செம டேஸ்டான தேங்காய்ப் பால் குணுக்கு மற்றும் பழம் நிரச்சது செய்யலாம் வாங்க!

தேங்காய்ப் பால் குணுக்கு...
தேங்காய்ப் பால் குணுக்கு...Image creditp - pixabay.com

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் தேங்காய் பால் குணுக்கு மற்றும் கேரளா ஸ்பெஷல் ஸ்நாக்ஸ் பழம் நிரச்சது ஆகியவற்றை எப்படி சுலபமாக செய்யலாம்னு பாக்கலாம் வாங்க.

தேங்காய் பால் குணுக்கு செய்ய தேவையான பொருட்கள்:

துருவிய தேங்காய்-1 மூடி.

ஏலக்காய்-2

வெல்லம்-1கப்.

வெள்ளை உளுந்து-100 கிராம்.

பச்சரிசி-1 தேக்கரண்டி.

உப்பு-தேவையான அளவு.

எண்ணெய்- தேவையான அளவு.

தேங்காய் பால் குணுக்கு செய்முறை விளக்கம்:

முதலில் ஒரு மூடி துருவிய தேங்காயை மிக்ஸியில் 1 டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாக அரைத்து எடுத்து கொள்ளவும். இப்போது தேங்காய் பாலை மட்டும் வடிகட்டி தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.100 கிராம் வெள்ளை உளுந்து மற்றும் 1 தேக்கரண்டி பச்சரிசியையும் 2 மணி நேரம் ஊற வைத்து எடுத்துக்கொள்ளவும். இத்துடன் சிறிது உப்பு சேர்த்து இதையும் இப்போது மிக்ஸியில் போட்டு கெட்டியாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். இப்போது தேங்காய் பாலில் 1 கப் வெல்லம், 2 ஏலக்காய் சேர்த்து கலக்கி விட்டு மூடி வைக்கவும்.

இப்போது அடுப்பில் எண்ணெய்யை நன்றாக காயவிட்டு அரைத்து வைத்திருக்கும் மாவை சிறு சிறு உருண்டை களாக போட்டு எடுக்கவும். இதை ரொம்ப வேகவிடாமல், பாதி வெந்தும் வேகாமலும் எடுத்தால் தேங்காய் பாலில் நன்றாக ஊறும். இப்போது செய்து வைத்திருக்கும் துணுக்கை தேங்காய் பாலில் போட்டு ஊறவைத்து சாப்பிட்டால் சூப்பர் டேஸ்டாக இருக்கும். நீங்களும் வீட்டில் ஒருமுறை முயற்சித்து பாருங்கள்.

பழம் நிரச்சது செய்ய தேவையான பொருட்கள்:

நேந்திரம் பழம்-2

துருவிய தேங்காய்-1 கப்.

நெய்- தேவையான அளவு.

உப்பு- தேவையான அளவு.

சக்கரை-2 தேக்கரண்டி.

ஏலக்காய் தூள்-1 தேக்கரண்டி.

முந்திரி-10.

திராட்சை-10.

மைதா மாவு-2 தேக்கரண்டி.

உப்பு- 1 சிட்டிகை.

பழம் நிரச்சது செய்முறை விளக்கம்:

முதலில் ஒரு ஃபேனில் 1 தேக்கரண்டி நெய் விட்டு 10 முந்திரி, 10 திராட்சையை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ளவும். இப்போது அதில்1 கப் துருவிய தேங்காய் சேர்த்து தேங்காயில் உள்ள ஈரப்பதம் போகும் வரை நன்றாக வதக்கவும். ஏலக்காய் தூள் 2 தேக்கரண்டி, சக்கரை 2 தேக்கரண்டி சேர்த்து கொள்ளவும். இப்போது இதை அடுப்பிலிருந்து இறக்கி வைத்துவிடவும்.

இதையும் படியுங்கள்:
டேஸ்டான ‘ மடக்கு ஸ்வீட் பூரி மற்றும் பிரெட் சமோசா’ செய்யலாம் வாங்க!
தேங்காய்ப் பால் குணுக்கு...

இரண்டு நேந்திரம் வாழைப்பழம் எடுத்து தோலை உரித்து விட்டு வாழைப்பழத்தில் நடுவே கீரி அதனுள் செய்து வைத்திருக்கும் கலவையை உள்ளே வைக்க வேண்டும். நன்றாக அழுத்தி உள்ளே நிரப்பிய பிறகு மேலே மூடுவதற்காக ஒரு பவுலில் மைதா மாவு 2 தேக்கரண்டி எடுத்து கொண்டு, 1 சிட்டிகை உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து அதை வாழைப்பழம் மீது நன்றாக அந்த பேஸ்ட்டை போட்டுவிட்டவும். இப்போது அடுப்பில் ஃபேனை வைத்து அதில் 4 தேக்கரண்டி நெய் சேர்த்து பழத்தை நன்றாக பொன்னிறமாக இரண்டு பக்கமும் பொரித்தெடுக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். கேரளா பக்கம் இது மிகவும் பிரபலமான மாலை நேர ஸ்நாக்ஸாகும். நீங்களும் வீட்டில் ஒருமுறை டிரை பண்ணி பார்த்துட்டு சொல்லுங்க.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com