பச்சைப் பயறு இனிப்பு சுண்டலும், புளி இஞ்சியும் செய்வோம் வாங்க!

சுண்டலும், புளி இஞ்சியும் ...
சுண்டலும், புளி இஞ்சியும் ...Image credit - youtube.com
Published on

புரதச்சத்து நிறைந்த பாசிப்பயறில் விட்டமின்களும், கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்தும் நிறைந்துள்ளது. ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பச்சைப் பயறைக்கொண்டு இனிப்பு சுண்டல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பச்சைப்பயிறு இனிப்பு சுண்டல்: 

பச்சைபயிறு 200 கிராம் 

வெல்லம் 150 கிராம் 

ஏலக்காய் 4 

தேங்காய் துருவல் அரை கப் 

உப்பு ஒரு சிட்டிகை 

பச்சை பயறை இருமுறை நன்கு கழுவி முங்கும் அளவு தண்ணீர் விட்டு குக்கரில் நான்கு விசில் விட்டு எடுக்கவும். வெல்லத்தை பொடித்து வாணலியில் அரை கப் தண்ணீர் விட்டு வெல்லத்தையும் சேர்த்து வெல்லம் கரைந்ததும் வடிகட்டி திரும்பவும்  வாணலியில் விட்டு கொதிக்க விடவும். ஏலக்காயை பொடித்து வைக்கவும். வெந்த பச்சை பயறை சிறிது கரண்டியால் மசித்துக்கொண்டு வெல்லக் கரைசலில் சேர்த்து கலந்து கிளறவும். அடுப்பை நிதானமான தீயில் வைத்து கிளறவும். நன்கு சேர்ந்து வரும்போது பொடித்த ஏலக்காய், தேங்காய் துருவல் சேர்த்து இறக்க ருசியான பச்சை பயறு இனிப்பு சுண்டல் ரெடி.

புளி இஞ்சி:

இஞ்சி புளி, இஞ்சி கறி, புளி இஞ்சி என வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டாலும் இதன் ருசியை அடித்துக் கொள்ள ஆள் கிடையாது. புளிப்பு, இனிப்பு, காரம் உள்ள கேரள ரெசிபி இது. பசியை தூண்டக் கூடியது.

இஞ்சி நறுக்கியது ஒரு கப் 

புளி எலுமிச்சை அளவு 

பச்சை மிளகாய் 2 

மிளகாய் தூள் 1 ஸ்பூன் 

மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன் 

வெல்லம் எலுமிச்சை அளவு கருவேப்பிலை சிறிது

உப்பு தேவையானது

இதையும் படியுங்கள்:
நீங்கள் உங்கள் பணியில் சிறக்கவேண்டுமா? அப்போ இது உங்களுக்குத்தான்!
சுண்டலும், புளி இஞ்சியும் ...

இஞ்சியை தோல் நீக்கி பொடியாக அரிந்து கொள்ளவும்‌. பச்சை மிளகாயை நீளமாக கீறி வைக்கவும். வாணலியில் கடுகு போட்டு நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் தாளித்து பொடியாக நறுக்கிய இஞ்சி, கீறிய பச்சை மிளகாய், உப்பு , மஞ்சள் தூள், சிறிது கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். அதில் எலுமிச்சை அளவு உள்ள புளியை கரைத்துவிட்டு காரப்பொடி அரை ஸ்பூன் சேர்த்து கொதிக்கவிடவும். புளி வாசனை போனதும் வெல்லம் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும் மிகவும் ருசியான இஞ்சி கறி தயார்.

இதனை இட்லி, தோசை, பூரி, பொங்கல், தயிர் சாதம் என அனைத்திற்கும் தொட்டுக்கொள்ளலாம். இஞ்சியில் விட்டமின் ஏ, விட்டமின் டி, இரும்புச்சத்து, கால்சியம் போன்ற சத்துக்கள் அதிகளவில் உள்ளது. தலைவலி, உடல் சோர்வு, குமட்டல், வாந்தி வருவதை தடுக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com