
சப்பாத்தி, இந்திய உணவில் தவிர்க்க முடியாத ஒன்று. ஆனால், மெதுவான, பஞ்சு போன்ற சப்பாத்தி செய்வது பலருக்கும் சவாலாக உள்ளது. சப்பாத்தி கெட்டியாகவோ, காய்ந்து போயோ, அல்லது சரியாக வேகாமலோ இருக்கலாம். இந்த பிரச்னைகளை தீர்க்க, சில எளிய குறிப்புகள் உள்ளன.
இதற்கு மாவு பிசைவது முதல் சப்பாத்தி சுடுவது வரை, ஒவ்வொரு கட்டத்திலும் கவனமாக சில விஷயங்களை பின்பற்ற வேண்டும். அவை,
சப்பாத்திக்கு மாவு பிசையறதுன்னா, அதை சுடறதுக்கு ரெண்டு மணி நேரம் முன்னாடியே பிசைஞ்சு வைச்சுடறது நல்லது. அப்போ தான் மாவு நல்லா ஊறி அதுக்கு சாஃப்ட்னெஸ் கிடைக்கும்.
சிலர் சொல்ற மாதிரி நிறைய எண்ணெய் விட்டுப் பிசைஞ்சா சப்பாத்தி சாஃப்ட்டா வரும்கறது நிஜமில்லை. அப்படி செய்யறதால சப்பாத்தி சுடும் போது அது அப்பளம் மாதிரி உடையற அளவுக்கு வறட் வறட்டுன்னு ஆயிடும்.
வேணும்னா நீங்க பட்டர் பயன்படுத்தலாம். அதை சூடு பண்ணாம அப்படியே 5 நிமிசம் வெளிய எடுத்து வைச்சுட்டு அழுத்திப் பிசைஞ்சு சப்பாத்தி மாவுல கலந்து ட வேண்டியது தான்.
மிதமான சூட்டுல இருக்கற வெந்நீர் ஊற்றியும் மாவு பிசையலாம்.
எல்லாத்தையும் விட முக்கியமான சீக்ரெட் இன்னொன்னு இருக்கு. அது என்னன்னா? சப்பாத்தி மாவு பிசையும் போதும் சரி, கல்லுல சுட்டு எடுக்கும் போதும் சரி துளி எண்ணெய் கூட யூஸ் பண்ணாம அதை திரட்டும் போது மட்டும் சதுரமா மடக்கி மடக்கி தேய்ச்சு எடுக்கையில் துளி எண்ணெய் தடவி மடிச்சுத் தேய்ச்சு எடுத்தா போதும் விளம்பரங்கள்ல காட்டுற மாதிரி புஸ்ஸுன்னு பூரி மாதிரியே உப்பலான சாஃப்ட் சப்பாத்தி கிடைக்கும்.
கடைசியா ஒரு முக்கியமான விஷயம் இருக்கு. சப்பாத்தி மாவை பிசையும் போது உங்க மனசுல இருக்கற கோபத்தை எல்லாம் கைக்கு கொண்டு வந்து மாவை உண்டு இல்லைன்னு பண்ணிடுங்க. அவ்வளவு ஏன்? உங்க கணவரை ரெண்டு சாத்து சாத்தறதா நினைச்சுக்கூட மாவை ஓங்கி அறைந்து பிசையலாம்.
இப்படி ஒரு சிற்பி எப்படி அருமையான சிற்பம் செதுக்க உளியால இஞ்ச் இஞ்ச்சா மெனக்கெடுறாரோ? அதே மாதிரி தாங்க சப்பாத்தி மாவு பிசையற வேலையும். அவ்வளவு கவனக் குவிப்பு தேவைப்படும் பார்த்துக்கோங்க.
சரி இப்போ ஒரு வழியா மாவு பிசைஞ்சு முடிச்சாச்சு இல்ல... பிறகென்ன அப்படியே ஒரு துணியப் போட்டு மூடி அடுப்படில வச்சுட்டு ஒரு மணி நேரமோ, ரெண்டு மணி நேரமோ கழிச்சு வந்து சுட்டு அடுக்க வேண்டியது தான் பாக்கி.