சுவையான வெண்ணெய் புட்டு - மொறு மொறு பகோடா செய்யலாம் வாங்க!

Pakkoda - tasty puttu recipes
Pakkoda recipe
Published on

ன்றைக்கு சுவையான வெண்ணெய் புட்டு மற்றும் முட்டை பகோடா சிம்பிளாக எப்படி செய்யறதுன்னு பார்ப்போம்.

வெண்ணெய் புட்டு செய்ய தேவையான பொருட்கள்.

பச்சரிசி-1 கப்.

கடலைப்பருப்பு-1 கப்.

உப்பு-சிறிதளவு.

வெல்லம்-1கப்.

தேங்காய் துருவல்-1கப்.

ஏலக்காய்-4.

வெண்ணெய் புட்டு செய்முறை விளக்கம்.

முதலில் 1 கப் பச்சரிசியில் தண்ணீர் ஊற்றி 1 மணிநேரம் ஊறவைத்து நன்றாக தோசைமாவு பதத்திற்கு அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

கடலைப்பருப்பு 1 கப்பை குக்கரில் 1 விசில் வைத்து வேகவிட்டு எடுத்துக் கொள்ளவும். இப்போது அடுப்பில் கடாயை வைத்து 1கப் தண்ணீர் விட்டு நன்றாக கொதித்து வந்ததும் கடலைப்பருப்பை சேர்த்து சிறிது உப்பு சேர்த்து அரைத்து வைத்திருக்கும் அரிசி மாவு ஊற்றி கட்டியில்லாமல் கலக்கிவிட்டுக் கொள்ளவும்.

இப்போது இதில் 1 கப் வெல்லம், ஏலக்காய் 4, நெய் 1 தேக்கரண்டி, தேங்காய் துருவல் 1 கப் சேர்த்து நன்றாக கலக்கிவிட்டு கெட்டியானதும் இறக்கவும். அவ்வளவு தான் சூப்பர் டேஸ்டான வெண்ணெய் புட்டு தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பாருங்கள்.

முட்டை பகோடா செய்ய தேவையான பொருட்கள்.

முட்டை-3

வெங்காயம்-1

கடலைமாவு-1 தேக்கரண்டி.

கொத்தமல்லி, கருவேப்பிலை-சிறிதளவு.

பச்சை மிளகாய்-2

இஞ்சி-1 துண்டு.

பேக்கிங் பவுடர்-1 சிட்டிகை.

உப்பு-தேவையான அளவு.

மிளகாய் தூள்- 1 தேக்கரண்டி.

மிளகுத்தூள்-1 தேக்கரண்டி.

எண்ணெய்-தேவையான அளவு.

இதையும் படியுங்கள்:
சுவையான ஆவாரம் பூ ரசம்- கத்தரி கிரேவி செய்யலாம் வாங்க!
Pakkoda - tasty puttu recipes

முட்டை பகோடா செய்முறை விளக்கம்.

முதலில் ஒரு பவுலில் 3 முட்டையை உடைத்து எடுத்துக் கொள்ளவும். இதில் 1 தேக்கரண்டி கடலை மாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம் 1, இஞ்சி சிறிதாக நறுக்கியது 1 துண்டு, பச்சை மிளகாய் 2, கருவேப்பிலை கொத்தமல்லி சிறிதளவு சேர்த்து நன்றாக கலந்துக்கொள்ளவும். இதில் 1 சிட்டிகை பேக்கிங் பவுடர், உப்பு சிறிதளவு சேர்த்து நன்றாக கலந்துவிட்டுக் கொள்ளவும்.

இப்போது ஒரு ஃபேனில் எண்ணெய் ஊற்றி நன்றாக காய்ந்ததும், கலக்கி வைத்திருக்கும் மாவை ஊற்றி வெந்ததும் இன்னொரு பக்கத்தை திருப்பிப்போட்டு எடுத்துக்கொள்ளவும். இதன் மீது மிளகாய்தூள் 1 தேக்கரண்டி, மிளகுத்தூள் 1 தேக்கரண்டி தூவி பிரட்டி எடுத்தால் காரசாரமான முட்டை பகோடா தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com