அல்டிமேட் சுவையில் தால் கிச்சடி வித் வெஜிடபிள் துவையல் செய்யலாம் வாங்க!

Let's make dal khichdi with vegetable chutney in the ultimate taste!
Let's make dal khichdi with vegetable chutney in the ultimate taste!Image Credits: YouTube
Published on

ன்றைக்கு சுவையான தால் கிச்சடி மற்றும் டேஸ்டியான வெஜிடபிள் துவையல் ரெசிபியை வீட்டிலேயே சுலபமாக எப்படி செய்வது என்று பார்ப்போம்.

தால் கிச்சடி செய்ய தேவையான பொருட்கள்.

நெய்- 2 தேக்கரண்டி.

சீரகம்-1 தேக்கரண்டி.

பிரிஞ்சி இலை-1

இஞ்சி-1 துண்டு.

பச்சை மிளகாய்-1

வரமிளகாய்-2

வெங்காயம்-1

தக்காளி-1

பெருங்காயத்தூள்-1/2 தேக்கரண்டி.

மஞ்சள் தூள்-1/2 தேக்கரண்டி.

சீரகத்தூள்-1/2 தேக்கரண்டி.

மிளகாய்தூள்-1/2 தேக்கரண்டி.

தனியா தூள்-1 தேக்கரண்டி.

பாசிப்பருப்பு-1/4கப்.

துவரம் பருப்பு-1/2 கப்.

கல் உப்பு-1 தேக்கரண்டி.

பாஸ்மதி அரிசி-1 கப்.

கொத்தமல்லி-சிறிதளவு.

தால் கிச்சடி செய்முறை விளக்கம்.

முதலில் கடாயில் 2 தேக்கரண்டி நெய், சீரகம் 1 தேக்கரண்டி, பிரிஞ்சி இலை 1 சேர்த்து வதக்கிக் கொள்ளவும். அடுத்து தூளாக நறுக்கி வைத்த இஞ்சி 1 துண்டு, பச்சை மிளகாய் 1, வரமிளகாய் 2, பொடியாக நறுக்கிய வெங்காயம் 1, தக்காளி 1 சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.

நன்றாக வதங்கியதும் பெருங்காயத்தூள் ½ தேக்கரண்டி, மஞ்சள் தூள் ½ தேக்கரண்டி, மிளகாய் தூள் ½ தேக்கரண்டி, சீரகத்தூள் ½ தேக்கரண்டி, தனியா தூள் 1 தேக்கரண்டி போட்டு வதக்கிய பிறகு ¼ கப் பாசிப்பருப்பு மற்றும் ½ கப் துவரம் பருப்பை 3 கப் தண்ணீர் விட்டு வேகவைத்து இத்துடன் சேர்த்துக்கொள்ளவும்.

நன்றாக கலந்து விட்டு 2 கப் தண்ணீர் விட்டு 1 தேக்கரண்டி கல் உப்பு சேர்த்துக்கொள்ளவும். பருப்பு ஒரு கொதி வந்ததும் இதில் வேகவைத்து வைத்திருக்கும் 1 கப் பாஸ்மதி அரிசியை இதில் சேர்த்துக் கொள்ளவும். இப்போது இதை 20 நிமிடம் மூடிப்போட்டு வேகவைக்கவும். கடைசியாக சாதம் நன்றாக குழைந்து வந்த பிறகு 1 தேக்கரண்டி நெய், கொத்தமல்லி சிறிதளவு சேர்த்து கிளறிவிட்டு இறக்கவும். அவ்வளவுதான். சுவையான தால் கிச்சடி தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.

வெஜிடபிள் துவையல் செய்ய தேவையான பொருட்கள்.

எண்ணெய்-1 குழிக்கரண்டி.

உளுந்து-4 தேக்கரண்டி.

இஞ்சி-2 துண்டு.

பச்சை மிளகாய்-3

வரமிளகாய்-3

புளி-எழுமிச்சை அளவு

வெங்காயம்-1

தக்காளி-1

சௌசௌ-1/2 கப்.

பீன்ஸ்-1/2 கப்.

கேரட்-1/2 கப்.

மஞ்சள் பூசணி-1/2 கப்.

முள்ளங்கி-1/2 கப்.

குடை மிளகாய்-1/2 கப்.

முட்டைகோஸ்-1/2 கப்.

கத்தரி-1/2 கப்.

தேங்காய்-1 கப்.

கொத்ததல்லி-1 கைப்பிடி.

கருவேப்பிலை-சிறிதளவு.

உப்பு-1 தேக்கரண்டி.

இதையும் படியுங்கள்:
டேஸ்டியான தேங்காய் லெமன் ரசம் வித் கத்திரிக்காய் தொக்கு செய்யலாமா?
Let's make dal khichdi with vegetable chutney in the ultimate taste!

வெஜிடபிள் துவையல் செய்முறை விளக்கம்.

முதலில் கடாயில் 1 குழிக்கரண்டி எண்ணெய் சேர்த்து 4 தேக்கரண்டி உளுந்து, 2 துண்டு இஞ்சி, 3 பச்சை மிளகாய், 3 வரமிளகாய், எழுமிச்சை அளவு புளி, நறுக்கிய வெங்காயம் 1 சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.

அடுத்து இதில் ½ கப் நறுக்கிய சௌசௌ, முள்ளங்கி 1/2கப், பீன்ஸ் ½ கப், கேரட் ½ கப், மஞ்சள்பூசணி ½ கப் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.

இப்போது முட்டைகோஸ் ½ கப், குடைமிளகாய் ½ கப், கத்தரி ½ கப், நறுக்கிய தக்காளி 1 சேர்த்து 10 நிமிடம் வதக்கிக்கொள்ளவும். கடைசியாக தேங்காய் 1 கப் சேர்த்து வதக்கிக் கொள்ளவும். வாசனைக்கு 1 கைப்பிடி கொத்தமல்லி, கருவேப்பிலை சிளிதளவு சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.

இத்துடன் 1 தேக்கரண்டி உப்பு சேர்த்து வதக்கிக் கொள்ளவும். இப்போது அடுப்பிலிருந்து இறக்கி ஆறியதும் மிக்ஸியில் சேர்த்து தண்ணீர் விடாமல் அரைத்து எடுத்துக்கொள்ளவும்.  அவ்வளவுதான் சுவையான வெஜிடபிள் துவையல் தயார். நீங்களும் இந்த ரெசிபியை ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com