
கதல் (Kathal) சப்ஜி ரெசிபி
தேவையான பொருட்கள்:
1.தோல் சீவி துண்டுகளாக்கிய பலாக்காய் 500 கிராம்
2.நறுக்கிய வெங்காயம் 500 கிராம்
3.கடுகு எண்ணெய் ¼ கப்
4.சீரகம் 2 டீஸ்பூன்
5.இஞ்சி பூண்டு பேஸ்ட் 2 டேபிள் ஸ்பூன்
6.பிரிஞ்சி இலைகள் 2
7.கருப்பு மிளகுத் தூள் 1 டீஸ்பூன்
8.மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்
9.தனியா தூள் 1 டீஸ்பூன்
10.சிவப்பு மிளகாய் தூள் 1 டீஸ்பூன்
11. கரம் மசாலா தூள் 1 டீஸ்பூன்
12. கொத்தமல்லி இலைகள் 2 டேபிள் ஸ்பூன்
13. உப்பு தேவையான அளவு
செய்முறை:
மீடியம் சைஸில் நறுக்கிய பலாக்காய் துண்டுகளை 2 கப் அளவு கொதிக்கும் தண்ணீரில் போட்டு, உப்பு சேர்த்து 10 நிமிடங்கள் வேகவிடவும். பின் கடுகு எண்ணெயை ஒரு கடாயில் ஊற்றி சூடாக்கவும். அதில் சீரகம் மற்றும் பிரிஞ்சி இலைகளை போட்டு ஒரு நிமிடம் வறுக்கவும். அதனுடன் வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து சிவக்கும்வரை வதக்கவும். பின்
மிளகுத் தூள், மஞ்சள் தூள், தனியாத் தூள், மிளகாய்த் தூள், கரம் மசாலாத் தூள் ஆகியவற்றை சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை மீடியம் தீயில் வைத்து வதங்க விடவும்.
பிறகு அதில் வேகவைத்த பலாக்காய் துண்டுகளைச் சேர்த்து ஒரு கப் கொதிக்கும் நீரை ஊற்றவும். தேவையான அளவு உப்பு சேர்த்துக் கலந்து, மூடி போட்டு மூடி 15 நிமிடங்கள் வரை வைத்து கிரேவி பதம் வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும். அதில் சிறிது கரம் மசாலாத்தூள் தூவவும். பிறகு கொத்தமல்லி இலைகளைத் தூவி அலங்கரிக்கவும். சூடாக சாதத்தில் பிசைந்து அல்லது கச்சோரிக்குத் தொட்டுக் கொண்டு சாப்பிடலாம்.
சுவையும் மணமும் நிறைந்த இந்த பலாக்காய் கறி மீண்டும் மீண்டும் கேட்டு வாங்கி உண்ணத்தூண்டும்.