இன்றைக்கு தீபாவளி ஸ்பெஷல் ரெசிபிஸ் ரசமலாய் மற்றும் ரசகுல்லா எப்படி சிம்பிளாக வீட்டிலேயே செய்வது என்று பார்ப்போம்.
ரசமலாய் செய்ய தேவையான பொருட்கள்.
பால்-1 லிட்டர்.
எழுமிச்சைப்பழ சாறு-2 பழம்.
சர்க்கரை-2கப்.
தண்ணீர்-2 ½ கப்.
ரசமிலாய் செய்ய,
பால்-1/2 கப்.
குங்குமப்பூ-2 சிட்டிகை.
சர்க்கரை-1/4 கப்.
ரோஸ் வாட்டர்-2 சொட்டுகள்.
ஏலக்காய் தூள்-1 தேக்கரண்டி.
நறுக்கிய முந்திரி, பாதாம், பிஸ்தா- தேவையான அளவு.
ரசமலாய் செய்முறை விளக்கம்.
முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில் 1 லிட்டர் திக்கான பாலை காய்ச்சிக்கொள்ளவும். பால் பொங்கி 5 நிமிடம் அடுப்பை சிம்மில் வைத்து பாலை சுண்ட வைத்துக் கொள்ளுங்கள்.
இப்போது 2 எழுமிச்சைப்பழ சாறை சேர்த்துக்கொள்ளவும். பால் திரிந்ததும் ஒரு வெள்ளை துணியில் ஊற்றி வடிகட்டிக்கொள்ளவும். இரண்டு முறை நல்ல தண்ணீர் ஊற்றி அலசிக்கொள்ளவும். அப்போதுதான் எழுமிச்சை சாற்றுடைய வாசம் போகும். நன்றாக அழுத்தி பிழிந்துவிட்டு 5 நிமிடம் வைத்துவிட்டு பிறகு எடுத்து நன்றாக மிருதுவாக பிசைந்துக்கொள்ளவும். இப்போது சின்ன சின்ன பட்டன் வடிவத்தில் செய்துக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் 2 கப் சர்க்கரைக்கு 2 ½ கப் தண்ணீர் ஊற்றி நன்றாக சர்க்கரை கரைந்து பிசுபிசுப்பு வந்தால் போதும் உருட்டி வைத்த உருண்டைகளை எடுத்து பாகில் போட்டு 5 நிமிடம் மூடிவைத்து விடவும்.
இப்போது திறந்து பார்க்கும்போது சற்று பெரிதாக இருக்கும். அதை எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். அடுப்பில் திக்காக காய்ச்சிய ½ லிட்டர் பால், 2 சிட்டிகை குங்குமப்பூ, ¼ கப் சர்க்கரை, 1 தேக்கரண்டி ஏலக்காய் தூள், 2 சொட்டு ரோஸ் வாட்டர், இதனுடன் பாதம், பிஸ்தா, முந்திரி நறுக்கியது தேவைக்கேற்ப சேர்த்துக்கொள்ளவும்.
பால் நன்றாக திக்காகி கலர் மாறியதும் நாம் ரெடிப் பண்ணி வைத்திருந்த உருண்டைகளில் ஊற்றிவிடுங்கள். அவ்வளவுதான் டேஸ்டியான ரசமல்லாய் தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பாருங்கள்.
ரசகுல்லா செய்ய தேவையான பொருட்கள்.
பால்-1 ½ லிட்டர்.
எழுமிச்சைப்பழ சாறு-1 பழம்.
சோளமாவு-1 தேக்கரண்டி.
சர்க்கரை-2 கப்.
தண்ணீர்-2 கப்.
குங்குமப்பூ-1 சிட்டிகை.
ரோஸ் வாட்டர்-1 தேக்கரண்டி.
ரசகுல்லா செய்முறை விளக்கம்.
முதலில் ஒரு பாத்திரத்தில் 1 ½ லிட்டர் பாலை நன்றாக சுண்ட காய்ச்சிக்கொள்ளவும். இப்போது அதில் 1 எழுமிச்சைப்பழ சாறை சேர்த்து திரிய விடவும். பால் திரிந்ததும் ஒரு வெள்ளை துணியில் வடிகட்டி நன்றாக பிழிந்து 5 நிமிடம் வைத்துவிடவும்.
இப்போது பன்னீரை எடுத்து அத்துடன் 1 தேக்கரண்டி சோளமாவை சேர்த்து நன்றாக மிருதுவாகும் வரை பிசையவும். இப்போது அதை குட்டி குட்டி உருண்டைகளாக உருட்டி வைத்துக்கொள்ளவும்
அடுப்பில் பாத்திரம் வைத்து 2 கப் சர்க்கரை, 2 கப் தண்ணீர் விட்டு சர்க்கரை கரைந்து பிசுபிசுப்பாக ஆனதும் உருட்டி வைத்திருக்கும் உருண்டைகளை அதில் போடவும். இத்துடன் குங்குமப்பூ 1 சிட்டிகை, ரோஸ் வாட்டர் 1 தேக்கரண்டி சேர்த்து 10 நிமிடம் வேகவைத்து எடுத்தால் சுவையான ரசகுல்லா தயார். நீங்களும் இந்த தீபாவளிக்கு இந்த ரெசிபியை ட்ரை பண்ணிப் பாருங்கள்.