
இன்றைக்கு சுவையான வாழைத்தண்டு சட்னி மற்றும் பீட்ரூட் சட்னி ரெசிபிஸை வீட்டிலேயே சிம்பிளாக எப்படி செய்யறதுன்னு பார்ப்போம்.
வாழைத்தண்டு சட்னி செய்ய தேவையான பொருட்கள்.
கடலெண்ணெய்- 2 தேக்கரண்டி.
வேர்க்கடலை-1 தேக்கரண்டி.
தனியா-1 தேக்கரண்டி.
பொட்டுக்கடலை-1 தேக்கரண்டி.
சின்ன வெங்காயம்-10
பச்சை மிளகாய்-4
வாழைத்தண்டு-1 கப்.
கொத்தமல்லி-சிறிதளவு.
துருவிய தேங்காய்-1/2 கப்.
உப்பு-தேவையான அளவு.
புளி-எழுமிச்சை பழ அளவு.
தாளிக்க,
காய்ந்த மிளகாய்-4
கடுகு-1 தேக்கரண்டி.
உளுத்தம் பருப்பு-1 தேக்கரண்டி.
கருவேப்பிலை-சிறிதளவு.
பெருங்காயத்தூள்-1 தேக்கரண்டி.
வாழைத்தண்டு சட்னி செய்முறை விளக்கம்.
முதலில் 1 வாழைத்தண்டை சிறிதாக நறுக்கி தண்ணீரில் கழுவி எடுத்துக்கொள்ளவும். கடாயில் 1 தேக்கரண்டி வேர்க்கடலை, தனியா 1 தேக்கரண்டி, பொட்டுக்கடலை 1 தேக்கரண்டி நன்றாக வறுத்து மிக்ஸியில் அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
இப்போது கடாயில் கடலெண்ணெய் 1 தேக்கரண்டி, சின்ன வெங்காயம் 10, பச்சை மிளகாய் 4, நறுக்கி வைத்திருக்கும் வாழைத்தண்டு 1 கப், கொத்தமல்லி சிறிதளவு, துருவிய தேங்காய் ½ கப், தேவையான அளவு உப்பு, எழுமிச்சை பழ அளவு புளி சேர்த்து நன்றாக வதக்கவும். இதை மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் பவுடருடன் சேர்த்து நன்றாக அரைக்கவும்.
இப்போது தாளிக்க கடாயில் 1 தேக்கரண்டி கடலெண்ணெய், காய்ந்த மிளகாய் 4, கடுகு 1 தேக்கரண்டி, உளுத்தம் பருப்பு 1 தேக்கரண்டி, கருவேப்பிலை சிறிதளவு, பெருங்காயத்தூள் 1 தேக்கரண்டி சேர்த்து வதக்கி சட்னி மீது ஊற்றி கலந்துவிடவும். அவ்வளவுதான் சுவையான வாழைத்தண்டு சட்னி தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.
பீட்ரூட் சட்னி செய்ய தேவையான பொருட்கள்.
பீட்ரூட்-1
பச்சை மிளகாய்-4
புதினா இலை-சிறிதளவு.
சீரகம்-1 தேக்கரண்டி.
உப்பு-தேவையான அளவு.
எழுமிச்சை சாறு-சிறிதளவு.
தேங்காய்-1/4 கப்.
தாளிக்க,
எண்ணெய்-1 தேக்கரண்டி.
கடுகு-1 தேக்கரண்டி.
உளுந்து-1 தேக்கரண்டி.
வரமிளகாய்-4
கருவேப்பிலை-சிறிதளவு.
பீட்ரூட் சட்னி செய்முறை விளக்கம்.
முதலில் பீட்ரூட் 1 சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். இதை மிக்ஸியில் சேர்த்து அத்துடன் பச்சை மிளகாய் 4, புதினா இலை சிறிதளவு, சீரகம் 1 தேக்கரண்டி, உப்பு தேவையான அளவு, எழுமிச்சை சாறு சிறிதளவு, தேங்காய் ¼ கப் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவும்.
இப்போது தாளிக்க, எண்ணெய் 1 தேக்கரண்டி, கடுகு 1 தேக்கரண்டி, உளுந்து 1 தேக்கரண்டி, வரமிளகாய் 4, கருவேப்பிலை சிறிதளவு சேர்த்து வதக்கி இதில் சேர்த்துக் கலந்து விடவும். அவ்வளவுதான் சுவையான பீட்ரூட் சட்னி தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.