இன்றைக்கு சுவையான கரும்புச்சாறு பொங்கல் மற்றும் திருப்பதியில் செய்யப்படும் இனிப்பான லட்டு ரெசிபிஸை வீட்டிலேயே சுலபமாக எப்படி செய்வது என்று பார்ப்போம்.
கரும்புச்சாறு பொங்கல் செய்ய தேவையான பொருட்கள்.
நொய்யரிசி-1 கப்.
ஏலக்காய்-3
உப்பு-1 சிட்டிகை.
தண்ணீர்-1 ½ கப்.
கரும்புச்சாறு-3 கப்.
வெல்லம்-1/4 கப்.
நெய்-4 தேக்கரண்டி.
முந்திரி-10
திராட்சை-10
கரும்புச்சாறு பொங்கல் செய்முறை விளக்கம்.
முதலில் பவுலில் 1 கப் நொய்யரிசியை நன்றாக கழுவிய பிறகு குக்கரில் சேர்த்து 3 ஏலக்காய் தட்டி போட்டு, 1 சிட்டிகை உப்பு, 1 ½ கப் தண்ணீர் சேர்த்து 2 விசில் விட்டு எடுத்து இப்போது பாதி வெந்திருக்கும் சாதத்தில் 3 கப் கரும்புச்சாறு ஊற்றி 2 விசில் மறுபடியும் விட்டு எடுக்க வேண்டும். இதில் அதிக இனிப்பிற்கு ¼ கப் வெல்லம் சேர்த்து நன்றாக இளகி வந்ததும்.
இப்போது ஒரு ஃபேனில் நெய் 4 தேக்கரண்டி ஊற்றி அதில் 10 முந்திரி, 10 திராட்சையை வறுத்து எடுத்து பொங்கலுடன் சேர்த்தால் அட்டகாசமான கரும்புச்சாறு பொங்கல் தயார். நீங்களும் இந்த சிம்பிள் ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பாருங்கள்.
திருப்பதி லட்டு செய்ய தேவையான பொருட்கள்.
சர்க்கரை-2 தேக்கரண்டி.
அரிசி மாவு-2 தேக்கரண்டி.
பால்-4 தேக்கரண்டி.
கடலை மாவு-1கப்.
பால்-1 ½ கப்.
நெய்-2 கப்.
பாகு செய்ய,
சர்க்கரை-1 கப்.
தண்ணீர்- ½ கப்.
கல்கண்டு-2 தேக்கரண்டி.
நெய்-4 தேக்கரண்டி.
பச்சை கற்பூரம்-1 சிட்டிகை.
முந்திரி-10
திராட்சை-10
ஏலக்காய்-4
திருப்பதி லட்டு செய்முறை விளக்கம்.
முதலில் ஒரு பாத்திரத்தில் 2 தேக்கரண்டி சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும். அதனுடன் 2 தேக்கரண்டி அரிசி மாவு, 4 தேக்கரண்டி பால் சேர்த்து நன்றாக கலந்துவிடவும். சர்க்கரை நன்றாக கரைந்ததும் 1 கப் கடலை மாவை சலித்துவிட்டு இத்துடன் சேர்த்துக்கொள்ளவும். இப்போது இத்துடன் 1 ½ கப் பால் சேர்த்து கலந்துவிட்டுக் கொள்ளவும்.
இப்போது கடாயில் 2 கப் நெய் சேர்த்து உருகியதும் கரண்டியை பயன்படுத்தி முத்து முத்தாக பூந்தியை பொரித்து எடுத்துக்கொள்ளவும். மிதமான சூட்டில் 2 நிமிடம் பொரித்து எடுத்துக்கொள்ளவும்.
இப்போது ஃபேனில் ½ கப் தண்ணீர், 1 கப் சர்க்கரையை சேர்த்து கலந்துவிட்டு 1 கம்பி பதம் வந்ததும் இதில் செய்து வைத்திருக்கும் பூந்தியை சேர்த்து கலந்துவிட்டுக் கொள்ளவும். 10 நிமிடம் நன்றாக சர்க்கரை பாகில் பூந்தி ஊறியதும் மிக்ஸியில் போட்டு பொடியாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
இப்போது இத்துடன் நெய்யில் வறுத்த முந்திரி 10, திராட்சை 10, கல்கண்டு 2 தேக்கரண்டி, 1 சிட்டிகை பச்சைகற்பூரம், ஏலக்காய் 4, நெய் 4 தேக்கரண்டி சேர்த்து பிசைந்து உருண்டைகளாக உருட்டி எடுத்தால் டேஸ்டியான திருப்பதி லட்டு தயார். நீங்களும் வீட்டில் இந்த ரெசிபியை ட்ரை பண்ணிப் பாருங்கள்.