டேஸ்டியான சேமியா பகாளாபாத் - நெல்லை எள்ளுப்பொடி செய்யலாம் வாங்க!

Semiya bagala bath
Semiya bagala bath with ellu podi recipesImage Credits: Nithya's Kitchen
Published on

யிர்சாதம் செய்வது போலவே சாதத்திற்கு மாற்றாக சேமியாவை பயன்படுத்த வேண்டும். இந்த சிம்பிள் ரெசிபியின் சுவை அல்டிமேட்டாக இருக்கும். சரி வாங்க, சேமியா பகலாபாத் எப்படி செய்யறதுன்னு பாக்கலாம்.

சேமியா பகலாபாத் செய்ய தேவையான பொருட்கள்:

சேமியா-1கப்.

கேரட்-1 கப்.

வரமிளகாய்-2

பச்சை மிளகாய்-1

கடுகு-1 தேக்கரண்டி.

உளுந்து-1 தேக்கரண்டி.

கடலை பருப்பு-1 தேக்கரண்டி.

இஞ்சி-சிறு துண்டு.

கொத்தமல்லி சிறிதளவு.

கருப்பு திராட்சை- சிறிதளவு.

தயிர்-1 கப்.

கருவேப்பிலை- சிறிதளவு.

எண்ணெய்- தேவையான அளவு.

உப்பு- தேவையான அளவு.

சேமியா பகலாபாத் செய்முறை விளக்கம்:

முதலில் அடுப்பில் பாத்திரம் வைத்து தண்ணீரை கொதிக்கவிடவும். தண்ணீர் நன்றாக கொதித்ததும் சிறிது உப்பு சேர்த்து கலக்கி, 1 கப் சேமியாவை சேர்க்கவும். சேமியா நன்றாக வெந்ததும் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

இப்போது ஒரு கடாயில் எண்ணெய் விட்டு அதில் கடுகு 1 தேக்கரண்டி, கடலை பருப்பு 1 தேக்கரண்டி,உளுந்து 1 தேக்கரண்டி, பொடியாக நறுக்கிய இஞ்சி சிறுதுண்டு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் 1 , வரமிளகாய் 2, கருப்பிலை சிறிதளவு சேர்த்து வதக்கி எடுத்துக் கொள்ளவும்.

இப்போது வேகவைத்த சேமியாவை ஒரு பவுலில் மாற்றிவிட்டு துருவிய கேரட் 1கப் சேர்த்து தாளித்து எடுத்ததையும் சேர்த்து நன்றாக கலந்து விடவும். இத்துடன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சிறிதளவு, தயிர் 1 கப் நன்றாக கிண்டி விட்டு கடைசியாக கருப்பு திராட்சை சேர்த்து கிண்டி விட்டு தட்டில் மாற்றி மேலே அழகுக்கு ஒரு புதினா இலை வைத்து பரிமாறவும். சூப்பர் டேஸ்டான பகலாபாத் தயார். நீங்களும் ஒருமுறை வீட்டில் செய்து பார்த்துட்டு சொல்லுங்க.

நெல்லை எள்ளுப் பொடி செய்ய தேவையான பொருட்கள்:

பூண்டு-15 பல்.

கருவேப்பிலை-சிறிதளவு.

வரமிளகாய்-5

புளி-சிறிதளவு.

கருப்பு உளுந்து -1 கப்.

கருப்பு எள்-1கப்.

பெருங்காய தூள்-சிறிதளைவு.

உப்பு-1/4 தேக்கரண்டி.

வெல்லம்-சிறிதளவு.

இதையும் படியுங்கள்:
செட்டிநாடு ஸ்பெஷல் கும்மாயம் ஸ்வீட் - மசாலா பிரட் செய்யலாம் வாங்க!
Semiya bagala bath

நெல்லை எள்ளுப் பொடி செய்முறை விளக்கம்;

முதலில் ஃபேனில் சிறிது எண்ணெய் சேர்த்து பூண்டு 15 பல், கருவேப்பிலை சிறிதளவு சேர்த்து வறுத்து எடுத்து கொள்ளவும். இப்போது வரமிளகாய் 5, புளி சிறிதளவு வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளவும். இப்போது 1 கப் கருப்பு உளுந்தையும் வறுத்து அத்துடன் சேர்த்து வைத்துக்கொள்ளவும். கருப்பு உளுந்துக்கு சமமாக கருப்பு எள்ளையும் சேர்க்க வேண்டும். எள் நன்றாக வறுப்பட்டதும் இப்போது எல்லாவற்றையும் மிக்ஸியில் மாற்றி அதில் சிறிது பெருங்காயம்,  ¼ தேக்கரண்டி உப்பு, வெல்லம் சிறிது சேர்த்து நன்றாக அரைக்கவும்.

இப்போது எள்ளு பொடியை ஒரு பவுலில் போட்டு அத்துடன் நல்லெண்ணை விட்டு சாப்பிட்டால் செம டேஸ்டாக இருக்கும். இதை இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ளலாம் செம டேஸ்டாக இருக்கும். நீங்களும் வீட்டில் ட்ரை பண்ணி பார்த்துட்டு சொல்லுங்க.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com