குஜராத்தி ஹண்ட்வோ- உடுப்பி கருணைக்கிழங்கு வறுவல் எப்படி செய்யறது?

Gujarathi handvo
Gujarathi handvo and udupi karunai kilangu fry recipesImage Credits: GOYA

'ண்ட்வோ' (handvo) குஜராத்தில் மிகவும் பிரபலமான ஸ்நாக்ஸ் வகையாகும். இதை காய்கறிகளால் செய்யட்ட கேக் என்றே சொல்லலாம். இதில் நிறைய சத்துக்கள் அடங்கியுள்ளது. எனவே இது ஒரு ஆரோக்கியமான உணவு வகையாகும். சரி வாங்க, குஜராத் ஃபேமஸ் ஹண்ட்வோவை எப்படி சுலபமாக செய்யலாம்னு பார்க்கலாம்.

குஜராத்தி ஹண்ட்வோ செய்ய தேவையான பொருட்கள்;

ரவை-1 கப்.

தயிர்-1/2 கப்.

மஞ்சள் தூள்- சிறிதளவு.

உப்பு- சிறிதளவு.

சுரைக்காய்-1கப்.

கேரட்-1கப்.

வெங்காயம்-1கப்.

குடைமிளகாய்-1 கப்.

இஞ்சிபூண்டு பச்சைமிளகாய்  பேஸ்ட்-1 தேக்கரண்டி.

கொத்தமல்லி- சிறிதளவு.

எண்ணெய்- தேவையான அளவு.

வெள்ளை எள்ளு-சிறிதளவு.

கடுகு- சிறிதளவு.

ஜீரகம்- சிறிதளவு.

குஜராத்தி ஹண்ட்வோ செய்முறை விளக்கம்;

முதலில் பவுலில் 1 கப் ரவை எடுத்துக்கொண்டு அதற்கு 1/2கப் தயிர் சேர்த்து அத்துடன் கொஞ்சம் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீர் சிறிது ஊற்றி கெட்டி பதத்திற்கு கிண்டி வைத்துக்கொள்ளவும்.

இப்போது இத்துடன் பொடியாக துருவி வைத்த சுரைக்காய் 1 கப், வெங்காயம் 1கப், கேரட் 1 கப், குடைமிளகாய் 1கப், கொத்தமல்லி சிறிதளவு, இஞ்சி பூண்டு பச்சைமிளகாய் பேஸ்ட் 1 தேக்கரண்டி சேர்த்து நன்றாக கிளறிவிட்டு ¼ மணி நேரம் மூடி வைத்துவிடவும்.

இப்போது அடுப்பில் ஒரு ஃபேனை வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு சிறிதளவு, சீரகம் சிறிதளவு, வெள்ளை எள் சிறிதளவு சேர்த்து பொரிந்ததும் செய்து வைத்திருக்கும் மாவை ஒரு கரண்டி அதன் மீது எடுத்து ஊற்றி விடவும். இதை மூடிப்போட்டு லோ பிளேமில் வைத்து 10 நிமிடம் வேகவைக்கவும்.இப்போது திருப்பிப்போட்டு இன்னொரு பக்கமும் வெந்ததும் துண்டுகளாக வெட்டி கிரீன் சட்னியுடன் பரிமாறவும். இப்போது சுவையான குஜராத்தி ஸ்பெஷல் ஹண்ட்வோ தயார். நீங்களும் வீட்டில் ஒருமுறை டிரை பண்ணி பார்த்துட்டு சொல்லுங்க.

உடுப்பி கருணைக்கிழங்கு வறுவல் செய்ய தேவையான பொருட்கள்;

கருணைக்கிழங்கு-1 கப்.

மஞ்சள் தூள் -சிறிதளவு.

புளி கரைச்சல்-1கப்.

உப்பு- தேவையான அளவு.

சோளமாவு-1 தேக்கரண்டி.

எண்ணெய்- தேவையான அளவு.

சின்ன வெங்காயம்-20

பூண்டு-10 பல்.

கருவேப்பிலை-சிறிதளவு.

மிளகு-1தேக்கண்டி.

ஜீரகம்-1 தேக்கரண்டி.

சோம்பு-1 தேக்கரண்டி.

இஞ்சி-3 துண்டு.

தேங்காய்-1கப்.

கடுகு, கருவேப்பிலை- சிறிதளவு

மிளகாய் தூள்-1 தேக்கரண்டி.

இதையும் படியுங்கள்:
சூப்பர் டேஸ்ட்டில் 'கிரீம் பன்' மற்றும் 'சப்பாத்தி நூடுல்ஸ்' செய்யலாம் வாங்க!
Gujarathi handvo

உடுப்பி கருணைக்கிழங்கு வறுவல் செய்முறை விளக்கம்:

முதலில் அடுப்பில் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் நீளமாக வெட்டிய கருணைக்கிழங்கு 1 கப்பை சேர்த்து அத்துடன் மஞ்சள் தூள் சிறிதளவு, புளி கரைச்சல் 1 கப், உப்பு சிறிதளவு சேர்த்து நன்றாக வேக வைத்து எடுத்துக்கொள்ளவும்.

இப்போது இதில் 1 தேக்கரண்டி சோளமாவு, உப்பு சிறிதளவு சேர்த்து எண்ணெய்யில் பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

இப்போது கடாயில் சிறிது எண்ணெய் விட்டு அதில் 20 சின்ன வெங்காயம், 10 பல் பூண்டு, 1 தேக்கரண்டி மிளகு, 1 தேக்கரண்டி சோம்பு, 3 துண்டு இஞ்சி, ஜீரகம் 1 தேக்கரண்டி,கருவேப்பிலை கொஞ்சம் சேர்த்து வதக்கி எடுத்துக்கொள்ளவும். இப்போது துருவிய தேங்காய் 1கப் சேர்த்து நன்றாக கிண்டி விட்டு மிக்ஸியில் தண்ணீர் சேர்க்காமல் அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

இப்போது கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, கருவேப்பிலை சிறிதளவு சேர்த்து வெடித்ததும் அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து மிளகாய் தூள்1 தேக்கரண்டி, உப்பு சிறிதளவு சேர்த்து நன்றாக வதக்கவும். இப்போது வறுத்து வைத்திருக்கும் கருணைக்கிழங்கை அத்துடன் சேர்த்து கிண்டி இறக்கவும். அவ்வளவு தான் சுவையான உடுப்பி கருணைக்கிழங்கு தயார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com