டேஸ்டியான உருளை பாப்கார்ன்- காலிஃபிளவர் சமோசா செய்யலாம் வாங்க!
இன்றைக்கு சுவையான உருளை பாப்கார்ன் மற்றும் காலிஃபிளவர் சமோசா ரெசிபிஸை சிம்பிளாக வீட்டிலேயே எப்படி செய்யறதுன்னு பார்ப்போம்.
உருளை பாப்கார்ன் செய்ய தேவையான பொருட்கள்.
உருளை-2
உப்பு-சிறிதளவு.
சோளமாவு-2 தேக்கரண்டி.
இஞ்சி பூண்டு பேஸ்ட்-1 தேக்கரண்டி.
மிளகுதூள்-1 தேக்கரண்டி.
எண்ணெய்-தேவையான அளவு.
உருளை பாப்கார்ன் செய்முறை விளக்கம்.
முதலில் 2 உருளைக்கிழங்கை எடுத்துக்கொண்டு தோலை சீவி விட்டு நன்றாக துருவி எடுத்துக்கொள்ளவும். இப்போது இதை தண்ணீரில் சேர்த்து நன்றாக அலசிவிட்டு பிழிந்து தண்ணீர் இல்லாமல் எடுத்து பவுலில் மாற்றிக் கொள்ளவும்.
உப்பு சிறிதளவு, மிளகு தூள் 1 தேக்கரண்டி, இஞ்சி பூண்டு பேஸ்ட் 1 தேக்கரண்டி சேர்த்து கலந்துவிட்டு சோளமாவு 2 தேக்கரண்டி சேர்த்து நன்றாக பிசைந்துக்கொள்ளவும். இப்போது இதை சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி 10 நிமிடம் வைக்கவும்.
இப்போது கடாயில் எண்ணெய் ஊற்றி காய வைத்து அதில் இந்த சின்ன உருண்டைகளை சேர்த்து நன்றாக பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும். அவ்வளவுதான் சுவையான உருளை பாப்கார்ன் தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.
காலிஃபிளவர் சமோசா செய்ய தேவையான பொருட்கள்.
வெங்காயம்-1
காலிஃபிளவர்-1 கப்.
இஞ்சிபூண்டு பேஸ்ட்-1 தேக்கரண்டி.
மஞ்சள் தூள்-1/4 தேக்கரண்டி.
மிளகாய் தூள்-1/2 தேக்கரண்டி.
மல்லித்தூள்-1/2 தேக்கரண்டி.
மிளகுத்தூள்-1/2 தேக்கரண்டி.
கரம் மசாலா-1/2 தேக்கரண்டி.
சீரகத்தூள்-1/4 தேக்கரண்டி.
வேக வைத்த உருளை-1
கொத்தமல்லி-சிறிதளவு.
உப்பு-தேவையான அளவு.
மைதா-1 கப்.
எண்ணெய்-தேவையான அளவு.
காலிஃபிளவர் சமோசா செய்முறை விளக்கம்.
முதலில் கடாயில் எண்ணெய் சிறிது சேர்த்து பொடியாக நறுக்கிய வெங்காயம் 1, காலிஃபிளவர் பொடியாக நறுக்கியது 1 கப் சேர்த்து வதக்கிவிட்டு இஞ்சி பூண்டு பேஸ்ட் 1 தேக்கரண்டி சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கிவிட்டு மஞ்சள் தூள் ¼ தேக்கரண்டி, மிளகாய் தூள் ½ தேக்கரண்டி, மல்லித்தூள் ½ தேக்கரண்டி, மிளகு தூள் ½ தேக்கரண்டி, கரம் மசாலா ½ தேக்கரண்டி, சீரகத்தூள் ¼ தேக்கரண்டி சேர்த்து வதத்கிவிட்டு வேகவைத்த உருளை 1 சேர்த்து கலந்துவிட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து கொத்தமல்லி சிறிதளவு சேர்த்து நன்றாக கலந்து வைத்துக்கொள்ளவும்.
இப்போது பவுலில் மைதா 1 கப், எண்ணெய் சிறிதளவு, தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்துவிட்டு பிசைந்துக் கொள்ளவும். இப்போது சப்பாத்தி போன்று திரட்டிக் கொண்டு மசாலாவை உள்ளே வைத்து மடித்து எண்ணெய்யில் பொன்னிறமாக பொரித்து எடுத்தால் சுவையான காலிஃபிளவர் சமோசா தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டில் ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்கள்.