
இன்றைக்கு சுவையான ஈவ்னிங் ஸ்நாக்ஸ் ரவை பணியாரம் மற்றும் வெண்டைக்காய் சில்லி ரெசிபிஸை சுலபமாக வீட்டிலேயே எப்படி செய்யறதுன்னு பார்ப்போம்.
ரவை பணியாரம் செய்ய தேவையான பொருட்கள்.
ரவை-1 கப்.
மைதா-1 கப்.
அரிசி மாவு-1 கப்.
துருவிய தேங்காய்-1 கப்.
சர்க்கரை-1 கப்.
உப்பு-1 சிட்டிகை.
பேக்கிங் பவுடர்-1/2 தேக்கரண்டி.
ஏலக்காய் தூள்-1 தேக்கரண்டி.
எண்ணெய்-தேவையான அளவு.
ரவை பணியாரம் செய்முறை விளக்கம்.
முதலில் பவுலில் ரவை 1 கப், மைதா 1 கப், அரிசி மாவு 1 கப், சர்க்கரை 1 கப், துருவிய தேங்காய் 1 கப், உப்பு 1 சிட்டிகை, பேக்கிங் பவுடர் ½ தேக்கரண்டி, ஏலக்காய் தூள் 1 தேக்கரண்டி சேர்த்து நன்றாக கலந்து விட்டு கால் மணி நேரம் ஊறவிட வேண்டும். பிறகு தண்ணீர் ஊற்றி இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக்கொள்ள வேண்டும்.
இப்போது ஒரு கடாயில் எண்ணெய்யை காய வைத்து அதில் மாவை சிறிது சிறிதாக ஊற்றி நன்றாக பொன்னிறமாக பணியாரம் பொரிந்து வந்ததும் எடுத்து பரிமாறவும். அவ்வளவு தான் சுவையான ரவை பணியாரம் தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.
வெண்டைக்காய் சில்லி செய்ய தேவையான பொருட்கள்.
வெண்டைக்காய்-5
எழுமிச்சை சாறு-1/2 மூடி.
மஞ்சள் தூள்-1/4 தேக்கரண்டி.
கரம் மசாலா-1/2 தேக்கரண்டி.
மிளகாய் தூள்-1 தேக்கரண்டி.
அரிசி மாவு-1 தேக்கரண்டி.
கடலை மாவு-3 தேக்கரண்டி.
உப்பு-தேவையான அளவு.
எண்ணெய்-தேவையான அளவு.
வெண்டைக்காய் சில்லி செய்முறை விளக்கம்.
முதலில் வெண்டைக்காய் 5 எடுத்து நீளநீளமாக வெட்டி எடுத்துக்கொக்ளவும். இதில் எழுமிச்சை பழ சாறு பாதி மூடி பிழிந்துவிட்டுக் கொள்ளவும். இப்போது இதில் ¼ தேக்கரண்டி மஞ்சள் தூள், ½ தேக்கரண்டி கரம் மசாலா, 1 தேக்கரண்டி மிளகாய் தூள், உப்பு தேவையான அளவு, அரிசி மாவு 1 தேக்கரண்டி, கடலை மாவு 3 தேக்கரண்டி சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு நன்றாக பிசைந்துக் கொள்ளவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் செய்து வைத்திருக்கும் வெண்டைக்காயை சிறிது சிறிதாக போட்டு பொரித்து எடுத்து பரிமாறவும். இது ஈவ்னிங் ஸ்நாக்ஸ்க்கு பெஸ்டான டிஷ் என்று சொல்லலாம். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டில் ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.