கறிவேப்பிலை சேர்த்து தோசை உண்பது எவ்வளவு ஆரோக்கியம் தரும் தெரியுமா?

Curry Leaf Dosa recipe.
healthy dosai recipesImag credit - pixaba
Published on

தினமும் காலை உணவுக்கு மசாலா தோசை, மஷ்ரூம் தோசை என ஸ்டஃப்ட் தோசைகளை சாப்பிட்டு போரடிக்குதா? அப்படின்னா ஒரு மாறுதலுக்கு மணமும்  ஆரோக்கியமும் நிறைந்த கறிவேப்பிலை தோசை செய்து சாப்பிடலாமே!! அதை எப்படி செய்வது என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்:

கறிவேப்பிலை இலைகள்  1 கப் 

கொத்தமல்லி இலைகள்   ½ கப்

பச்சை மிளகாய்  2

சீரகம்  1 டீஸ்பூன் 

இட்லி அரிசி  1 கப்  

உளுத்தம் பருப்பு ½ கப் 

பாதி வேக வைத்த (Parboiled) அரிசி  1 கப்

அவல் 2 டேபிள் ஸ்பூன் 

தண்ணீர் தேவையான அளவு 

வெந்தயம்  1 டேபிள் ஸ்பூன் 

உப்பு  தேவையான அளவு

செய்முறை: 

உளுத்தம் பருப்பு, இட்லி அரிசி, பாதி வேகவைத்த அரிசி, அவல் மற்றும் வெந்தயம் ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு கழுவிவிட்டு, பின் மூழ்கும்  அளவு நீரில் 6 மணி நேரம் ஊறவிடவும். பிறகு மிக்ஸியில் போட்டு மசிய அரைத்து எடுக்கவும். அரைத்த மாவில் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்த பின்  மூடி போட்டு மூடி வைத்து 10 மணி நேரம் நொதிக்க விடவும். கறிவேப்பிலை, கொத்தமல்லி இலைகள், சீரகம் மற்றும் பச்சை மிளகாய்களை மிக்ஸியில் இட்டு மசிய அரைக்கவும். அதற்கு தேவையான உப்பும் சேர்த்து அந்த பேஸ்ட்டை நொதித்த தோசை மாவுடன் சேர்த்து நன்கு  கலக்கவும். அடுப்பில் தோசை கல்லை வைத்து சூடானதும் தேவையான எண்ணெய் தடவி தோசைகளை சுட்டெடுக்கவும். சுவையான கறிவேப்பிலை தோசை தயார்! சட்னி சாம்பார் தொட்டு ரசித்து உண்ணலாம்.

இதையும் படியுங்கள்:
விதியை நம்பியவர் வென்றதில்லை!
Curry Leaf Dosa recipe.

நம் கண்களின் பார்வைத்திறன் மேம்படவும், எடை குறையவும், கேன்சர் உண்டாகக் காரணமாகும் செல்களை எதிர்த்துப் போராடவும், கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும், காயங்களை ஆற்றவும், உடல் இரும்புச் சத்தை உறிஞ்சவும் அதன் மூலம் அனீமியா நோயை தடுக்கவும் உதவக் கூடிய கறிவேப்பிலையை உபயோகித்து அடிக்கடி தோசை செய்து சாப்பிடுவது நம் உடலின் ஆரோக்கியத்தைப் பன்மடங்கு உயர்த்தும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com