டேஸ்டியான வாழைத்தண்டு பால் கறி மற்றும் முட்டை ஊறுகாய் செய்யலாம் வாங்க!

delicious banana stem milk curry and pickled eggs!
healthy recipesImage credit - youtube.com
Published on

ன்றைக்கு சுவையான வாழைத்தண்டு பால்கறி மற்றும் முட்டை ஊறுகாய் ரெசிபிஸை வீட்டிலேயே சுலபமாக எப்படி செய்யலாம்னு பார்ப்போம்.

வாழைத்தண்டு பால்கறி செய்ய தேவையான பொருட்கள்:

எண்ணெய்-1 குழிக்கரண்டி.

வாழைத்தண்டு-2கப்.

கடுகு-1 தேக்கரண்டி.

சீரகம்-1 தேக்கரண்டி.

கருவேப்பிலை-சிறிதளவு.

வெங்காயம்-1

பச்சை மிளகாய்-5.

உப்பு-தேவையான அளவு.

பால்-1/4 கப்.

துருவிய தேங்காய்-1கப்.

வாழைத்தண்டு பால் கறி செய்முறை விளக்கம்:

முதலில் அடுப்பில் கடாயை வைத்து 1 குழிக்கரண்டி எண்ணெய் சேர்த்து கடுகு 1 தேக்கரண்டி, சீரகம் 1 தேக்கரண்டி,பச்சை மிளகாய் 5, கருவேப்பிலை சிறிதளவு, நறுக்கிய வெங்காயம் 1 சேர்த்து நன்றாக வதங்கியதும் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் வாழைத்தண்டு 2 கப் சேர்த்துக்கொண்டு தேவையான அளவு உப்பு சேர்த்து  இது வேக தண்ணீர் 1 கப் ஊற்றி 15 நிமிடம் மூடி போட்டு வைத்துவிடவும்.

வாழைத்தண்டு நன்றாக வெந்ததும் அதில் காய்ச்சிய பால் 1/4கப் சேர்த்து அத்துடன் 1 கப் துருவிய தேங்காய் சேர்த்தால் வாழைத்தண்டு பால் கறி தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்கள்.

முட்டை ஊறுகாய் செய்ய தேவையான பொருட்கள்:

முட்டை செய்ய,

முட்டை-10

மஞ்சள் தூள்-1 தேக்கரண்டி.

உப்பு- தேவையான அளவு.

பொடி செய்ய,

வெந்தயம்-2 தேக்கரண்டி.

கடுகு-2 ½ தேக்கரண்டி.

தாளிக்க,

எண்ணெய்-1 குழிக்கரண்டி.

கடுகு-1 தேக்கரண்டி.

உளுந்து-1 தேக்கரண்டி.

பூண்டு-20.

பெருங்காயத்தூள்-1 ½ தேக்கரண்டி.

மிளகாய் தூள்-4 தேக்கரண்டி.

கல் உப்பு-தேவையான அளவு.

புளி கரைச்சல்-1/4 கப்.

இதையும் படியுங்கள்:
ஆரோக்கியமான நெல்லிக்காய் ரசம் - கொய்யா சட்னி செய்யலாமா?
delicious banana stem milk curry and pickled eggs!

முட்டை ஊறுகாய் செய்முறை விளக்கம்:

முதலில் 10 முட்டையை உடைத்து ஒரு பவுலில் எடுத்துக்கொண்டு அதில் 1 தேக்கரண்டி மஞ்சள் தூள்,உப்பு சிளிதளவு சேர்த்து நன்றாக கலந்து விட்டுக்கொள்ளவும்.

இப்போது ஒரு டிபன் பாக்ஸியில் எண்ணெய்யை தடவி முட்டையை அதில் ஊற்றி 10 நிமிடம் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். இப்போது வெந்த முட்டையை பனீர் க்யூப் போல வெட்டி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது கடாயில் 2 தேக்கரண்டி வெந்தயம், 2 ½ தேக்கரண்டி கடுகு சேர்த்து நன்றாக வறுத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இப்போது கடாயில் 1 குழிக்கரண்டி எண்ணெய், கடுகு 1 தேக்கரண்டி, உளுந்து 1 தேக்கரண்டி, சீவி வைத்திருக்கும் 20 பூண்டு, 1 ½ தேக்கரண்டி பெருங்காயத்தூள், 4 தேக்கரண்டி மிளகாய் தூள், தேவையான அளவு கல் உப்பு, புளிக்கரைச்சல் ¼ கப் கலந்துவிட்டு 2 நிமிடம் கொதித்து வந்ததும் வெட்டி வைத்திருக்கும் முட்டையை சேர்த்து அத்துடன் அரைத்து வைத்திருக்கும் பொடியை சேர்த்து பிரட்டினால், சுவையான முட்டை ஊறுகாய் தயார். நீங்களும் இந்த ரெசியியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பாருங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com