இன்றைக்கு சிம்பிளான மற்றும் சுவையான முட்டை சேவை மற்றும் மதுரை ஸ்பெஷல் தண்ணி சட்னி எப்படி வீட்டிலேயே செய்யலாம்னு பார்க்கலாம் வாங்க.
முட்டை சேவை செய்யத் தேவையான பொருட்கள்;
ரைஸ் சேவை- 1கப்.
வேக வைத்த முட்டை-3
பூண்டு-10.
சில்லி பிளேக்ஸ்-2 தேக்கரண்டி.
எண்ணெய்- தேவையான அளவு.
வேர்க்கடலை-1 கைப்பிடி.
மிளகாய் தூள்-1/2 தேக்கரண்டி.
உப்பு-1/2 தேக்கரண்டி.
முட்டை செய்வதற்கு,
வெங்காயம்-1
தக்காளி-1
முட்டை-1
மிளகாய் தூள்-சிறிதளவு.
உப்பு-சிறிதளவு.
கொத்தமல்லி- சிறிதளவு.
செய்முறை விளக்கம்;
முதலில் கொதிக்கும் தண்ணீரில் 1 கப் சேவையை ¼ தேக்கரண்டி உப்பு சேர்த்து வேகவைத்து வடிக்கட்டி எடுத்துக்கொள்ளவும். இப்போது 3 வேகவைத்த முட்டையை துருவிக்கொள்ளவும்.
இப்போது ஒரு ஃபேனில் எண்ணெய் 1 குழிக்கரண்டி ஊற்றி அதில் தூளாக வெட்டிய பூண்டு 10, சில்லி பிளேக்ஸ் 2 தேக்கரண்டி சேர்த்து வறுத்துக் கொள்ளவும். இத்துடன் இடிச்ச வேர்க்கடலை 1 கைப்பிடி சேர்த்து வறுத்துக் கொள்ளவும். இப்போது இதில் ½ தேக்கரண்டி மிளகாய் தூள், ½ தேக்கரண்டி உப்பு சேர்த்து கலந்துவிட்டு துருவிய முட்டையில் சேர்த்து கலந்து விடவும்.
இப்போது ஃபேனில் 1 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து பொடியாக நறுக்கிய வெங்காயம் 1, பொடியாக நறுக்கிய தக்காளி 1 சேர்த்து வதக்கவும். இது வதங்கியதும் முட்டை ஒன்றை உடைத்து சேர்த்துக்கொள்ளவும். இதில் மிளகாய் தூள், உப்பு தூவி நன்றாக கிண்டி விடவும். இதில் வேக வைத்திருக்கும் சேவையை சேர்த்து கலந்து விடவும். இப்போது ரெடி பண்ணி வைத்திருக்கும் முட்டையையும், கொத்தமல்லியையும் சேர்த்து 5 நிமிடம் பிரட்டி விடவும். அவ்வளவு தான். சூப்பர் டேஸ்டில் முட்டை சேவை தயார். நீங்களும் வீட்டிலே இந்ந ரெசிபியை ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.
தேவையான பொருட்கள்:
பச்சை மிளகாய்-2
வரமிளகாய்-4
பூண்டு-6
இஞ்சி- 1 துண்டு.
வெங்காயம்-2
உப்பு- தேவையான அளவு.
எண்ணெய்- தேவையான அளவு.
பொட்டுக்கடலை-1 கப்.
தண்ணீர்-1 கப்.
கடுகு-1 தேக்கரண்டி.
உளுந்து-1 தேக்கரண்டி.
பெருங்காயம்-சிறிதளவு.
கருவேப்பிலை-சிறிதளவு.
செய்முறை விளக்கம்;
முதலில் அடுப்பில் கடாயை வைத்து 2 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து 2 பச்சை மிளகாய், 4 வரமிளகாய் சேர்த்து வதக்கிவிட்டு 1 துண்டு இஞ்சி, பூண்டு 6, சிறிதாக நறுக்கிய வெங்காயம் 2, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கி சூடு ஆறியதும் மிக்ஸியில் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவும். இப்போது இத்துடன் பொட்டுக்கடலை 1கப் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். இப்போது இதை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு 1 கிளாஸ் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
இப்போது கடாயில் 1 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து அதில் 1 தேக்கரண்டி கடுகு, 1 தேக்கரண்டி உளுந்து, கருவேப்பிலை சிறிதளவு, பெருங்காயத்தூள் சிறிதளவு சேர்த்து தாளித்து அதில் ஊற்றிக்கொள்ளவும். அவ்வளவு தான். சூப்பர் சுவையில் மதுரை தண்ணி சட்னி தயார். இந்த ரெசிபியை நீங்களும் ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.