Killi potta sambar
Killi potta sambar and Poondu paruppu podi recipesImage Credits: YouTube

மணக்கும் கிள்ளி போட்ட சாம்பார் மற்றும் பூண்டு பருப்புப் பொடி செய்யலாமா?

Published on

ன்றைக்கு சாம்பார் பொடியில்லாமலேயே சிம்பிளாக கிள்ளி போட்ட சாம்பார் மற்றும் ஆந்திரா ஸ்பெஷல் பூண்டு பருப்பு பொடி ரெசிபிகளை வீட்டிலேயே சுலபமாக எப்படி செய்வது என்று பார்ப்போம்.

கிள்ளி போட்ட சாம்பார் செய்ய தேவையான பொருட்கள்;

எண்ணெய்-2 தேக்கரண்டி.

கடுகு-1 தேக்கரண்டி.

சீரகம்-1 தேக்கரண்டி.

பெருங்காயத்தூள்-சிறிதளவு.

கருவேப்பிலை-சிறிதளவு.

வரமிளகாய்-6

வெங்காயம்-1

தக்காளி-1

மஞ்சள் தூள்-1/4 தேக்கரண்டி.

கல் உப்பு- தேவையான அளவு.

கரைத்து வைத்த புளி-1 கப்.

துவரம் பருப்பு-2கப்.

கருவேப்பிலை, கொத்தமல்லி-சிறிதளவு.

கிள்ளி போட்ட சாம்பார் செய்முறை விளக்கம்;

முதலில் அடுப்பில் ஃபேனை வைத்து 2 தேக்கரண்டி எண்ணெய் விட்டுக்கொண்டு கடுகு 1 தேக்கரண்டி, சீரகம் 1 தேக்கரண்டி, பெருங்காயத்தூள் சிறிதளவு, கருவேப்பிலை சிறிதளவு, வரமிளகாய் 6, சிறிதாக நறுக்கிய வெங்காயம் 1, சிறிதாக நறுக்கிய தக்காளி 1 சேர்த்து நன்றாக வதக்கவும். இப்போது மஞ்சள் தூள் ¼ தேக்கரண்டி சேர்த்துக்கொள்ளவும்.

பிறகு இதில் கரைத்து வைத்த புளி 1 கப் ஊற்றி, கல் உப்பு தேவையான அளவு சேர்த்துக்கொள்ளவும். இத்துடன் வேக வைத்த துவரம் பருப்பு 2 கப் சேர்த்து கொதித்கவிட்டு கடைசியாக கருவேப்பிலை, கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான கிள்ளி போட்ட சாம்பார் தயார். நீங்களும் இந்த சிம்பிள் ரெசிபியை வீட்டிலேயே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.

பூண்டு பருப்பு பொடி செய்ய தேவையான பொருட்கள்;

துவரம் பருப்பு-1 கப்.

பாசிப்பருப்பு-1/4 கப்.

மிளகு-1 தேக்கரண்டி.

பொரிக்கடலை-1கப்.

வரமிளகாய்-10

கட்டிப் பெருங்காயம்-சிறிதளவு.

பூண்டு-10

கருவேப்பிலை-சிறிதளவு.

உப்பு-1 தேக்கரண்டி.

எண்ணெய்- தேவையான அளவு.

இதையும் படியுங்கள்:
டேஸ்டியான தேங்காய்ப் பால் பிரிஞ்சி சாதம் வித் கோவக்காய் பொரியல் செய்யலாமா?
Killi potta sambar

பூண்டு பருப்பு பொடி செய்முறை விளக்கம்;

முதலில் ஃபேனில் 1 கப் துவரம் பருப்பை சேர்த்து இளம்சிவப்பாக வறுத்து வைத்துக் கொள்ளவும். இப்போது அதே ஃபேனில் ¼ கப் பாசிப்பருப்பை சேர்த்து வறுத்து வைத்துக்கொள்ளுங்கள். இப்போது 1 தேக்கரண்டி மிளகை 2 நிமிடம் வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

இப்போது ஃபேனில் 1கப் பொரிக்கடலையை சேர்த்து 1 நிமிடம் வறுத்து எடுத்துக்கொள்ளவும். இப்போது 1 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து அதில் 10 வரமிளகாயை வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளவும். மீதமிருக்கும் எண்ணெய்யில் கட்டிப்பெருங்காயம் சிறிதை சேர்த்து வறுத்து எடுத்துக்கொள்ளவும். இப்போது 1 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து 10 பூண்டை தட்டி சேர்த்துக் கொள்ளவும். பூண்டு நன்றாக நிறம் மாறி வரும்போது கொஞ்சமாக கருவேப்பிலையை சேர்த்து முறுகலாக வரும்வரை வறுத்து எடுத்துக்கொள்ளவும். எல்லாவற்றையும் நன்றாக ஆறவைத்துக்கொள்ளவும்.

இப்போது மிக்ஸியில் ஆறவைத்த அனைத்தையும் சேர்த்து இத்துடன் 1 தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். அவ்வளவுதான் ஆந்திரா ஸ்பெஷல் பூண்டு பருப்பு பொடி தயார். இந்த பொடியை சாதத்துடன் நெய் தாராளமாக விட்டு சாப்பிட்டு பாருங்கள் சுவை அல்டிமேட்டாக இருக்கும். கண்டிப்பாக இந்த சிம்பிள் ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.

logo
Kalki Online
kalkionline.com