கேரளாவில் மிகவும் பிரபலமான பொட்டெட்டோ இஷ்ட்டூ தேங்காய்ப்பாலில் செய்யப்படுகிறது. இதை செய்வது மிகவும் சுலபம். இட்லி, தோசை போன்ற உணவுடன் இதை சேர்த்து சாப்பிடும்போது சுவை அட்டகாசமாக இருக்கும். இந்த ரெசிபியை எப்படி வீட்டிலேயே சுலபமாக செய்யலாம்னு பார்க்கலாம் வாங்க.
பொட்டெட்டோ இஷ்ட்டூ செய்ய தேவையான பொருட்கள்;
உருளை-2
தேங்காய் எண்ணெய்-1 குழிக்கரண்டி.
சின்ன வெங்காயம்-10
கருவேப்பிலை-சிறிதளவு.
பச்சை மிளகாய்-4
இஞ்சி- சிறிதளவு.
தேங்காய் பால்-2 கப்.
உப்பு- தேவையான அளவு.
கொத்தமல்லி- சிறிதளவு.
பொட்டெட்டோ இஷ்ட்டூ செய்முறை விளக்கம்;
முதலில் உருளைக்கிழங்கு 2 நன்றாக வேகவைத்து கையால் மசித்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
இப்போது ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் 1 குழிக்கரண்டி ஊற்றிக் கொண்டு அதில் சின்ன வெங்காயம் 10, கருவேப்பிலை சிறிதளவு, பச்சை மிளகாய் 4, இஞ்சி சிறிதாக நறுக்கியது 1 துண்டு சேர்த்து நன்றாக வதக்கவும். இப்போது மசித்து வைத்திருக்கும் உருளையை இதில் சேர்த்து சற்று கிண்டிய பிறகு தேங்காய்ப் பால் 2 கப் சேர்த்து தண்ணீர் 1 கப் சேர்த்துக் கொள்ளவும். இதில் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும். இதை நன்றாக கொதிக்கவிட்டு கடைசியாக கொத்தமல்லி தூவி இறக்கிவிடவும். அவ்வளவுதான். சுவையான பொட்டேட்டோ இஷ்ட்டூ தயார். நீங்களும் இதை வீட்டிலே ட்ரை பண்ணி பார்த்துட்டு சொல்லுங்க.
தக்காளி சால்னா செய்ய தேவையான பொருட்கள்;
தக்காளி -4
வெங்காயம்-1
எண்ணெய்-2 தேக்கரண்டி.
சோம்பு-1 தேக்கரண்டி.
தேங்காய்-1கப்.
மஞ்சள் தூள்-1/4 தேக்கரண்டி.
மிளகாய் தூள்-1 தேக்கரண்டி.
சக்கரை-1 தேக்கரண்டி.
கொத்தமல்லி- சிறிதளவு.
தக்காளி சால்னா செய்முறை விளக்கம்;
முதலில் குக்கரில் எண்ணெய் 2 தேக்கரண்டி சேர்த்துக் கொண்டு சோம்பு 1 தேக்கரண்டி, சிறிதாக வெட்டிய வெங்காயம் 1, தக்காளி 4 பேஸ்டாக அரைத்து ஊற்றிக் கொள்ளவும். இப்போது தேங்காய் 1 கப் பேஸ்டாக அரைத்து இத்துடன் சேர்த்துக் கொள்ளவும். இதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து விட்டுக் கொள்ளவும். அதில் மஞ்சள்தூள் ¼ தேக்கரண்டி, மிளகாய் தூள் 1 தேக்கரண்டி, தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்துவிட்டு 1 தேக்கரண்டி சக்கரை சேர்த்து நன்றாக கலந்து விட்டு குக்கரில் 3 விசில் வைத்து இறக்கிவிடவும். கடைசியாக கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறவும். அவ்வளவுதான். சுவையான தக்காளி சால்னா தயார். நீங்களும் இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பார்த்துட்டு சொல்லுங்க.