இன்றைக்கு மிகவும் சுவையான ஆந்திரா மாமிடிகாயா பச்சடி மற்றும் மாங்காய் ரசம் எப்படி வீட்டிலேயே சுலபமாக செய்யலாம்னு பார்க்கலாம் வாங்க.
ஆந்திரா மாமிடிகாயா பச்சடி செய்ய தேவையான பொருட்கள்;
மாங்காய்-2
கடுகு-1 தேக்கரண்டி.
வெந்தயம்-1 தேக்கரண்டி.
உப்பு-1 தேக்கரண்டி.
மிளகாய் தூள்-1 ½ தேக்கரண்டி.
தாளிப்பதற்கு,
கடுகு-1 தேக்கரண்டி.
ஜீரகம்-1 தேக்கரண்டி.
கருவேப்பிலை-சிறிது.
பூண்டு-6
வரமிளகாய்-2
பெருங்காயத்தூள்-1/2 தேக்கரண்டி.
நல்லெண்ணெய்-3 தேக்கரண்டி.
ஆந்திரா மாமிடிகாயா பச்சடி செய்முறை விளக்கம்;
முதலில் மாங்காய் 2 நன்றாக தோல் சீவி துருவி எடுத்துக்கொள்ளவும். இப்போது அடுப்பில் கடாயை வைத்து 1 தேக்கரண்டி கடுகு, 1 தேக்கரண்டி வெந்தயம் நன்றாக கிண்டிவிட்டு அடுப்பை ஆப் செய்துவிடுங்கள். இப்போது 1 தேக்கரண்டி உப்பு, 1 ½ தேக்கரண்டி மிளகாய் தூள் சேர்த்து கிண்டி இறக்கவும். இப்போது இதை ஆற வைத்து மிக்ஸியில் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
இப்போது அரைத்த பவுடரை மாங்காயுடன் சேர்த்து நன்றாக கிண்டி விடவும். அடுப்பில் கடாயை வைத்து 3 தேக்கரண்டி நல்லெண்ணெய், 1 தேக்கரண்டி கடுகு நன்றாக பொரிந்ததும், ஜீரகம் 1 தேக்கரண்டி, 2 வரமிளகாய், கருவேப்பிலை சிறிது, பெருங்காயம் ½ தேக்கரண்டி சேர்த்துக் கொள்ளவும். பூண்டு 6 தட்டி இத்துடன் சேர்த்து விட்டு பூண்டு பொன்னிறமாகும் வரை வறுத்து எடுத்து மாங்காயுடன் சேர்த்து கிண்டிவிட்டு பரிமாறலாம். சுவையான ஆந்திரா மாமிடிகாயா பச்சடி தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பாருங்கள்.
மாங்காய் ரசம் செய்ய தேவையான பொருட்கள்;
மாங்காய்-2 கப்.
தண்ணீர்-2 கப்.
பச்சை மிளகாய்-2
மஞ்சள் தூள்-1/4 தேக்கரண்டி.
நல்லெண்ணெய்-1/4 தேக்கரண்டி.
உப்பு-தேவையான அளவு.
கொத்தமல்லி, கருவேப்பிலை- சிறிதளவு.
கடுகு-1 தேக்கரண்டி.
ஜீரகம்-1 தேக்கரண்டி.
பச்சை மிளகாய்-1
வரமிளகாய்-2
இஞ்சி- 1 துண்டு.
மிளகுத்தூள்-1/2 தேக்கரண்டி.
பெருங்காயத்தூள்-1/4 தேக்கரண்டி.
நெய்-2 தேக்கரண்டி.
மாங்காய் ரசம் செய்முறை விளக்கம்;
முதலில் குக்கரில் 1 தேக்கரண்டி துவரம்பருப்பு, சிறிதாக நறுக்கிய மாங்காய் 2 கப், தண்ணீர் 2 கப், மஞ்சள் பொடி ¼ தேக்கரண்டி, நல்லெண்ணை ¼ தேக்கரண்டி, பச்சை மிளகாய் 2 வைத்து 5 விசில் விட்டு இறக்கவும்.
இப்போது பச்சை மிளகாயை தனியாக எடுத்து வைத்துவிட்டு மீதம் இருப்பதை மசித்து விட்டுக் கொள்ளவும். தண்ணீர் 2 கப், தேவையான அளவு உப்பு, கொத்தமல்லி, கருவேப்பிலை சிறிதளவு சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
இப்போது கடாயில் நெய் 2 தேக்கரண்டி விட்டு கடுகு 1 தேக்கரண்டி, ஜீரகம் 1 தேக்கரண்டி, பச்சை மிளகாய் 1, வரமிளகாய் 2, பெருங்காயத்தூள் ¼ தேக்கரண்டி, இஞ்சி 1 துண்டு சிறிதாக நறுக்கியது, மிளகுத்தூள் ½ தேக்கரண்டி சேர்த்து கிண்டி அதை கொதிக்கும் மாங்காய் ரசத்தில் சேர்த்து நன்றாக கிண்டி இறக்கவும். அவ்வளவு தான், சூப்பரான மாங்காய் ரசம் தயார். நீங்களும் இந்த ரெசிபியை காண்டிப்பாகட்ரை பண்ணிப் பாருங்கள்.