சூப்பர் சுவையில் ABC அல்வா-சோன்பப்டி செய்யலாம் வாங்க!

tasty halwa recipes
tasty halwa recipes
Published on

ன்றைக்கு சூப்பர் சுவையில் ABC அல்வா மற்றும் சோன்பப்டி ரெசிபிஸை வீட்டிலேயே ஈஸியா எப்படி செய்யலாம்னு பார்ப்போம்.

ABC அல்வா செய்ய தேவையான பொருட்கள்;

ஆப்பிள்-1

பீட்ரூட்-1

கேரட்-1

சர்க்கரை-2 கப்.

சோளமாவு-1 கப்.

ஏலக்காய்-5

நெய்-1 கப்.

முந்திரி-10.

ABC அல்வா செய்முறை விளக்கம்;

ஆப்பிள் 1, பீட்ரூட் 1, கேரட் 1 சிறிதாக நறுக்கிய துண்டுகளை மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் விட்டு நன்றாக அரைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.

இப்போது வடிகட்டி எடுத்த கலவையில் ஒரு அகலமான பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து 1 கப் சோள மாவு சேர்த்து கலந்துவிட்டுக் கொள்ளவும். இப்போது அதில் 2 கப் சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து விடவும். இப்போது 1 கப் நெய் ஊற்றி நன்றாக கிண்டிவிட்டுக் கொண்டேயிருக்கவும்.

இப்போது ஏலக்காய் 5 இடித்து சேர்த்துக்கொள்ளவும். முந்திரி 10 தூவி நன்றாக கிண்டிவிடவும். கடைசியாக அல்வா திரண்டு வரும்போது அடுப்பிலிருந்து இறக்கி பறிமாறவும். அவ்வளவு தான் சுவையான ABC அல்வா தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.

சோன்பப்டி செய்ய தேவையான பொருட்கள்;

நெய்-2 தேக்கரண்டி.

கடலைமாவு-1/2 கப்.

மைதா-1 கப்.

ஏலக்காய் பொடி-1 தேக்கரண்டி.

சர்க்கரை-1கப்.

தண்ணீர்-1/4 கப்.

எழுமிச்சைப்பழ சாறு-சிறிதளவு.

நறுக்கிய பாதாம், பிஸ்தா- தேவையான அளவு.

இதையும் படியுங்கள்:
தீபாவளி ஸ்பெஷல் ரெசிபி ரசமலாய் - ரசகுல்லா செய்யலாமா?
tasty halwa recipes

சோன்பப்டி செய்முறை விளக்கம்;

முதலில் காடாயில் 2 தேக்கரண்டி நெய் சேர்த்துக் கொள்ளவும். இதில் ½ கப் கடலைமாவு, 1 கப் மைதா சேர்த்து நன்றாக வாசம் வரும்வரை வறுத்துக் கொள்ளவும். இப்போது மாவை சலித்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். இதில் 1 தேக்கரண்டி ஏலக்காய் பொடி சேர்த்து கலந்துவிட்டுக் கொள்ளவும்.

இப்போது அடுப்பில் ஃபேனை வைத்து அதில் 1 கப் சர்க்கரை, ¼ கப் தண்ணீர், எழுமிச்சைப்பழசாறு கொஞ்சம் சேர்த்து நன்றாக கலந்துவிட்டுக் கொள்ளவும். ஒரு கின்னத்தில் தண்ணீர் எடுத்து அதில் பாகை ஊற்றி பார்த்தால் பந்துப்போல பதம் வரவேண்டும்.

ஒரு தட்டில் பாகை ஊற்றி நன்றாக பந்துப் போல உருட்டிக்கொள்ளவும். இப்போது உருட்டிய பாகை நன்றாக இழுத்து இழுத்து வளையம் போல செய்துக்கொள்ளவும். அதை வறுத்து வைத்திருக்கும் மாவில் போட்டு நன்றாக பிரட்டி இழுத்து விட்டுக் கொண்டேயிருக்கவும்.

அவ்வாறு செய்யும்போது நிறைய லேயர்ஸ் வரும். மாவுடனே சேர்த்து இவ்வாறு செய்யும் போது திரிதிரியாக பஞ்சுப்போல சோன்பப்டி தயாராகிவிடும். கடைசியாக நறுக்கிய பாதாம், பிஸ்தா தேவையான அளவு தூவி கலந்துவிட்டுக்கொள்ளவும். அவ்வளவுதான் சுவையான சோன்பப்டி தயார்.  நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com