அல்டிமேட் சுவையில் கரும்புச்சாறு அல்வா-சென்னா போடா ரெசிபிஸ்!

sugarcane juice halwa-senna poda recipe
Published on

ன்றைக்கு டேஸ்டியான கரும்புச்சாறு அல்வா மற்றும் சென்னா போடா ரெசிபிஸை சிம்பிளாக வீட்டிலேயே எப்படி செய்யறதுன்னு பார்ப்போம்.

கரும்புச்சாறு அல்வா செய்ய தேவையான பொருட்கள்.

கரும்பு-2 துண்டு.

முந்திரி-10

திராட்சை-10

நெய்-1 குழிக்கரண்டி.

ஏலக்காய் தூள்-1 தேக்கரண்டி.

வெல்லம்-1/2 கப்.

சோளமாவு-2 தேக்கரண்டி.

கோதுமை மாவு-2 தேக்கரண்டி.

கரும்புச்சாறு அல்வாசெய்முறை விளக்கம்.

முதலில் கரும்பு 2 துண்டு எடுத்துக்கொண்டு அதை தோல் சீவிவிட்டு சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி மிக்ஸியில் போட்டு அரைத்து சாறு பிழிந்து எடுத்துக்கொள்ளவும்.

இப்போது கடாயில் ½ கப் வெல்லத்தில் ¼ கப் தண்ணீர் வீட்டு நன்றாக வெல்லம் கரையும் வரை வைத்து எடுத்துக் கொள்ளவும். இப்போது ஒரு பவுலில் 2 தேக்கரண்டி சோளமாவு,  2 தேக்கரண்டி கோதுமை மாவு சேர்த்து கரும்புச்சாறு ஊற்றி கரைத்துக்கொள்ளவும்.

அடுப்பில் ஃபேனை வைத்து நெய் 1 குழிக்கரண்டி சேர்த்து முந்திரி 10, திராட்சை 10 சேர்த்து நன்றாக வறுத்து எடுத்துக்கொள்ளவும். இப்போது அதே ஃபேனில் கரும்புச்சாறு ஊற்றி அதில் கரைத்து வைத்திருக்கும் மாவையும், வெல்லத்தையும் சேர்த்து கைவிடாமல் கிண்டவும்.  

இதில் 1 தேக்கரண்டி ஏலக்காய் தூள் சேர்த்து கிண்டிவிடவும். கடைசியாக, வறுத்து வைத்திருக்கும் முந்திரி, திராட்சையை சேர்த்து நன்றாக அல்வா பதத்திற்கு கிண்டி இறக்கவும். அவ்வளவுதான் சுவையான கரும்புச்சாறு அல்வா தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.

சென்னா போடா செய்ய தேவையான பொருட்கள்.

பால்-1 லிட்டர்.

எழுமிச்சை சாறு-1/2 மூடி.

ரவை-1/4 கப்.

சர்க்கரை-1/2 கப்.

ஏலக்காய் தூள்-1 தேக்கரண்டி.

திரிந்த பால் தண்ணீர்-1/4 கப்.

நெய்-தேவையான அளவு.

இதையும் படியுங்கள்:
சூப்பர் சுவையில் மீல்மேக்கர் வறுவல் - வாழைப்பூ பொரியல் செய்யலாமா?
sugarcane juice halwa-senna poda recipe

சென்னா போடா செய்முறை விளக்கம்.

முதலில் 1 லிட்டர் பாலை நன்றாக காய்ச்சி அதில் ½ மூடி எழுமிச்சைசாறு விட்டு பாலை திரிய வைத்துக் கொள்ளவும். இப்போது திரிந்த பாலை வடிகட்டி தண்ணீர் விட்டு அலசிய பிறகு அதை பவுலில் மாற்றி வைத்துக் கொள்ளவும்.

இப்போது பவுலில் ½ கப் சர்க்கரை, ¼ கப் ரவை, 1 தேக்கரண்டி ஏலக்காய் பொடியும், ¼ கப் திரிந்த பால் தண்ணீர் சேர்த்து நன்றாக கிளறி வைத்துக்கொள்ளவும்.

இப்போது ஒரு பாத்திரத்தில் வாழையிலையை சின்னதாக நறுக்கி அதில் நெய்தடவி வைத்துவிட்டு அதில் செய்து வைத்திருக்கும் கலவையை சேர்த்து அதை இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைத்து 20 நிமிடம் ஆவியில் வேகவைத்து எடுத்தால் சுவையான சென்னா போடா தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பாருங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com