சுவையான குஜராத்தி பிண்டா பட்டடா சப்ஜி செய்து அசத்தலாம் வாங்க!!

gujarath special recieps...
healthy recipesImage credit - youtube.com
Published on

குஜராத் மாநில மக்களின் பிரியமான உணவு பிண்டா பட்டடா சப்ஜி. அதாவது தமிழில் "வெண்டைகாய்-உருளைக் கிழங்கு கிரேவி" எனப்படும். இதை சப்பாத்தியுடனோ சாதத்துடனோ சேர்த்து உண்ண சுவைக்கு அளவே கிடையாது. இதைத் தயாரிப்பது எப்படி என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்:

1. கால் கிலோ வெண்டைக்காய் 

2. கால் கிலோ உருளைக்கிழங்கு 

3. 4 டேபிள்ஸ்பூன் சமையல் எண்ணெய் 

4. 1 டீஸ்பூன் கடுகு 

5.  2 டேபிள் ஸ்பூன் நசுக்கிய கொத்தமல்லி விதை

6.  1 டேபிள் ஸ்பூன் நசுக்கிய சீரகம்

7.  கறிவேப்பிலை 

8.  1 டீஸ்பூன் பச்சை மிளகாய் பேஸ்ட் 

9.  1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் 

10. ½ டீஸ்பூன் மஞ்சள் தூள் 

11. 1 டீஸ்பூன் தனியா பவுடர் 

12. 1 டீஸ்பூன் சிவப்பு மிளகாய் தூள் 

13. ½ டீஸ்பூன் கரம் மசாலா பவுடர் 

14. 3 டேபிள் ஸ்பூன் வறுத்த கடலை மாவு 

15. 1 டீஸ்பூன் லெமன் ஜூஸ் 

16. உப்பு தேவையான அளவு 

17. அலங்கரிக்க மல்லித் தழை 

செய்முறை:

வெண்டைக்காய் மற்றும் உருளைக் கிழங்குகளை நன்கு கழுவி துடைத்து இரண்டு இன்ச் துண்டுகளாக வெட்டவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி வெண்டைக்காய்களைப் போட்டு மீடியம் தீயில் பொன் நிறமாகும் வரை பொரித்து எடுக்கவும். அதே கடாயில்    மீதமுள்ள எண்ணெய்யை ஊற்றி காய்ந்ததும் கடுகு, நசுக்கிய சீரகம், மல்லி விதை, கறிவேப்பிலை சேர்த்து நன்கு கிண்டவும். பின் அதனுடன் உருளைக்கிழங்கு துண்டுகளை சேர்த்து கொஞ்சம் தண்ணீர் ஊற்றி ஒரு தட்டு போட்டு மூடி சிறு தீயில் வேக விடவும். பின் அத்துடன் பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து கலந்துவிடவும்.

இதையும் படியுங்கள்:
லெமன் ஜூஸ் குடிக்கும்போது நாம் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
gujarath special recieps...

அதில் பொரித்த வெண்டைக்காய் துண்டுகள், மிளகாய்தூள், தனியாதூள், கரம் மசாலாதூள், மஞ்சள் தூள், உப்பு ஆகியவைகளை சேர்க்கவும். கடலைமாவில் தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்துக்கு கட்டி இல்லாமல் கரைத்து கடாயில் உள்ள கலவையில் ஊற்றவும். அனைத்தையும் ஒன்றோடொன்று சேர்ந்து வரும்படி கிளறி சிறு தீயில் மூன்று நிமிடங்கள் வைத்திருக்கவும். பின் கீழே இறக்கி லெமன் ஜூஸ், நறுக்கிய மல்லித்தழை சேர்க்கவும். சுவையான பிண்டா பட்டடா சப்ஜி தயார்!!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com