நாவூர வைக்கும் வேர்க்கடலை குழம்பு - வெண்டைக்காய் துவையல்!

A mouth-watering Peanut gravy-ladies finger Dip!
Arokya Samayal tips
நான்சி மலர்

வணக்கம். என் பெயர் நான்சி மலர். என்னைப் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டியதற்கு நன்றி. நான் B.E. Computer science Engineering முடித்துள்ளேன். எனக்கு சிறுவயது முதலே எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு. ‘எழுத்துக்கள் மூலம் நம் எண்ணங்களை எளிதில் வெளிப்படுத்த முடியும்’ என்று நம்புகிறேன். கட்டுரைகள், கவிதைகள் எழுதுவதில் அனுபவம் உண்டு. Content writing துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது. மோட்டிவேஷன், பயணம், ஆரோக்கியம், ஃபேஷன், ஆன்மீகம் போன்ற கட்டுரை எழுதுவதில் ஆர்வம் அதிகம். என்னுடைய எழுத்து வாசகர்களாகிய உங்களை கவர்ந்தால், அது எனக்கு மகிழ்ச்சியே! ‘ இன்னும் எதிர்காலத்தில் உங்கள் மனதில் என் எழுத்துக்கள் மூலம் இடம் பிடிப்பேன்’ என்று முழுமையாக நம்புகிறேன்.

Updated on: 

இன்றைக்கு சுவையான வேர்க்கடலை குழம்பு மற்றும் வெண்டைக்காய் துவையல் ரெசிபியை சுலபமாக எப்படி செய்யறதுன்னு பார்ப்போம்.

வேர்க்கடலை குழம்பு செய்ய தேவையான பொருட்கள்.

எண்ணெய்-2 தேக்கரண்டி.

கடுகு-1தேக்கரண்டி.

சீரகம்-1 தேக்கரண்டி.

வெந்தயம்-1 தேக்கரண்டி.

பூண்டு-5.

சின்ன வெங்காயம்-10

தக்காளி-1.

பச்சை மிளகாய்-2

கருவேப்பிலை-சிறிதளவு.

உப்பு-தேவையான அளவு.

மஞ்சள் தூள்-1 தேக்கரண்டி.

மிளகாய் தூள்-1 தேக்கரண்டி.

மல்லித்தூள்-1 தேக்கரண்டி.

வேர்க்கடலை-1/4 கிலோ.

தேங்காய்-1/4 மூடி.

புளி-நெல்லிக்காய் அளவு.

வேர்க்கடலை குழம்பு செய்முறை விளக்கம்.

முதலில் கடாயில் 2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு கடுகு 1 தேக்கரண்டி, சீரகம் 1 தேக்கரண்டி, வெந்தயம் 1 தேக்கரண்டி, பூண்டு 5, சின்ன வெங்காயம் 10 சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளவும்.

இப்போது இதில் கருவேப்பிலை சிறிதளவு, பச்சை மிளகாய் 2, நறுக்கிய தக்காளி 1, கல் உப்பு தேவையான அளவு சேர்த்து வதக்கிக் கொள்ளவும். இப்போது 1 தேக்கரண்டி மஞ்சள் தூள்,  1 தேக்கரண்டி மிளகாய் தூள், 1 தேக்கரண்டி மல்லித்தூள் சேர்த்து கலந்துவிட்டு ¼ கிலோ வேர்க்கடலையை கழுவி சேர்த்து எண்ணெய்யில் வதக்கவும்.

ஒரு நெல்லிக்காய் அளவு புளியை கரைத்து ஊற்றிக்கொள்ளவும். மிக்ஸியில் ¼ மூடி தேங்காயை அரைத்து சேர்த்துக் கொள்ளவும். இப்போது குழம்பில் எண்ணெய் பிரிந்து வரும்வரை வைத்து இறக்கவும். சுவையான வேர்க்கடலை குழம்பு தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.

வெண்டைக்காய் துவையல் செய்ய தேவையான பொருட்கள்.

எண்ணெய்-தேவையான அளவு.

கடுகு-1 தேக்கரண்டி.

சீரகம்-1 தேக்கரண்டி.

மல்லி-1 தேக்கரண்டி.

பூண்டு-5.

வரமிளகாய்-5

கருவேப்பிலை-சிறிதளவு.

கொத்தமல்லி-சிறிதளவு.

வெண்டைக்காய்-1/4 கிலோ.

தக்காளி-2

புளி-சிறு துண்டு.

தாளிக்க,

எண்ணெய்-1 குழிக்கரண்டி.

கடுகு-1 தேக்கரண்டி.

சீரகம்-1 தேக்கரண்டி.

பூண்டு-4.

இதையும் படியுங்கள்:
அல்டிமேட் சுவையில் கரும்புச்சாறு அல்வா-சென்னா போடா ரெசிபிஸ்!
A mouth-watering Peanut gravy-ladies finger Dip!

வெண்டைக்காய் துவையல் செய்முறை விளக்கம்.

முதலில் கடாயில் 1 தேக்கரண்டி எண்ணெய் விட்டு 1 தேக்கரண்டி கடுகு, 1 தேக்கரண்டி சீரகம், 1 தேக்கரண்டி கொத்தமல்லி, 5 பூண்டு, 5 வரமிளகாய், கருவேப்பிலை  சிறிதளவு, கொத்தமல்லி சிறிதளவு சேர்த்து நன்றாக வதக்கி மிக்ஸியில் அரைத்து வைத்துக் கொள்ளவும்.

கடாயில் 1 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து ¼ கிலோ வெண்டைக்காயை சேர்த்து வழவழப்பு போகும் வரை வதக்கிக் கொள்ளவும். இதில் நறுக்கிய  தக்காளி 2, சின்ன அளவு புளி ஆகியவற்றை சேர்த்து வதக்கிவிட்டு அரைத்து வைத்திருக்கும் பவுடருடன் வெண்டைக்காயை சேர்த்து தண்ணீர்விடாமல் அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

இப்போது கடாயில் 1 குழிக்கரண்டி எண்ணெய் விட்டு 1 தேக்கரண்டி கடுகு, 1 தேக்கரண்டி சீரகம், பூண்டு 4 சேர்த்து இந்த எண்ணெய்யை வெண்டைக்காய் துவையல் மீது ஊற்றி கலந்துவிடவும். அவ்வளவுதான் சுவையான வெண்டைக்காய் துவையல் தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பாருங்கள்.

logo
Kalki Online
kalkionline.com