மணக்கும் ராஜஸ்தானி ஸ்பெஷல் கேவர் ஸ்வீட்- வாழைக்காய் ரவா வறுவல் செய்யலாம் வாங்க!

Ghevar sweet
Ghevar sweet and Banana rava fry recipesImage Credits: Pinterest
Published on

ராஜஸ்தானின் மிகவும் பாரம்பரியமான ஸ்வீட் கேவராகும். இதை தீஜ், ரக்ஷாபந்த் போன்ற பண்டிகைகளுக்கு செய்வார்கள். கிட்டத்தட்ட இந்த இனிப்பு பார்ப்பதற்கு தேன்கூடு போல இருக்கும். இதை தயாரிப்பதே ஒரு கலைநயத்துடன் செய்ய வேண்டும் என்று பரம்பரை பரம்பரையாக பின் தொடருகிறார்கள். அத்தகைய சிறப்புமிக்க ரெசிபியை சிம்பிளாக வீட்டிலேயே செய்யலாம் வாங்க.

ராஜஸ்தானி ஸ்பெஷல் கேவர் ஸ்வீட் செய்ய தேவையான பொருட்கள்!

சக்கரை-1 கப்.

ஏலக்காய்-4

குங்குமப்பூ-சிறிதளவு.

நெய்-1/4 கப்.

ஐஸ்கட்டிகள்-5

மைதா-1கப்.

பால்-1கப்.

தண்ணீர்-1 ½ கப்.

எழுமிச்சைப் பழம்-1/2 மூடி.

பாதாம், பிஸ்தா நறுக்கியது- சிறிதளவு.

பால்கோவா- சிறிதளவு.

எண்ணெய்- தேவையான அளவு.

ராஜஸ்தானி ஸ்பெஷல் கேவார் ஸ்வீட் செய்முறை விளக்கம்!

முதலில் ஒரு பாத்திரத்தில் 1 கப் சக்கரைக்கு ¼ கப் தண்ணீர் ஊற்றி ஏலக்காய் 4, குங்குமப்பூ சிறிதளவு சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து ஒரு கம்பி பதம் வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கிவிடவும்.

இப்போது ஒரு பெரிய பாத்திரத்தில் ¼ கப் நெய்யுடன் 5 ஐஸ்கட்டிகள் சேர்த்து நன்றாக கிண்டிவிடவும்.  நெய்யை அவ்வாறு கிண்டிவிடும் போது வெண்ணெய் பதத்திற்கு வந்துவிடும். அதில் 1 கப் மைதா, 1கப் பால், 1 ½ கப் தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் நன்றாக கலந்துவிட்டு வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். எழுமிச்சை ½ மூடியை பிழிந்து விட்டுக் கொள்ளவும்.

இப்போது கடாயில் எண்ணெய்யை நன்றாக கொதிக்க விட்டு அதில் இந்த மாவை சிறிது சிறிதாக ஊற்றவும். இந்த மாவை ஓரத்தில் போய் படிந்து வடை போன்ற வடிவத்தில் உருவாகும். மாவு நடுவிலே படியாமல் இருக்க நடுவிலே மட்டும் அவ்வபோது கிண்டிவிடவும். இப்படியே மாவை சிறிது சிறிதாக ஊற்றும் போது கேவர் உருவாகி விடும். நன்றாக கோல்டன் பிரவுன் நிறத்தில் வந்ததும் அடுப்பிலிருந்து எடுத்து விடவும்.

இதை இப்போது ஒரு பிளேட்டில் எடுத்து வைத்து விட்டு செய்து வைத்திருந்த சுகர் சிரபை இதன் மீது ஊற்றவும். பாலை சுண்ட காய்ச்சினால் பால்கோவா கிடைக்கும். அதையும் இதன் மீது தடவி பிஸ்தா, பாதாம் நறுக்கி தூவிக்கொள்ளவும். அவவ்ளவு தான். சுவையான கேவர் ஸ்வீட் தயார். நீங்களும் இந்த ரெசிப்பியை வீட்டிலே டிரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.

வாழைக்காய் ரவை வறுவல் செய்ய தேவையான பொருட்கள்!

வாழைக்காய்-4

இஞ்சிபூண்டு விழுது-சிறிதளவு.

எழுமிச்சை சாறு-1 மூடி.

மிளகாய் தூள்-1 தேக்கரண்டி.

தனியா தூள்-1/2 தேக்கரண்டி.

மஞ்சள் தூள்-1/4 தேக்கரண்டி.

மிளகுத்தூள்-1/2 தேக்கரண்டி.

உப்பு- தேவையான அளவு.

அரிசி மாவு-1 தேக்கரண்டி.

ரவை-தேவையான அளவு.

எண்ணெய்- தேவையான அளவு.

இதையும் படியுங்கள்:
அல்டிமேட் சுவையில் நாவல்பழ அல்வா- ப்ளம் கேக் செய்யலாம் வாங்க!
Ghevar sweet

வாழைக்காய் ரவை வறுவல் செய்முறை விளக்கம்!

முதலில் வாழைக்காயை சிறிது சிறிதாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். தண்ணீரிலே கழுவி நன்றாக வடிகட்டி விடவும்.

இப்போது இதில் கொஞ்சமாக இஞ்சி பூண்டு விழுது, எழுமிச்சை சாறு 1 மூடி, மிளகாய் தூள் 1 தேக்கரண்டி, மஞ்சள் தூள் ¼ தேக்கரண்டி, தனியா தூள் ½ தேக்கரண்டி, மிளகுத்தூள் ½ தேக்கரண்டி, அரிசி மாவு 1 தேக்கரண்டி, உப்பு தேவையான அளவு சேர்த்து நன்றாக கிண்டிவிடவும்.

இப்போது ஒரு தட்டில் ரவாவை எடுத்துக்கொண்டி இதை அதில் போட்டு நன்றாக எல்லா பக்கமும் ஒட்டுவது போன்று நன்றாக கிளறிவிடவும். இப்போது இதை நன்றாக கொதிக்கும் எண்ணெய்யில் பொன்னிறமாக பொரித்து எடுத்தால் டேஸ்டியான வாழைக்காய் ரவா வறுவல் தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com