சுவையான குடான்னம் - ரவா பாயசம் செய்யலாம் வாங்க!

Let's make delicious Gudanam-Rava Payasam!
Let's make delicious Gudanam-Rava Payasam!Image Credits: YouTube
நான்சி மலர்

வணக்கம். என் பெயர் நான்சி மலர். என்னைப் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டியதற்கு நன்றி. நான் B.E. Computer science Engineering முடித்துள்ளேன். எனக்கு சிறுவயது முதலே எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு. ‘எழுத்துக்கள் மூலம் நம் எண்ணங்களை எளிதில் வெளிப்படுத்த முடியும்’ என்று நம்புகிறேன். கட்டுரைகள், கவிதைகள் எழுதுவதில் அனுபவம் உண்டு. Content writing துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது. மோட்டிவேஷன், பயணம், ஆரோக்கியம், ஃபேஷன், ஆன்மீகம் போன்ற கட்டுரை எழுதுவதில் ஆர்வம் அதிகம். என்னுடைய எழுத்து வாசகர்களாகிய உங்களை கவர்ந்தால், அது எனக்கு மகிழ்ச்சியே! ‘ இன்னும் எதிர்காலத்தில் உங்கள் மனதில் என் எழுத்துக்கள் மூலம் இடம் பிடிப்பேன்’ என்று முழுமையாக நம்புகிறேன்.

Updated on

ன்றைக்கு மதுரை மீனாட்சியம்மன் கோவில் பிரசாதம் குடான்னம் மற்றும் ரவா பாயாசம் ரெசிபிஸ் எப்படி சுலபமாக வீட்டிலேயே செய்யலாம்னு பார்ப்போம்.

குடான்னம் செய்ய தேவையான பொருட்கள்.

அரிசி-1 ½ கப்.

வெல்லம்-1/2 கிலோ.

உப்பு-1 சிட்டிகை.

ஏலக்காய் தூள்- 1 தேக்கரண்டி.

நெய்-1/2 கப்.

முந்திரி-25.

குடான்னம் செய்முறை விளக்கம்.

முதலில் 1 ½ கப் அரிசியை ஒரு பவுலில் எடுத்துக் கொள்ளவும். அதை நன்றாக தண்ணீரில் கழுவிய பிறகு 1/2 மணிநேரம் ஊற வைத்து வேகவைக்கவும்.

நன்றாக சாதம் தயாரானதும். இன்னொரு பாத்திரத்தில் ½ கிலோ வெல்லம் போட்டு சிறிது தண்ணீர் விட்டு பாகு தயாரானதும் அதை  வேகவைத்து இருக்கும் சாதத்தில் ஊற்றிக் கலந்துக்கொள்ளவும். இப்போது இதில் 1 சிட்டிகை உப்பு, 1 தேக்கரண்டி ஏலக்காய் தூள், சேர்த்து கலந்து விடவும்.

இப்போது கடாயில் ½ கப் நெய் சேர்த்து 25 முந்திரியை பொன்னிறமாக வறுத்து அதில் சேர்த்துக்கொள்ளவும். ருசியான மதுரை மீனாட்சியம்மன் கோவில் பிரசாதமான குடானம் தயார். நீங்களும் இந்த ரெசிபியை ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.

ரவா பாயாசம் செய்ய தேவையான பொருட்கள்.

நெய்-3 தேக்கரண்டி.

முந்திரி-10

ரவா-1/4 கப்.

பால்-1/2 லிட்டர்.

ஏலக்காய் தூள்-1/2 தேக்கரண்டி.

சர்க்கரை-1/4 கப்.

குங்குமப்பூ-சிறிதளவு.

இதையும் படியுங்கள்:
மொறு மொறு பீட்ரூட் சிப்ஸ்- சோமாஸ் செய்யலாமா?
Let's make delicious Gudanam-Rava Payasam!

ரவா பாயசம் செய்முறை விளக்கம்.

முதலில் கடாயில் 3 தேக்கரண்டி நெய் சேர்த்து முந்திரி 10 பொன்னிறாமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும். இப்போது அதே கடாயில் ரவா ¼ கப் சேர்த்து வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.

இப்போது கடாயில் பால் ½ லிட்டர் சேர்த்து நன்றாக கொதித்ததும் அதில் ஏலக்காய் தூள்  ½ தேக்கரண்டி அத்துடன் வறுத்து வைத்திருக்கும் ரவையை சேர்த்து பாதி வெந்ததும் ¼ கப் சர்க்கரை சேர்த்து ரவா வெந்த பிறகு குங்குமப்பூ சிறிதளவு சேர்த்துவிட்டு கடைசியாக வறுத்த முந்திரியை சேர்த்து கிண்டி இறக்கவும். சுவையான ரவா பாயாசம் தயார். நீங்களும் வீட்டில் ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.

logo
Kalki Online
kalkionline.com