டேஸ்டியான பன் தோசை வித் மாப்பிள்ளை சொதி செய்யலாம் வாங்க!

 bun dosa with mappillai sodhi recipes!
Delicious bun dosa with mappillai sodhi!Image Credits: YouTube
Published on

ன்றைக்கு சுவையான பன் தோசை மற்றும் திருநெல்வேலி ஸ்பெஷல் மாப்பிள்ளை சொதி ரெசிபிஸை வீட்டிலேயே சுலபமாக எப்படி செய்யலாம்னு பார்ப்போம்.

பன் தோசை செய்ய தேவையான பொருட்கள்.

அரிசி-1கப்.

வெந்தயம்-1/2 தேக்கரண்டி.

அவல்-1 கப்.

பொரி-1கப்.

தேங்காய்-1கப்.

உப்பு- தேவையான அளவு.

நெய்-1 தேக்கரண்டி

பன் தோசை செய்முறை விளக்கம்.

முதலில் ஒரு பவுலில் 1 கப் அரிச , ½ தேக்கரண்டி வெந்தயம் சேர்த்து நன்றாக கழுவிய பிறகு 5 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ளவும். இப்போது ஒரு பவுலில் அவல் 1 கப், பொரி 1கப் சேர்த்து  தண்ணீர் விட்டு ஊறவைத்துக் கொள்ளவும். இப்போது மிக்ஸியில் துருவிய தேங்காய் 1 கப் சேர்த்து அத்துடன் அவல், பொரியை  மற்றும் ஊறை வைத்த அரிசியை சேர்த்து அத்துடன் தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

இந்த மாவை ஒரு இரவு புளிக்க வைத்து எடுத்துக் கொள்ளவும். இப்போது தோசைக் கல்லை நன்றாக காயவிட்டு நெய் 1 தேக்கரண்டி விட்டு மாவை ஊற்றி இரண்டு பக்கமும் பொன்முறுவலாக வேகவைத்து எடுக்கவும். சுவையான பன் தோசை தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.

மாப்பிள்ளை சொதி செய்ய தேவையான பொருட்கள்.

கேரட்-1கப்.

உருளை-1கப்.

முருங்கை-1கப்.

பீன்ஸ்-1 கப்.

தேங்காய் பால்-1கப்.

பாசிப்பருப்பு-1/4 கப்.

மஞ்சள் தூள்-1/4 தேக்கரண்டி.

கடுகு-1 தேக்கரண்டி.

உளுந்து-1தேக்கரண்டி.

சீரகம்-1 தேக்கரண்டி.

சின்ன வெங்காயம்-10

கருவேப்பிலை- சிறிதளவு.

தேங்காய் எண்ணெய்- தேவையான அளவு.

பச்சை மிளகாய்-2

இஞ்சி-1 துண்டு.

உப்பு- தேவையான அளவு.

எழுமிச்சை சாறு- சிறிதளவு.

கொத்தமல்லி-சிறிதளவு.

இதையும் படியுங்கள்:
Lunch Box Recipe:வரகரிசி பிரியாணி வித் சுரைக்காய் பப்பு செய்யலாமா?
 bun dosa with mappillai sodhi recipes!

மாப்பிள்ளை சொதி செய்முறை விளக்கம்.

முதலில் குக்கரில் நீளமாக வெட்டிய கேரட் 1கப், உருளை 1கப், பீன்ஸ் 1கப், முருங்கை 1 கப் சேர்த்து தண்ணீர்விட்டு 1 விசில்விட்டு எடுத்துக்கொள்ளவும்.

இப்போது அடுப்பில் ஒரு ஃபேனை வைத்து தேங்காய் எண்ணெய் 2 தேக்கரண்டி, கடுகு 1 தேக்கரண்டி, உளுந்து 1 தேக்கரண்டி, சீரகம் 1 தேக்கரண்டி, சின்ன வெங்காயம் 10, கருவேப்பிலை சிறிதளவு, இஞ்சி 1 துண்டு, பச்சை மிளகாய் 2 மிக்ஸியில் அரைத்து சேர்த்துக்கொள்ளவும். இந்த கலவை நன்றாக வதங்கியதும், வேகவைத்த காய்கறிகளை சேர்த்து மஞ்சள்தூள் ¼ தேக்கரண்டி, உப்பு தேவையான அளவு சேர்த்து தேங்காய்பால் 1 கப் சேர்த்து கலந்துவிடவும்.

இப்போது குக்கரில் பாசிப்பருப்பு 1/4 கப் சேர்த்து தண்ணீர் விட்டு 3 விசில் விட்டு எடுக்கவும். இப்போது பாசிப்பருப்பை நன்றாக மசித்து அதையும் சேர்த்துக் கொள்ளவும். இதை 5 நிமிடம் கொதித்க விட்டு தேங்காய் எண்ணெய் 1 தேக்கரண்டி, எழுமிச்சை சாறு சிறிது பிழிந்துவிட்டு கொத்தமல்லி சிறிதளவு தூவி இறக்கவும். சுலையான திருநெல்வேலி ஸ்பெஷல் மாப்பிள்ளை சொதி தயார். நீங்களும் வீட்டில் இந்த ரெசிபியை ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com