healthy recipes
Kuzhambu recipesImage credit - youtube.com

அல்டிமேட் டேஸ்டில் நரிப்பயறு வடை- முறுக்கு குழம்பு ரெசிபிஸ்!

Published on

ன்றைக்கு சுவையான மற்றும் ஆரோக்கியமான நரிப்பயறு வடை மற்றும் முறுக்கு குழம்பு ரெசிபிஸை வீட்டிலேயே எப்படி சுலபமாக செய்யறதுன்னு பார்ப்போம்.

நரிப்பயிறு வடை செய்ய தேவையான பொருட்கள்.

நரிப்பயிறு-1 கப்.

வரமிளகாய்-2

பச்சை மிளகாய்-2

இஞ்சி-1 துண்டு.

சோம்பு-1 தேக்கரண்டி.

பூண்டு-5.

வெங்காயம்-1

காருவேப்பிலை-சிறிதளவு.

உப்பு-தேவையான அளவு.

எண்ணெய்-தேவையான அளவு.

நரிப்பயறு வடை செய்முறை விளக்கம்.

முதலில் நரிப்பயிறு 1கப்பை ஒரு பவுலில் சேர்த்து நன்றாக கழுவி எடுத்துக் கொள்ளவும். பிறகு தண்ணீர் ஊற்றி 7மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும்.

இப்போது இத்துடன் வரமிளகாய் 2, சோம்பு 1 தேக்கரண்டி, பூண்டு 5, பச்சை மிளகாய் 2, இஞ்சி 1 துண்டு சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இதில் சிறிதாக நறுக்கிய வெங்காயம் 1, கருவேப்பிலை சிறிதளவு, உப்பு தேவையான அளவு சேர்த்து நன்றாக பிசைந்துக் கொள்ளவும்.

இப்போது அடுப்பில் கடாயை வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றிநன்றாக காய்ந்ததும் தட்டி வைத்திருக்கும் வடையை ஒவ்வொன்றாக சேர்த்து நன்றாக இரண்டு பக்கமும் பொன்னிறமாக பொரிந்ததும்  எடுத்து பரிமாறவும். சுவையான மற்றும் ஆரோக்கியமான நரிப்பயிறு வடை தயார். நீங்களும் வீட்டில் இந்த ரெசிபியை ட்ரை பண்ணிப் பார்த்துவிட்டு சொல்லுங்க.

முறுக்கு குழம்பு செய்ய தேவையான பொருட்கள்.

எண்ணெய்- தேவையான அளவு.

கடுகு-1 தேக்கரண்டி.

சீரகம்-1 தேக்கரண்டி.

வெங்காயம்-1

கருவேப்பிலை-சிறிதளவு.

பச்சை மிளகாய்-1

பூண்டு-10

தக்காளி-1

கரம் மசாலா-1 தேக்கரண்டி.

சீரகத்தூள்-1 தேக்கரண்டி.

மல்லித்தூள்-1 தேக்கரண்டி.

மஞ்சள் தூள்-1/2 தேக்கரண்டி.

மிளகாய் தூள்-1 தேக்கரண்டி.

உப்பு- தேவையான அளவு.

முறுக்கு-2

இதையும் படியுங்கள்:
சுவையான ஆவாரம்பூ தோசை - பொரிச்ச குழம்பு செய்யலாம் வாங்க!
healthy recipes

முறுக்கு குழம்பு செய்முறை விளக்கம்.

முதலில் கடாயில் எண்ணெய் சிறிது சேர்த்துக்கொண்டு அதில் கடுகு 1 தேக்கரண்டி, சீரகம் 1 தேக்கரண்டி, பொடியாக நறுக்கிய வெங்காயம் 1, பச்சை மிளகாய் 1, கருவேப்பிலை சிறிதளவு, பூண்டு 10 சேர்த்து நன்றாக வதங்கிய பிறகு பொடியாக நறுக்கிய தக்காளி 1 சேர்த்துக் கொள்ளவும்.

இத்துடன் கரம் மசாலா 1 தேக்கரண்டி, சீரகத்தூள் 1 தேக்கரண்டி மிளகாய் தூள் 1 தேக்கரண்டி, மஞ்சள் தூள் ½ தேக்கரண்டி, மல்லித்தூள் 1 தேக்கரண்டி, உப்பு சிறிதளவு சேர்த்து தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும். கடைசியாக, இதில் வைத்திருக்கும் முறுக்கு இரண்டை நன்றாக நொறுக்கி சேர்த்துக்கொள்ளவும். சப்பாத்தி, ரசம் சாதம், தயிர் சாதம் ஆகியவற்றிற்கு சூப்பராக இருக்கும். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலேயே ட்ரை பண்ணிப் பாருங்கள்.

logo
Kalki Online
kalkionline.com