நறுக்கிய வெங்காயம் 2, பச்சை மிளகாய் 4 சேர்த்து நன்றாக வதக்கவும். இப்போது இதில் 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும். பொடியாக நறுக்கிய கேரட் 1, பீன்ஸ் 1 கப், உருளை 1 ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும்.

இத்துடன் வேகவைத்த கொண்டைக்கடலை 1 கப், புதினா, கொத்தமல்லி தேவையான அளவு, உப்பு 1 தேக்கரண்டி சேர்த்து கலந்துவிட்ட பிறகு ஏற்கனவே தயார் செய்து வைத்திருக்கும் தேங்காய்ப் பாலை சேர்க்கவும். 1 கப் அரிசிக்கு 1 ½ கப் தேங்காய்ப்பால் சேர்க்க வேண்டும். இது சற்று கொதித்ததும் ஏற்கனவே ஊறவைத்திருக்கும் அரிசியை 1 கப் சேர்த்துக்கொள்ளவும். கடைசியாக கொத்தமல்லி சிறிது தூவி குக்கரை மூடி 2 விசில் வைத்து எடுத்தால் சுவையான தேங்காய்ப் பால் பிரிஞ்சி சாதம் தயார். நீங்களும் இந்த சூப்பரான ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பாருங்கள்.

கோவக்காய் பொரியல் செய்ய தேவையான பொருட்கள்;

கோவக்காய்-2 கப்.

எண்ணெய்- தேவையான அளவு.

கடுகு-1 தேக்கரண்டி.

உளுந்து-1 தேக்கரண்டி.

கருவேப்பிலை-சிறிதளவு.

வெங்காயம்-1

உப்பு-1 தேக்கரண்டி.

தக்காளி-1

மஞ்சள் தூள்-1/4 தேக்கண்டி.

மிளகாய் தூள்-1 தேக்கரண்டி.

தேங்காய் துருவல்- சிறிதளவு.

இதையும் படியுங்கள்:
ஆரோக்கியமான Aloe Vera அல்வா - அவல் கேசரி செய்யலாமா?
Coconut milk brinji rice with kovakkai poriyal recipes

கோவக்காய் பொரியல் செய்முறை விளக்கம்;

முதலில் கோவக்காயை சின்ன சின்னதாக வெட்டி எடுத்துக்கொள்ளவும். இப்போது அடுப்பில் கடாயை வைத்து தேவையான அளவு எண்ணெய்யை ஊற்றிக் கொள்ளவும்.

அதில் 1 தேக்கரண்டி கடுகு, 1 தேக்கரண்டி உளுந்து சேர்த்து கருவேப்பிலை சிறிது, நறுக்கிய வெங்காயம் 1 சேர்த்து நன்றாக வதக்கவும். இப்போது இதில் 1 தேக்கரண்டி உப்பு, நறுக்கிய தக்காளி 1, மஞ்சள் தூள் 1/4 தேக்கரண்டி சேர்த்து நன்றாக வதக்கவும். இப்போது வெட்டி வைத்திருக்கும் கோவக்காய் 2 கப்பை சேர்க்கவும். இத்துடன் 1 தேக்கரண்டி மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக கிளறிவிடவும், கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து இப்போது இதை ஒரு 2 நிமிடம் வேக வைக்கவும். கடைசியாக தேங்காய் துருவல் சிறிது சேர்த்து கிளறிவிட்டு இறக்கினால் சுவையான கோவக்காய் பொரியல் தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலேயே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com