அல்டிமேட் சுவையில் நாவல்பழ அல்வா- ப்ளம் கேக் செய்யலாம் வாங்க!

Jamun halwa
Jamun halwa and plum cake recipesImage Credits: Cupcakeree
Published on

நாவல்பழம் ரத்தத்தில் உள்ள சக்கரையின் அளவை கட்டுப்படுத்த பெரிதும் உதவுகிறது. நன்றாக ஜீரணம் ஆவதற்கு பயன்படுகிறது. உடல் எடை குறைப்பதற்கு நாவல் பழத்தை எடுத்துக் கொள்ளலாம். நோய் எதிர்ப்பு சக்தி இந்த பழத்தில் அதிகமாக உள்ளது. இத்தகைய சிறப்புமிக்க நாவல்பழத்தை வைத்து ஒரு சிம்பிள் ரெசிபி செய்யலாம் வாங்க.

நாவல் பழ அல்வா செய்ய தேவையான பொருட்கள்:

நாவல்பழம்-25

சோளமாவு-1கப்.

சக்கரை-350 கிராம்.

நெய்- தேவையான அளவு.

பாதாம்- சிறிதளவு.

நாவல்பழ அல்வா செய்முறை விளக்கம்:

முதலில் நாவல்பழம் 25 பழத்தை எடுத்து அதிலிருந்து கொட்டையை நீக்கிவிட்டு சதையை மட்டும் வெட்டி எடுத்து மிக்ஸியில் போட்டு 1கப் சோளமாவு, 350 கிராம் சக்கரை சேர்த்து 1கப் தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

இப்போது நல்ல அகலமான ஃபேனில் 1 தேக்கரண்டி நெய் சேர்த்துவிட்டு அரைத்த கலவையை சேர்த்து அடுப்பை மீடியம் ஹீட்டில் வைத்து பொறுமையாக கைவிடாமல் கிண்டவும். ஒரு இரண்டு நிமிடத்திலேயே அல்வா கெட்டியாக ஆரமித்து விடும். கடைசியாக இரண்டு தேக்கரண்டி நெய் சேர்த்து கிண்டி விடவும். தோலுரித்து சிறிதாக வெட்டி வைத்திருக்கும் பாதாமை மேலே தூவி கிண்டி இறக்கவும். அவ்வளவு தான். சுவையான கண்ணை கவரும் வண்ணத்தில் நாவல்பழ அல்வா ரெடி. நீங்களும் இந்த ரெசிப்பியை வீட்டிலே டிரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.

பிளம் கேக் செய்ய தேவையான பொருட்கள்:

முந்திரி-10

பாதாம்-10

திராட்சை-10

பிஸ்தா-10

செர்ரி-10

சக்கரை- ¼ கப்.

மிக்ஸியில் அரைக்க,

சக்கரை-1 கப்.

ஏலக்காய்-3

பட்டை-2

சுக்குப்பொடி-1/4 தேக்கரண்டி.

வெண்ணெய்-100 கிராம்.

முட்டை-2

மைதா-1கப்.

பேக்கிங் சோடா-1/2 தேக்கரண்டி.

பேக்கிங் பவுடர்-1 தேக்கரண்டி.

வெண்ணிலா எசென்ஸ்-1 தேக்கரண்டி.

இதையும் படியுங்கள்:
சுவையான ஆந்திரா மாமிடிகாயா பச்சடி - மாங்காய் ரசம் ரெசிபிஸ்!
Jamun halwa

பிளம் கேக் செய்முறை விளக்கம்:

முதலில் ஒரு பவுலில் முந்திரி 10, பாதாம் 10, பிஸ்தா 10, திராட்சை 10, செர்ரி பழம் 10 ஆகியவற்றை எடுத்துக் கொள்ளவும்.

இப்போது அடுப்பில் ஃபேனை வைத்து ¼ கப் சக்கரை சேர்த்து கிண்டி கேரமல் தேன் நிறம் வரும் வரை கிண்டி அதில் அரை கப் தண்ணீர் ஊற்றி கேரமலை தண்ணீரில் கரைத்து விட்டு எடுத்து வைத்திருக்கும் நட்ஸை சேர்த்து 10 நிமிடம் வேகவிட்டு எடுத்து வைத்துக்கொள்ளவும்.

இப்போது மிக்ஸியில் 1கப் சக்கரை, ஏலக்காய் 3, பட்டை 2, சுக்குப்பொடி ¼ தேக்கரண்டி சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

இப்போது ஒரு பவுலில் 100 கிராம் வெண்ணெய்யை சேர்த்து நன்றாக கிண்டி விட்டு அதில் அரைத்து வைத்திருக்கும் சக்கரையை சேர்த்து நன்றாக கிண்டி விடவும்.  இத்துடன் 2 முட்டை சேர்த்து நன்றாக கிண்டவும். இப்போது நன்றாக கிரீமியாக வரும். அப்போது 1 கப் மைதா மாவு, 1/2 தேக்கரண்டி பேக்கிங் சோடா, 1 கப் பேக்கிங் பவுடர் இதையெல்லாம் சேர்த்து நன்றாக கிண்டவும். கடைசியாக கேரமெல்லில் சேர்த்த நட்ஸை இத்துடன் சேர்த்து 1 தேக்கரண்டி வெண்ணிலா எசென்ஸை சேர்த்து நன்றாக கிண்டவும்.

அலுமினியம் கப்பில் இந்த மாவை வைத்து விட்டு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து உப்பு போட்டு அதில் ஸ்டேன்ட் வைத்து இந்த மாவு கப்பை அதில் வைத்து மூடி போட்டு 1 மணி நேரம் வேகவைத்து எடுத்தால் சுவையான ப்ளம் கேக் தயார். நீங்களும் இதை வீட்டில் செய்து பார்த்துவிட்டு சொல்லுங்க.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com