Lunch box recipe : தக்காளி பிரியாணி வித் egg chops செய்யலாம் வாங்க!

தக்காளி பிரியாணி
தக்காளி பிரியாணிImage credit - youtue.com
Published on

சிறுவயதில் லஞ்ச் பாக்ஸ் ரெசிபி என்று சொன்னாலே, தக்காளி பிரியாணியுடன் தொட்டுக் கொள்வதற்கு முட்டை சாப்ஸ்தான் நியாபகத்திற்கு வரும். இதை சாப்பிட செம டேஸ்டாக இருக்கும். வீட்டிற்கு லஞ்ச் பாக்ஸ் காலியாகத்தான் வரும். அத்தகைய அல்டிமேட் டேஸ்டான ரெசிபியை இன்னைக்கு சிம்பிளாக வீட்டிலேயே எப்படி செய்யறதுன்னு பார்ப்போம்.

தக்காளி பிரியாணி செய்ய தேவையான பொருட்கள்:

பிரியாணி இலை-1

பட்டை-1

கிராம்பு-2

ஏலக்காய்-2

வெங்காயம்-1

இஞ்சிபூண்டு பேஸ்ட்-1 தேக்கரண்டி.

புதினா, கொத்தமல்லி -சிறிதளவு.

அரைத்த தக்காளி -1

உப்பு- தேவையான அளவு.

மிளகாய் தூள்-1 தேக்கரண்டி.

தனியா தூள்-1 தேக்கரண்டி.

கரம் மசாலா-1 தேக்கரண்டி.

தயிர்-1/4 கப்.

நறுக்கிய தக்காளி-1

பாஸ்மதி அரிசி-1 கப்.

தண்ணீர்-1 ½ கப்.

தக்காளி பிரியாணி செய்முறை விளக்கம்:

முதலில் அடுப்பில் குக்கரை வைத்து அதில் 2 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து பிரியாணி இலை 1, பட்டை 1, கிராம்பு 2, ஏலக்காய் 2 சேர்த்து வதக்கவும். இதில் நீளமாக நறுக்கிய வெங்காயம் 1, இஞ்சிபூண்டு பேஸ்ட் 1 தேக்கரண்டி, புதினா கொத்தமல்லி சிறிதளவு சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.

இத்துடன் அரைத்த தக்காளி 1, உப்பு தேவையான அளவு, மிளகாய் தூள் 1 தேக்கரண்டி, தனியா தூள் 1 தேக்கரண்டி, கரம் மசாலா 1 தேக்கண்டி சேர்த்துக் கொள்ளவும். இதில் ¼ கப் தயிர் சேர்த்து கிண்டவும். எண்ணெய் நன்றாக பிரிந்து வரும் போது நான்காக வெட்டி வைத்த 1 தக்காளியை சேர்த்துக்கொள்ளவும். இப்போது 1 கப் பாஸ்மதி அரிசிக்கு 1 ½ கப் தண்ணீர் சேர்த்து மேலே புதினா கொத்தமல்லி தூவி இரண்டு விசில்விட்டு இறக்கவும். அவ்வளவுதான். சுவையான லஞ்ச் பாக்ஸ் ரெசிபியான தக்காளி பிரியாணி தயார். நீங்களும் இந்த சிம்பிள் ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பாருங்கள்.

முட்டை சாப்ஸ் செய்ய தேவையான பொருட்கள்:

முட்டை-2

வெங்காயம்-1 தக்காளி-1

பூண்டு-2

இஞ்சி துண்டு-2

மிளகு-1 தேக்கரண்டி.

கருவேப்பிலை-1 கைப்பிடி.

எண்ணெய்-2 தேக்கரண்டி.

உப்பு- தேவையான அளவு.

கொத்தமல்லி-சிறிதளவு.

இதையும் படியுங்கள்:
டேஸ்டியான கோதுமை ரவை பிரியாணி-தக்காளி ஊறுகாய் செய்யலாம் வாங்க!
தக்காளி பிரியாணி

முட்டை சாப்ஸ் செய்முறை விளக்கம்:

முதலில் மிக்ஸியில் 1 வெங்காயம், 1 தக்காளி, 2 பூண்டு, 2 துண்டு இஞ்சி, 1 தேக்கரண்டி மிளகு,  1 கைப்பிடி கருவேப்பிலை சேர்த்து நன்றாக பேஸ்டாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

இப்போது அடுப்பில் கடாயை வைத்து அதில் 2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு அரைத்த பேஸ்டை அதில் சேர்த்து நன்றாக வதக்கவும். இதில் உப்பு தேவையான அளவு சேர்த்துக் கொள்ளவும். இப்போது எண்ணெய் பிரிந்து வந்ததும் வேக வைத்திருக்கும் 2 முட்டையை இரண்டு துண்டாக வெட்டி சேர்க்கவும். இப்போது எண்ணெய் பிரிந்து வரும் வரை மசாலாவை நன்றாக சுருளாக வறுத்து கடைசியாக கொத்தமல்லி சிறிதளவு தூவி இறக்கவும். டேஸ்டியான முட்டை சாப்ஸ் தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com