செம டேஸ்டான வெற்றிலை பாயாசம் - மலாய் சேன்ட்விச் செய்யலாம் வாங்க!

Vetrilai payasam
Vetrilai payasam and malai sandwich recipesImage Credits: News Lankasri

வெற்றிலையை இருமல், சளி, அஜீரணம், வயிற்றுக் கோளாறு போன்ற பிரச்சனைகளுக்கு எடுத்துக் கொள்ளலாம். இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்க உதவுகிறது. பக்கவாதம், இதயநோய் போன்ற நோய்களையும் சரிசெய்ய உதவுகிறது. இத்தகைய சிறப்புமிக்க வெற்றிலையை வைத்து ஒரு எளிமையான ரெசிபி செய்யலாம் வாங்க.

வெற்றிலை பாயாசம் செய்ய தேவையான பொருட்கள்;

ஜவ்வரிசி-1/2 கப்.

சேமியா -1/4 கப்.

பால்-1 லிட்டர்.

வெல்லம்-1/2 கப்.

உப்பு-1 சிட்டிகை.

நெய்- தேவையான அளவு.

வெற்றிலை-4

முந்திரி-10

திராட்சை-10

வெற்றிலை பாயாசம் செய்முறை விளக்கம்;

ஒரு கடாயில் நெய் 2 தேக்கரண்டி சேர்த்துக் கொள்ளவும். அதில் ஜவ்வரிசி ½ கப் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும். அதே கடாயில் ¼ கப் சேமியாவும் சேர்த்து நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

இப்போது அடுப்பில் ஃபேனை வைத்து 1 லிட்டர் பால் அத்துடன் ½ கப் தண்ணீர் சேர்த்து அதிலேயே வறுத்து வைத்திருக்கும் ஜவ்வரிசி, சேமியாவை சேர்த்து நன்றாக வேக வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் ½ கப் வெல்லம் அது மூழ்கும் வரை தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு வெல்ல நன்றாக கரைந்ததும் வடிக்கட்டி பாயாசத்தில் சேர்த்துவிட்டு அதனுடன் 1 சிட்டிகை உப்பு சேர்த்துவிட்டு நன்றாக கலந்து விட்டு 2 நிமிடம் கழித்து அடுப்பை நிறுத்திவிடவும்.

இப்போது 4 வெற்றிலையை நன்றாக மிக்ஸியில் அரைத்து வடிகட்டி அதை பாயாசத்தில் சேர்த்து நன்றாக கலக்கி விடவும். கடைசியாக ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி அதில் முந்திரி, திராட்சையை பொன்னிறமாக பொரித்து எடுத்து அதையும் பாயாசத்துடன் சேர்த்துக்கொள்ளவும். இப்போது சுவையான வெற்றிலை பாயாசம் தயார். நீங்களும் வீட்டிலே இந்த ரெசிபியை டிரை பண்ணி பார்த்துட்டு சொல்லுங்க.

மலாய் சேன்ட்விச் செய்ய தேவையான பொருட்கள்;

பால்-1 ½ லிட்டர்.

எழுமிச்சை சாறு-3 தேக்கரண்டி.

சக்கரை -1கப்

சேன்ட்விச் செய்ய,

கோவா-150 கிராம்.

ஏலக்காய் தூள்- சிறிதளவு.

பொடியாக நறுக்கிய முந்திரி, பாதாம்- சிறிதளவு.

சக்கரை-4 தேக்கரண்டி

குங்குமப்பூ கலந்த பால்- சிறிதளவு.

குங்குமப்பூ- சிறிதளவு.

இதையும் படியுங்கள்:
சூப்பர் சுவையில் மக்கனா பாயாசம் - வாழைப்பழ தோசை செய்யலாம் வாங்க!
Vetrilai payasam

மலாய் சேன்ட்விச் செய்முறை விளக்கம்;

முதலில் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 ½ லிட்டர் பால் ஊற்றிக் கொள்ளவும். பால் நன்றாக காய்ந்ததும் 3 தேக்கரண்டி எழுமிச்சைசாறு ஊற்றவும். இப்போது ஒரு வெள்ளை துணியில் பாலை நன்றாக வடிக்கட்டி விட்டு நன்றாக பிழிந்து எடுத்துக்கொள்ளவும். பன்னீரை கையால் உதிர்த்து விட்டு 5 நிமிடம் நன்றாக பிசையவும்.

இப்போது சதுர வடிவத்தில் செய்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ளுங்கள். அடுப்பில் ஒரு ஃபேனை வைத்து அதில் 1 கப் சர்க்கரை சேர்த்து அத்துடன் 3 கப் தண்ணீர் சேர்த்து சக்கரை கரையும் வரை கிண்டிவிட்டு இப்போது அதில் செய்து வைத்திருக்கும் பன்னீர் துண்டுகளை சேர்த்து 20 நிமிடம் மூடி வைத்து பிறகு அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.

ஒரு பவுலில் 150 கிராம் கோவாவை உதிர்த்து விட்டு சிறிது ஏலக்காய்தூள், நறுக்கி வைத்த பாதாம், பிஸ்தாவை சேர்த்துக் கொள்ளவும். கடைசியாக 4 தேக்கரண்டி சக்கரை, குங்குமப்பூ ஊறவைத்த பால் சிறிது சேர்த்துக்கொள்ளவும். இதையெல்லாம் நன்றாக பிசைந்து சேன்ட்விச் தயார் செய்து கொள்ளவும்.

இப்போது சர்க்கரை பாகில் ஊறிய மலாயை எடுத்து நடுவிலே சிறிது  வெட்டி செய்து வைத்திருக்கும் கலவையை உள்ளே சேர்க்கவும். கடைசியாக குங்குமப்பூவை இதன் மேலே தூவி பரிமாறவும். அவ்வளவு தான் சுவையான மலாய் சேன்ட்விச் தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே செய்து பார்த்துவிட்டு சொல்லுங்க.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com