இன்னைக்கு செட்டிநாட்டில் மிகவும் பிரபலமாக செய்யப்படும் புளிமிளகாய் மண்டி மற்றும் உடுப்பி ஸ்பெஷல் குருமா வீட்டிலேயே சுலபமாக எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.
செட்டிநாடு புளிமிளகாய் மண்டி செய்ய தேவையான பொருட்கள்;
பச்சை மிளகாய்-1கப்.
நல்லெண்ணெய்-தேவையான அளவு.
கடுகு-1தேக்கரண்டி.
வெந்தயம்-1 தேக்கரண்டி.
காய்ந்த மிளகாய்-4
கருவேப்பிலை- சிறிதளவு.
பூண்டு-1/4கப்.
சின்ன வெங்காயம்-1/2கப்.
மஞ்சள் தூள்-1/2 தேக்கரண்டி.
பெருங்காயத்தூள்-1 தேக்கரண்டி.
அரிசி தண்ணீர்-2 கப்.
புளி கரைச்சல்-1 கப்.
உப்பு- தேவையான அளவு.
செட்டிநாடு புளிமிளகாய் மண்டி செய்முறை விளக்கம்;
முதலில் பச்சை மிளகாயை நன்றாக அலசி எடுத்துக் கொண்டு அதன் மீது கத்தி வைத்து சின்ன சின்ன ஓட்டை போட்டுக்கொள்ளவும்.
இப்போது அடுப்பில் ஒரு கடாயை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி கடுகு 1 தேக்கரண்டி, வெந்தயம் 1 தேக்கரண்டி, காய்ந்த மிளகாய் 4, கருவேப்பிலை சிறிதளவு, பூண்டு ¼ கப், சின்ன வெங்காயம் ½ கப், பச்சை மிளகாய் 1 கப் சேர்த்துக் கொள்ளவும். இத்துடன் மஞ்சள்தூள் ½ தேக்கரண்டி, பெருங்காயத்தூள் 1 தேக்கரண்டி சேர்த்து வதக்கவும்.
இப்போது தேவையான அளவு உப்பு சேர்த்து அரிசி கழுவிய தண்ணீர் 2 கப் சேர்த்து நன்றாக வேக விடவும். கடைசியாக ஊறவைத்த புளி கரைத்த தண்ணீர் 1கப் சேர்த்து நன்றாக கெட்டியாக வரும் வரை அடுப்பில் வைத்துவிட்டு இறக்கவும். இப்போது புளிமிளகாய் மண்டி தயார். நன்றாக குழைந்த வெள்ளை சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் அல்டிமேட்டாக இருக்கும். நீங்களும் வீட்டில் ஒருமுறை ட்ரை பண்ணிப் பாருங்கள்.
உடுப்பி ஸ்பெஷல் குருமா செய்ய தேவையான பொருட்கள்:
பட்டை-1
கிராம்பு-1
ஏலக்காய்-2
கடலைப்பருப்பு-1 தேக்கரண்டி.
உளுந்து-1 தேக்கரண்டி.
மிளகு-1 தேக்கரண்டி.
முந்திரி-5
வரமிளகாய்-4
தேங்காய்-1கப்.
வெங்காயம்-1
பச்சை மிளகாய்-2
கருவேப்பிலை-சிறிதளவு.
கேரட்-1 கப்.
உருளை-1 கப்.
பீன்ஸ்-1 கப்.
பட்டாணி-1 கப்.
மஞ்சள் தூள்-1/4 தேக்கரண்டி.
மிளகாய் தூள்-1/2 தேக்கரண்டி.
புளி தண்ணீர்-1 தேக்கரண்டி.
கொத்தமல்லி-சிறிதளவு.
உப்பு- தேவையான அளவு.
உடுப்பி ஸ்பெஷல் குருமா செய்முறை விளக்கம்;
முதலில் கடாயில் சிறிது எண்ணெய் சேர்த்துக் கொண்டு பட்டை 1, கிராம்பு 1, ஏலக்காய் 2, கடலைப்பருப்பு 1 தேக்கரண்டி, உளுந்து 1 தேக்கரண்டி, மிளகு 1 தேக்கரண்டி, முந்திரி 5, வரமிளகாய் 4 சேர்த்து வதக்கி எடுத்துக்கொள்ளுங்கள். இப்போது இதை மிக்ஸியில் சேர்த்து அத்துடன் 1 கப் துருவிய தேங்காய் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
இப்போது கடாயில் சிறிது எண்ணெய் சேர்த்துவிட்டு வெட்டி வைத்த வெங்காயம் 1, பச்சை மிளகாய் 2, கருவேப்பிலை சிறிது சேர்த்து வதக்கி விட்டு இத்துடன் பொடியாக நறுக்கிய கேரட் 1 கப், பீன்ஸ் 1கப், உருளை 1 கப், பட்டாணி 1 கப் சேர்த்து கலந்துவிட்டு உப்பு தேவையான அளவு சேர்த்து மூழ்கும்வரை தண்ணீர் ஊற்றி மஞ்சள் பொடி ¼ தேக்கரண்டி, மிளகாய் தூள் ½ தேக்கரண்டி சேர்த்து கலந்துவிட்டு மூடி வேக வைக்கவும். இப்போது காய்கறிகள் நன்றாக வெந்ததும்,அரைத்து வைத்திருக்கும் மசாலா பேஸ்ட்டை இத்துடன் சேர்த்துக்கொள்ளவும். கடைசியாக 1 தேக்கரண்டி புளி தண்ணீர் சேர்த்து கிண்டி விடவும். கடைசியாக கொத்தமல்லி தூவி அடுப்பிலிருந்து இறக்கவும். அவ்வளவு தான் சுவையான உடுப்பி ஸ்டைல் குருமா தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலேயே முயற்சித்துப் பாருங்கள்.