Kovakkai curd gravy-coriander tart
Kovakkai curd gravy-coriander tart

நாவூர வைக்கும் சுவையில் கோவக்காய் தயிர் குழம்பு - கொத்தமல்லி பச்சடி செய்யலாமா?

Published on

ன்றைக்கு சுவையான கோவக்காய் தயிர் குழம்பு மற்றும் கொத்தமல்லி பச்சடி ரெசிபிஸை சிம்பிளாக வீட்டிலேயே எப்படி செய்யறதுன்னு பார்ப்போம்.

கோவக்காய் தயிர் குழம்பு செய்ய தேவையான பொருட்கள்.

கோவக்காய்-5

பூண்டு-2

இஞ்சி-1 துண்டு.

பச்சை மிளகாய்-1

சீரகம்-1 தேக்கரண்டி.

கொத்தமல்லி-1 கைப்பிடி.

தேங்காய் எண்ணெய்-4 தேக்கரண்டி.

கடுகு-1 தேக்கரண்டி.

உளுந்து-1 தேக்கரண்டி.

கடலைப்பருப்பு-1 தேக்கரண்டி.

கருவேப்பிலை-சிறிதளவு.

வரமிளகாய்-2

மஞ்சள் தூள்-1/2 தேக்கரண்டி.

உப்பு-1 தேக்கரண்டி.

தயிர்-1 கப்.

கோவக்காய் தயிர் குழம்பு செய்முறை விளக்கம்.

முதலில் கோவக்காய் 5 சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். இப்போது மிக்ஸியில் பூண்டு 2, இஞ்சி 1 துண்டு, பச்சை மிளகாய் 1, கொத்தமல்லி 1 கைப்பிடி, சீரகம் 1 தேக்கரண்டி ஆகியவற்றை சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

இதையும் படியுங்கள்:
டேஸ்டி தக்காளி தொக்கு - காரசார நெல்லிக்காய் சட்னி - ரெசிபிஸ்!
Kovakkai curd gravy-coriander tart

பேனில் 4 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்த்து கடுகு1 தேக்கரண்டி, கடலைப்பருப்பு 1 தேக்கரண்டி, உளுந்து 1 தேக்கரண்டி சேர்த்து நன்றாக பொரிந்ததும் வரமிளகாய் 2, கருவேப்பிலை சிறிதளவு சேர்த்து வதக்கிவிட்டு வெட்டி வைத்த கோவக்காயை இத்துடன் சேர்த்துத்கொள்ளவும். மஞ்சள் தூள் ½ தேக்கரண்டி, உப்பு 1 தேக்கரண்டி சேர்த்து தண்ணீர் சிறிது விட்டு காயை நன்றாக வேகவிடவும்.

இப்போது அரைத்து வைத்திருக்கும் பேஸ்டை சேர்த்து 2 நிமிடம் கலந்துவிட்டு அடுப்பிலிருந்து இறக்கிவிடவும்.  நன்றாக கெட்டியாக இருக்கும் தயிர் 1 கப்பை இதில் சேர்த்து கலந்துவிட்டு பரிமாறவும். சுவையான கோவக்காய் தயிர் குழம்பு தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.

கொத்தமல்லி பச்சடி செய்ய தேவையான பொருட்கள்.

கொத்தமல்லி-1 கட்டு.

எண்ணெய்-1 தேக்கரண்டி.

கடுகு-2 தேக்கரண்டி.

வெந்தயம்-2 தேக்கரண்டி.

புளி-நெல்லிக்காய் அளவு.

மிளகாய்த்தூள்-1 தேக்கரண்டி.

உப்பு-தேவையான அளவு.

தாளிக்க,

நல்லெண்ணெய்-2 தேக்கரண்டி.

கடுகு-1 தேக்கரண்டி.

வரமிளகாய்-2

பூண்டு-4.

இதையும் படியுங்கள்:
சூப்பர் சுவையில் வெண்டைக்காய் மோர்க்குழம்பு - தேங்காய் பால்கறி... சட்டுபுட்டுனு செய்யலாமா?
Kovakkai curd gravy-coriander tart

கொத்தமல்லி பச்சடி செய்முறை விளக்கம்.

முதலில் 1 கட்டு கொத்தமல்லியை நன்றாக கழுவி எடுத்துக் கொள்ளவும். இப்போது பேனில் 1 தேக்கரண்டி எண்ணெய் விட்டு கொத்தமல்லியை சேர்த்து நன்றாக வதக்கி எடுத்துக் கொள்ளவும்.

இப்போது கடாயில் 2 தேக்கரண்டி கடுகு, 2 தேக்கரண்டி வெந்தயத்தை வறுத்து பொடி செய்து எடுத்துக்கொள்ளவும். இத்துடன் வதக்கி வைத்திருக்கும் கொத்தமல்லி, பெரிய நெல்லிக்காய் அளவு புளியை சுடுத்தண்ணீரில் ஊறவைத்து அதையும் மிக்ஸியில் சேர்த்துக் கொள்ளவும். காரத்திற்கு 1 தேக்கரண்டி மிளகாய்த்தூள், உப்பு தேவையான அளவு சேர்த்து கொரகொரப்பாக மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

தாளிக்க கடாயில் 2 தேக்கரண்டி நல்லெண்ணெய் விட்டு கடுகு 1 தேக்கரண்டி, வரமிளகாய் 2,  பூண்டு 4 சேர்த்துவிட்டு அதில் அரைத்து வைத்திருக்கும் கலவையை சேர்த்து கலந்துவிட்டு இறக்கவும். அவ்வளவுதான்... சுவையான ஆந்திரா ஸ்ட்டைல் கொத்தமல்லி பச்சடி தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.

logo
Kalki Online
kalkionline.com