பன்னீர் கேப்ஸிகம் பரோட்டா வித் பகோடா குருமா செய்யலாம் வாங்க!

Paneer capsicum parotta
Paneer capsicum parotta and pakoda kurma recipesImage Credits: Cooking with Shobha

ன்னீர் சாப்பிடுவதால், பல் மற்றும் எலும்பிற்கு பலம் சேர்க்கிறது, கேன்சர் போன்ற நோய்களை சரிசெய்ய உதவுகிறது, உடல் எடை குறைக்க உதவுகிறது, சுலபமாக ஜீரண செயல்பாட்டிற்கு பயன்படுகிறது, நோய் எதிர்ப்பு சக்தியை மேலும் பலமாக்குவதற்கு உதவுகிறது. இத்தகைய சிறப்புகளை கொண்ட பன்னீரை வைத்து ஒரு சிம்பிள் ரெசிபி செய்யலாம் வாங்க.

பன்னீர் கேப்ஸிகம் பரோட்டா செய்ய தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு-1 கப்.

உப்பு- 1 சிட்டிகை.

எண்ணெய்- சிறிதளவு.

ஸ்டப்பிங் செய்வதற்கு,

பன்னீர்-1கப்.

கேப்ஸிகம்-1 கப்.

வெங்காயம்-1 கப்.

பச்சை மிளகாய்- 1

கொத்தமல்லி -1/2 கப்.

மிளகாய் தூள்-1 தேக்கரண்டி.

சீரகத்தூள்-1 தேக்கரண்டி.

சாட் மசாலா-1 தேக்கரண்டி.

உப்பு- தேவையான அளவு.

நெய்- தேவையான அளவு.

பன்னீர் கேப்ஸிகம் பரோட்டா செய்முறை விளக்கம்:

முதலில் ஒரு பவுலில் கோதுமை மாவு 1கப், உப்பு 1 சிட்டிகை, எண்ணெய் சிறிதளவு சேர்த்து பிசைந்து விட்டு தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து வைத்து கொள்ளவும்.

இப்போது ஒரு பவுலில் துருவிய பன்னீர் 1 கப், பொடியாக நறுக்கிய கேப்ஸிகம் 1கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் 1 கப், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் 1, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி ½ கப், மிளகாய் தூள் 1 தேக்கரண்டி, சீரகத்தூள் 1 தேக்கரண்டி, சாட் மசாலா 1 தேக்கரண்டி, உப்பு தேவையான அளவு இதையெல்லாம் சேர்த்து கலந்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

இப்போது சாப்பாத்தி மாவில் ஒரு உருண்டை எடுத்து நன்றாக தேய்த்து விரித்து கொண்டு அதில் செய்து வைத்திருக்கும் ஸ்டப்பிங்கை நடுவில் வைத்து நான்கு பக்கமும் மூடி இப்போது அதை நன்றாக தேய்த்து தோசைக்கல்லில் போட்டு இரண்டு பக்கமும் நெய் விட்டு நன்றாக வெந்ததும் எடுத்து விடலாம். அவ்வளவு தான் வேற லெவல் சுவையில் பன்னீர் கேப்ஸிகம் பரோட்டா தயார். குழந்தைகளுக்கு இதை லஞ்ச் பாக்ஸில் வைத்து தரலாம். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டில் ஒருமுறை முயற்சி செய்து பாருங்கள்.

பகோடா குருமா செய்ய தேவையான பொருட்கள்;

பேஸ்ட் செய்வதற்கு,

தேங்காய்-1கப்.

சோம்பு-1தேக்கரண்டி.

கசகசா-சிறிதளவு.

முந்திரி-10.

கிரேவி செய்வதற்கு,

பட்டை-1

கிராம்பு-1

ஏலைக்காய்-4

சோம்பு-சிறிதளவு.

கருவேப்பிலை-1கைப்பிடி.

வெங்காயம்-1

தக்காளி-1

பச்சை மிளகாய்-2

இஞ்சி பூண்டு பேஸ்ட்-1 தேக்கரண்டி.

உப்பு- தேவையான அளவு.

மஞ்சள் தூள்-1/2 தேக்கரண்டி.

மிளகாய் தூள்-1தேக்கரண்டி.

கரம் மசாலா-1 தேக்கரண்டி.

தனியா தூள்-1 தேக்கரண்டி.

புதினா-1 கைப்பிடி.

பகோடா செய்வதற்கு,

பூண்டு-5 பல்.

பச்சை மிளகாய்-4

சோம்பு-1 தேக்கரண்டி.

மிளகாய் தூள்-1 தேக்கரண்டி.

கருவேப்பிலை-1 கைப்பிடி.

வெங்காயம்-1

உப்பு தேவையான அளவு.

அரிசி மாவு- 1 கைப்பிடி.

கடலை மாவு-1 கப்.

நெய்- சிறிதளவு.

எண்ணெய்- தேவையான அளவு.

இதையும் படியுங்கள்:
டேஸ்டியான சேமியா பகாளாபாத் - நெல்லை எள்ளுப்பொடி செய்யலாம் வாங்க!
Paneer capsicum parotta

பகோடா குருமா செய்முறை விளக்கம்;

முதலில் துருவிய தேங்காய் 1கப், முந்திரி 10, சோம்பு 1 தேக்கரண்டி, கசகசா சிறிதளவு சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

இப்போது ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் ஊற்றி பட்டை 1, கிராம்பு 1, ஏலக்காய் 4, சோம்பு சிறிது, கருவேப்பிலை கைப்பிடி, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் 2, பொடியாக நறுக்கிய வெங்காயம் 1 போட்டு நன்றாக வதக்கவும். பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் 1 தேக்கரண்டி, பொடியாக நறுக்கிய தக்காளி 1, உப்பு தேவையான அளவு, மஞ்சள் தூள் ½ தேக்கரண்டி, தனியா தூள் 1 தேக்கரண்டி, மிளகாய்த்தூள் 1 தேக்கரண்டி, கரம் மசாலா 1 தேக்கரண்டி இவற்றையெல்லாம் சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும். இப்போது தண்ணீர் 1 டம்ளர் சேர்த்து விட்டு புதினா 1 கைப்பிடி சேர்த்து அரைத்து வைத்திருக்கும் தேங்காய் முந்திரி பேஸ்ட்டை இத்துடன் கலந்து கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நன்றாக கிண்டி விட்டு கொதிக்கவிடவும்.

இப்போது பூண்டு 5 பல், பச்சை மிளகாய் 4, சோம்பு 1 தேக்கரண்டி சேர்த்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். ஒரு பவுலில் பொடியாக நறுக்கிய வெங்காயம் 1, பொடியாக நறுக்கிய கருவேப்பிலை 1 கைப்பிடி அளவு, அரைத்து வைத்திருக்கும் பேஸ்ட், உப்பு சிறிதளவு, மிளகாய் தூள் 1 தேக்கரண்டி இவற்றை சேர்த்து கிளறி விட்ட பின் அரிசி மாவு 1 கைப்பிடி, கடலை மாவு 1கப், நெய் சிறிதளவு, தண்ணீர் சேர்த்து பகோடா போல எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுக்கவும்.

கிரேவி நன்றாக கொதித்து தயாராகியிருக்கும். இப்போது செய்து வைத்திருக்கும் பகோடாவை கிரேவியில் போட்டு நெய் சிறிதளவு ஊற்றி கிண்டி இறக்கினால் சுவையான பக்கோடா குருமா தயார். நீங்களும் கண்டிப்பாக வீட்டில் ஒருமுறை முயற்சி செய்து பாருங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com