டேஸ்டியான இளநீர் அல்வா எப்படி செய்வது என்று பார்க்கலாம்!

இளநீர் அல்வா
இளநீர் அல்வாkunjaminasrecipes.com

துவரை எத்தனையோ அல்வாவை சுவைத்திருப்பீர்கள். ஆனால் இன்னைக்கு கொஞ்சம் வித்தியாசமான ஒரு அல்வாவை பார்க்கலாம். பார்ப்பதற்கே ரொம்ப ப்யூரா வெள்ளையா அழகாயிருக்கும் இளநீர் அல்வா எப்படி செய்யறதுன்னு பாக்கலாம்.

தேவையான பொருட்கள்:

மூன்று பெரிய இளநீரின் தண்ணீரை எடுத்து வைத்து கொள்ளவும்.

கார்ன் ப்ளோர்-100கிராம்.

பவுடர் செய்து வைத்த ஜீனி- 1 1/2 கப்.

தேங்காயில் இருந்து எடுத்த வழுக்கையை பொடியாக வெட்டி வைத்து கொள்ளவும்.

நெய்- தேவையான அளவு.

ஏலக்காய் பொடி- 1 டேபிள் ஸ்பூன்.

பொடி செய்த பிஸ்தா பருப்பு- தேவையான அளவு.

செய்முறை:

முதலில் எடுத்து வைத்த இளநீரில் கான் ப்ளாரை சேர்த்து கட்டி வராமல் நன்றாக கலக்கி கொள்ளவும். பிறகு அதனுடன் 1 ½ கப் பவுடர் செய்து வைத்த ஜீனியை போட்டு கலக்கி கொள்ளவும்.

இப்போது ஒரு கடாயை எடுத்து அடுப்பில் வைத்து நன்றாக சூடான பிறகு அதில் 2 டேபில் ஸ்பூன் நெய் விட்டு செய்து வைத்திருந்த இளநீர் கலவையை அதில் ஊற்றி விடாமல் கலக்கவும்.

இதையும் படியுங்கள்:
அரைத்துவிட்ட பூண்டுக்குழம்பு ரெசிபி!
இளநீர் அல்வா

சிறிது நேரத்தில் நன்றாக கட்டியாவது போல தெரியும் சமயத்தில் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கிண்டவும். இப்போது அந்த திரண்டு வந்த கலவையில் 2 டேபிள் ஸ்பூன் நெய், ஒரு டேபிள் ஸ்பூன் ஏலக்காய் பொடி போட்டு நன்றாக கிண்டவும். இப்போது அல்வா நன்றாக திரண்டு வெண்மையாக வரும். அப்போது அதில் பொடி செய்து வைத்திருந்த இளநீர் வழுக்கையையும் பிஸ்தாவையும் தூவி நன்றாக கிண்டி இறக்கவும். வேண்டுமென்றால் இறக்கும் போது சிறிது நெய் விட்டுக் கொள்ளலாம்.

கண்டிப்பாக சீனியை சேர்க்க வேண்டும். அப்போதுதான் நிறம் மாறாமல் வெண்மையாக வரும்.

அல்வா சாப்பிடுவதற்கும் மிகவும் சுவையாக இருக்கும். கண்டிப்பாக இளநீர் பிரியர்களுக்கு ஃபேவரைட் அல்வாவாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com