மொறு மொறு ஜவ்வரிசி வடை- நேந்திரம்பழ அல்வா செய்யலாம் வாங்க!

Javvarisi vadai
Javvarisi vadaiImage Credits: Very Good Recipes

ஜவ்வரிசியில் புரதம், கால்சியம், இரும்பு, மெக்னீசியம் போன்ற சத்துக்கள் உள்ளதால் இதை உணவில் சேர்த்துக்கொண்டால், நாள் முழுவதும் உற்சாகமாக இருப்பீர்கள். இதில் கலோரிகள் மிகவும் குறைவு. ஜவ்வரிசி உடலுக்கு தேவையான ஆற்றலை தருவதோடு, எலும்பையும் வலுப்பெறச் செய்கிறது. இத்தகைய சத்து நிறைந்த ஜவ்வரிசியை வைத்து இந்த டிஷ் எப்படி செய்யலாம்னு பார்க்கலாம் வாங்க.

ஜவ்வரிசி வடை செய்ய தேவையான பொருட்கள்:

ஜவ்வரிசி-1கப்

வெங்காயம்-1

பச்சை மிளகாய்-1

இஞ்சி-1 துண்டு.

கருவேப்பிலை-சிறிதளவு

பிரட்-2

உப்பு-தேவையான அளவு

எண்ணெய்- தேவையான அளவு

ஜவ்வரிசி வடை செய்முறை விளக்கம்

முதலில் ஜவ்வரிசி 1கப்பை சுடுத்தண்ணீரில் 3 மணி நேரம் ஊற வைத்துக்கொள்ளவும். பிறகு ஊறிய ஜவ்வரிசியை ஒரு பவுலில் மாற்றிக்கொண்டு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம்1, இஞ்சி பொடியாக நறுக்கியது 1 துண்டு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் 1, கருவேப்பிலை சிறிதளவு சேர்த்துவிட்டு இத்துடன் இரண்டு பிரட்டை தண்ணீரில் முக்கி எடுத்து அதையும் இத்துடன் சேர்த்துக்கொள்ள வேண்டும். கடைசியாக உப்பு தேவையான அளவு சேர்த்து பிசைந்து கையில் வடையை தட்டிக்கொள்ளவும். இப்போது அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய்யை ஊற்றி நன்றாக கொதித்ததும், மாவை தட்டி ஒவ்வொன்றாக போட்டு பொன்னிறமாகும் வரை நன்றாக வேகவிட்டு எடுக்கவும். இப்போது சுவையான ஜவ்வரிசி வடை தயார். நீங்களும் வீட்டில் ஒருமுறை டிரைப் பண்ணி பார்த்துட்டு சொல்லுங்க.

நேந்திரப்பழ அல்வா செய்ய தேவையான பொருட்கள்:

நேந்திரப்பழம்-2

தேங்காய் பால்-1 கப்.

சக்கரை-1 கப்.

நெய்-தேவையான அளவு.

ஏலக்காய்-2.

முந்திரி, திராட்சை- தேவையான அளவு.

இதையும் படியுங்கள்:
குஜராத்தி ஹண்ட்வோ- உடுப்பி கருணைக்கிழங்கு வறுவல் எப்படி செய்யறது?
Javvarisi vadai

நேந்திரம்பழ அல்வா செய்முறை விளக்கம்

முதலில் நேந்திரம்பழம் 2 சின்னதாக வெட்டிக்கொண்டு அதை மிக்ஸியில் போட்டு அத்துடன் 2 ஏலக்காய் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். இப்போது அடுப்பில் ஒரு ஃபேனை வைத்து அதில் 2 தேக்கரண்டி நெய்யை விட்டு அதில் அரைத்து வைத்த நேந்திரப்பழ பேஸ்டை சேர்த்து நன்றாக கிண்டவும். இப்போது ஒரு கப் கெட்டியான தேங்காய் பாலை அத்துடன் சேர்த்து கிண்டவும். 1 கப் சக்கரை சேர்த்து கிண்டி 2 தேக்கரண்டி நெய் விட்டு நன்றாக கிண்டவும். கடைசியாக முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்து அதையும் அல்வாவில் சேர்த்து கிண்டி இறக்கவும். இப்போது சுவையான நேந்திரப்பழ அல்வா தயார். நீங்களும் வீட்டில் ஒருமுறை செய்து பார்த்துவிட்டு சொல்லுங்க.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com