சூப்பர் சுவையில் மீல்மேக்கர் வறுவல் - வாழைப்பூ பொரியல் செய்யலாமா?

Mealmaker Roast in Super Flavor
tasty special recipes
நான்சி மலர்

வணக்கம். என் பெயர் நான்சி மலர். என்னைப் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டியதற்கு நன்றி. நான் B.E. Computer science Engineering முடித்துள்ளேன். எனக்கு சிறுவயது முதலே எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு. ‘எழுத்துக்கள் மூலம் நம் எண்ணங்களை எளிதில் வெளிப்படுத்த முடியும்’ என்று நம்புகிறேன். கட்டுரைகள், கவிதைகள் எழுதுவதில் அனுபவம் உண்டு. Content writing துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது. மோட்டிவேஷன், பயணம், ஆரோக்கியம், ஃபேஷன், ஆன்மீகம் போன்ற கட்டுரை எழுதுவதில் ஆர்வம் அதிகம். என்னுடைய எழுத்து வாசகர்களாகிய உங்களை கவர்ந்தால், அது எனக்கு மகிழ்ச்சியே! ‘ இன்னும் எதிர்காலத்தில் உங்கள் மனதில் என் எழுத்துக்கள் மூலம் இடம் பிடிப்பேன்’ என்று முழுமையாக நம்புகிறேன்.

Updated on: 

இன்றைக்கு சுவையான மீல்மேக்கர் வறுவல் மற்றும் வாழைப்பூ பொரியல் ரெசிபியை வீட்டிலேயே சிம்பிளாக எப்படி செய்யறதுன்னு பார்ப்போம்.

மீல்மேக்கர் வறுவல் செய்ய தேவையான பொருட்கள்.

மீல்மேக்கர்-100 கிராம்.

மிளகு-2 தேக்கரண்டி.

சோம்பு-2 தேக்கரண்டி.

வரமிளகாய்-4

எண்ணெய்-2 தேக்கரண்டி.

சீரகம்-1/4 தேக்கரண்டி.

கிராம்பு-3.

வெங்காயம்-2.

தக்காளி-1.

கருவேப்பிலை-சிறிதளவு.

இஞ்சிபூண்டு பேஸ்ட்-1 தேக்கரண்டி.

மஞ்சள் தூள்-1/4 தேக்கரண்டி.

உப்பு-சிறிதளவு.

கரம் மசாலா-1 தேக்கரண்டி.

மீல்மேக்கர் வறுவல் செய்முறை விளக்கம்.

முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து நன்றாக கொதிக்கவிடவும். அதில்100 கிராம் மீல்மேக்கரை போட்டு 1 நிமிடம் கிண்டிவிட்டு வடிக்கட்டி எடுத்துக்கொள்ளவும். இப்போது அதை நன்றாக பிழிந்துவிட்டு எடுத்து வைத்துக் கொள்ளவும்.

இப்போது ஃபேனில் 2 தேக்கரண்டி மிளகு, 2 தேக்கரண்டி சோம்பு, 4 வரமிளகாய் சேர்த்து வறுத்து எடுத்து மிக்ஸியில் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். கடாயில் 2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு ¼ தேக்கரண்டி சீரகம், 3 கிராம்பு, 2 பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், கருவேப்பிலை சிறிதளவு, பொடியாக நறுக்கிய தக்காளி 1 , இஞ்சி பூண்டு பேஸ்ட் 1 தேக்கரண்டி சேர்த்து நன்றாக வதங்கியதும் எடுத்து வைத்திருக்கும் மீல் மேக்கரை சேர்த்துக் கொள்ளலாம்.

இதில் வறுத்து பொடி செய்து வைத்த மசாலா அத்துடன் மஞ்சள் தூள் ¼ தேக்கரண்டி, உப்பு சிறிதளவு சேர்த்து நன்றாக கலந்துவிடவும். இதில் தண்ணீர் சிறிது விட்டு கிளறிவிட்டு 5 நிமிடம் மூடிப்போட்டு வேகவிடவும். கடைசியாக கரம் மசாலா 1 தேக்கரண்டி, கருவேப்பிலை சிறிதளவு சேர்த்து கலந்துவிட்டு இறக்கவும். அவ்வளவு தான் சுவையான மீல்மேக்கர் வறுவல் தயார். நீங்களும் இந்த ரெசிபியை  வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.

வாழைப்பூ பொரியல் செய்ய தேவையான பொருட்கள்.

வாழைப்பூ-1

மஞ்சள்-தூள்-1/4 தேக்கரண்டி.

உப்பு-சிறிதளவு.

பொரியல் செய்ய,

எண்ணெய்-2 தேக்கரண்டி.

கடுகு-1 தேக்கரண்டி.

கடலைப்பருப்பு-1 தேக்கரண்டி.

கருவேப்பிலை-சிறிதளவு.

வெங்காயம்-1

பூண்டு-2

பச்சை மிளகாய்-2.

மஞ்சள் தூள்-1/4 தேக்கரண்டி.

உப்பு-தேவையான அளவு.

தேங்காய் துருவல்-சிறிதளவு.

இதையும் படியுங்கள்:
சுவையான தக்காளி துவையல் - பூண்டு தொக்கு செய்யலாம் வாங்க!
Mealmaker Roast in Super Flavor

வாழைப்பூ பொரியல் செய்முறை விளக்கம்.

முதலில் வாழைப்பூ ஒன்று எடுத்து அதில் உள்ள பூவை சுத்தம் செய்து பொடிப்பொடியாக நறுக்கி மஞ்சள் தூள் ¼ தேக்கரண்டி, உப்பு சிறிதளவு சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்.

இப்போது ஃபேனில் எண்ணெய் 2 தேக்கரண்டி சேர்த்து கடுகு 1 தேக்கரண்டி, கடலைப்பருப்பு 1 தேக்கரண்டி, கருவேப்பிலை சிறிதளவு, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் 1, நறுக்கிய பூண்டு 2, பச்சை மிளகாய் 2 , சேர்த்து வதக்கிவிட்டு இத்துடன் சீரகத்தூள் 1 தேக்கரண்டி, மஞ்சள் தூள் ¼ தேக்கரண்டி, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கிய பிறகு வெட்டி வைத்திருக்கும் வாழைப்பூவை இத்துடன் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு 5 நிமிடம் மூடி வேகவிடவும்.

கடைசியாக, துருவிய தேங்காய் சிறிதளவு சேர்த்து கிளறிவிட்டு இறக்கினால், சுவையான வாழைப்பூ பொரியல் தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.

logo
Kalki Online
kalkionline.com