இன்றைக்கு தீபாவளி ஸ்பெஷல் ரெசிபிஸ் ரவா லட்டு மற்றும் ஓலை பகோடாவை சிம்பிளாக வீட்டிலேயே எப்படி செய்யலாம்னு பார்ப்போம்.
ரவா லட்டு செய்ய தேவையான பொருட்கள்;
நெய்-1/4 கப்.
முந்திரி-10
திராட்சை-10
ரவா-1கப்.
சர்க்கரை-1 கப்.
துருவிய தேங்காய்-1/4 கப்.
ஏலக்காய் பொடி-1 தேக்கரண்டி.
ரவா லட்டு செய்முறை விளக்கம்;
முதலில் கடாயில் ¼ கப் நெய் சேர்த்துக்கொள்ளவும். நெய் சூடானதும் முந்திரி 10, திராட்சை 10 சேர்த்து நன்றாக பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
இப்போது அதே நெய்யில் 1 கப் ரவையை சேர்த்து நன்றாக வறுத்துக்கொள்ளவும். சர்க்கரை 1 கப்பை நன்றாக மிக்ஸியில் அரைத்து பொடியாக சேர்த்து நன்றாக கலந்துவிட்டுக் கொள்ளவும்.
இப்போது இத்துடன் ¼ கப் தேங்காய் துருவலை சேர்த்து கலந்துவிட்ட பின் வறுத்து வைத்திருந்த முந்திரி, திராட்சையை சேர்த்து கிளறிவிடவும். கடைசியாக, ஏலக்காய் பொடி 1 தேக்கரண்டி சேர்த்து கலந்துவிட்டு உருண்டை பிடித்துக்கொள்ளவும். அவ்வளவு தான் சுவையான ரவா லட்டு தயார். நீங்களும் தீபாவளிக்கு இந்த சிம்பிள் ரெசிபியை ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.
ஓலை பகோடா செய்ய தேவையான பொருட்கள்;
அரிசி மாவு-1 கப்.
கடலை மாவு-1/4 கப்.
பொட்டுக்கடலை மாவு-4 தேக்கரண்டி.
மிளகாய் தூள்-1 தேக்கரண்டி.
உப்பு-1/2 தேக்கரண்டி.
பெருங்காயத்தூள்-1/2 தேக்கரண்டி.
வெண்ணெய்-1 தேக்கரண்டி.
எள்ளு-1 தேக்கரண்டி.
எண்ணெய்-தேவையான அளவு.
ஓலை பகோடா செய்முறை விளக்கம்.
முதிலில் ஒரு பவுலில் 1 கப் அரிசி மாவு, ¼ கப் கடலை மாவு, 4 தேக்கரண்டி பொட்டுக்கடலை மாவு இதனுடன் 1 தேக்கரண்டி மிளகாய் தூள், ½ தேக்கரண்டி பெருங்காயத்தூள், ½ தேக்கரண்டி உப்பு, 1 தேக்கரண்டி வெண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து விடவும். இத்துடன் 1 தேக்கரண்டி எள்ளு சேர்த்து நன்றாக கலந்துவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி மிருதுவாக பிசைந்துக்கொள்ளவும்.
மாவு கையில் ஒட்டினால் அதுதான் சரியான பதம். ஒரு 15 நிமிடம் மாவை ஊற வைத்து விட்டு முறுக்கு அச்சில் ஓலை பகோடா அச்சை வைத்து மாவை உருட்டி உள்ளே வைத்து சூடான எண்ணெய்யில் பிழிந்து விடவும். இதை திருப்பிப் போட வேண்டிய அவசியமில்லை. எண்ணெயினுடைய சலசலப்பு குறைந்ததும் எடுத்து விடலாம். அவ்வளவுதான் டேஸ்டியான ஓலை பகோடா தயார். நீங்களும் தீபாவளிக்கு இந்த சிம்பிள் ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பாருங்கள்.