‘’சுவையான சத்தான குஜராத்தி தெப்லா’’ செய்வோம் வாங்க!

குஜராத்தி தெப்லா...
குஜராத்தி தெப்லா...

தேவையான பொருட்கள்;

கோதுமை மாவு - ஒரு கப்

சுத்தம் செய்து நறுக்கப்பட்ட வெந்தயக்கீரை- அரை கப்

பெரிய வெங்காயம்-  ஒரு கப் நறுக்கியது

இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு ஸ்பூன்

மல்லித்தூள் - ஒரு ஸ்பூன்

மிளகாய்தூள் -ஒரு ஸ்பூன்

கரம் மசாலா - கால் ஸ்பூன்

மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்

எலுமிச்சைச்சாறு - ஒரு ஸ்பூன்

நறுக்கிய மல்லி இலைகள்- மூன்று ஸ்பூன்

உப்பு தேவையான அளவு

சமையல் எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை;

ரு பாத்திரத்தில் கோதுமை மாவைக் கொட்டி அதில் மஞ்சள்தூள், மிளகாய்தூள், கரம் மசாலா, மல்லித்தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட் மல்லித்தழை, நறுக்கி வைத்த வெங்காயம், வெந்தயக்கீரை இலைகள், உப்பு போட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக பிசையவும். அதில் எலுமிச்சைசாறு ஊற்றி, மென்மையான பதத்திற்கு மாவை தயார் செய்யவும். கடைசியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதை சரியான பதத்தில் ஒரு உருண்டையாக  செய்து, பாத்திரத்தில் வைத்து, ஒரு மெல்லிய வெள்ளைத்துணி கொண்டு மூடி  வைக்கவும்.

அரை மணி நேரம் கழித்து கொஞ்சமாக மாவு எடுத்து கைகளில் வைத்து உருட்டி சப்பாத்தி தேய்க்கும் கட்டையில் சிறிதளவு உலர்ந்த கோதுமை மாவை போட்டு அதன் மேல் இந்த உருண்டையை வைத்து வட்டமாக ரொட்டி பதத்திற்கு உருட்டி எடுக்கவும். எல்லா மாவையும் ரொட்டிகளாக உருட்டி முடித்ததும் அடுப்பில் தோசைக் கல்லை வைத்து நெய் அல்லது எண்ணெய் ஊற்றி ரொட்டியைப் போட்டு,மறுபுறம் திருப்பிப் போட்டு, சுட்டு வெந்ததும் எடுக்கவும்.

இதையும் படியுங்கள்:
எப்போதெல்லாம் நீங்கள் அமைதிக்காக்க வேண்டும் தெரியுமா?
குஜராத்தி தெப்லா...

இதற்கு தொட்டுக்கொள்ள தயிர் மட்டும் போதும். இல்லையென்றால் மாங்காய் ஊறுகாய் கூட சரியான காம்பினேஷனாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com