சூப்பர் சுவையில் பன்னீர் ஃப்ரைட் ரைஸ்-மாம்பழ பாயாசம் செய்யலாம் வாங்க!

Paneer fried rice
Paneer fried rice and mango payasam recipeImage Credits: Youtube

ன்னைக்கு சுவையான ரோட்டுக் கடையில் செய்யப்படும் டேஸ்டில் பன்னீர் ஃப்ரைட் ரைஸ் மற்றும் மாம்பழ பாயாசம் எப்படி எளிமையாக வீட்டிலேயே செய்யறதுன்னு பாக்கலாம் வாங்க.

பன்னீர் ஃப்ரைட் ரைஸ் செய்ய தேவையான பொருட்கள்;

பன்னீர்-1கப்.

உப்பு- தேவையான அளவு.

மிளகாய் தூள்-1 தேக்கரண்டி

சோளமாவு-1 தேக்கரண்டி.

முட்டைகோஸ்-1கப்.

கேரட்-1கப்.

குடைமிளகாய்-1கப்.

வெங்காயம்-1கப்.

மிளகுத்தூள்-1 தேக்கரண்டி.

மிளகாய் தூள்-1 தேக்கரண்டி.

உப்பு-தேவையான அளவு.

இஞ்சிபூண்டு விழுது-1/2 தேக்கரண்டி.

சோயா சாஸ்-1 தேக்கரண்டி.

தக்காளி சாஸ்-1 தேக்கரண்டி.

எண்ணெய்-தேவையான அளவு.

வெங்காயத்தாள்- தேவையான அளவு.

பாஸ்மதி அரிசி-2கப்.

பன்னீர் ஃப்ரைட் ரைஸ் செய்முறை விளக்கம்:

முதலில் பன்னீரை சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி 1கப் அளவிற்கு எடுத்துக்கொள்ளவும். அதில் தேவையான அளவு உப்பு, 1 தேக்கரண்டி மிளகாய் தூள், சோளமாவு 1 தேக்கரண்டி சேர்த்து பிசைந்து எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுத்துக்கொள்ளவும்.

இப்போது அடுப்பில் கடாயை வைத்து கொஞ்சம் எண்ணெய் விட்டு அதில் முட்டை கோஸ் 1கப், கேரட் 1கப், குடைமிளகாய் 1கப், வெங்காயம் 1கப் பொடியாக நறுக்கி வைத்ததை போட்டு நன்றாக வதக்கவும். இப்போது இஞ்சி பூண்டு விழுது ½ தேக்கரண்டி சேர்த்து கிண்டி விட்ட பின் வேகவைத்து ஆறவைத்த பாஸ்மதி ரைஸ் 2கப், அத்துடன் பொரித்து வைத்திருக்கும் பன்னீர், 1 தேக்கரண்டி மிளகுத்தூள், மிளகாய் தூள் 1 தேக்கரண்டி, உப்பு தேவையான அளவு சேர்த்து கிண்டிவிடவும்.

கடைசியாக சோயா சாஸ் 1 தேக்கரண்டி, தக்காளி சாஸ் 1 தேக்கரண்டி சேர்த்து நன்றாக கிண்டி கடைசியாக வெங்காயத்தாள் சிறிதளவு பொடியாக நறுக்கி சேர்த்துக்கொள்ளவோம். அவ்வளவு தான் சுவையான பன்னீர் ஃப்ரைட் ரைஸ் தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டில் ஒருமுறை டிரை பண்ணி பாருங்கள்.

மாம்பழ பாயாசம் செய்ய தேவையான பொருட்கள்;

மாம்பழம்-2கப்.

ஜவ்வரிசி-1கப்.

முந்திரி-10.

திராட்சை-10.

நெய்- 2 தேக்கரண்டி.

வெல்லம்-1கப்.

ஏலக்காய் தூள்-1 தேக்கரண்டி.

முதலாம் தேங்காய் பால்-1கப்.

இரண்டாவது தேங்காய் பால்-1கப்.

இதையும் படியுங்கள்:
டேஸ்டியான வெஜிடபிள் பாயா-தக்காளி ரசம் செய்யலாம் வாங்க!
Paneer fried rice

மாம்பழ பாயாசம் செய்முறை விளக்கம்;

முதலில் மாம்பழத்தை சின்ன துண்டுகளாக வெட்டி 2கப் எடுத்து வைத்துக்கொள்ளவும். பிறகு தேங்காயை சிறிய துண்டுகளாக வெட்டி மிக்ஸியில் அரைத்து முதல் பால் 1கப், இரண்டாவது பால் 1கப் எடுத்து வைத்துக் கொள்ளவும். ஜவ்வரிசி 1 கப்பை தண்ணீரில் வேக வைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும். பிறகு அடுப்பில் ஒரு பாத்திரத்தில் வெல்லம் 1 கப் சேர்த்து அது மூழ்கும் வரை தண்ணீர் விட்டு நன்றாக கரைந்ததும் வடிகட்டி எடுத்து வைத்துவிடவும்.

இப்போது அடுப்பில் ஒரு கடாயை வைத்து நெய் 2 தேக்கரண்டி சேர்த்து நறுக்கி வைத்திருக்கும் மாம்பழம் 2 கப்பை சேர்த்து வதக்கி விட்டு அதில் கரைத்து வைத்த வெல்லம், இரண்டாவது தேங்காய்ப் பால் 1கப்பை சேர்த்து அத்துடன் வேக வைத்த ஜவ்வரிசி 1கப்பை சேர்த்து நன்றாக கிண்டி விடவும். இப்போது பாயாசம் நன்றாக கெட்டியான பிறகு முதல் தேங்காய் பால் 1 கப்பை சேர்த்து கிண்டவும். இப்போது ஏலக்காய் தூள் 1 தேக்கரண்டி, நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து கிண்டி இறக்கவும். அவ்வளவுதான் அல்டிமேட் டேஸ்டில் மாம்பழ பாயாசம் தயார். இந்த ரெசிப்பியை நீங்களும் ஒருமுறை முயற்சித்து பார்த்துவிட்டு சொல்லுங்க.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com