சிறுகீரையில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் எளிதில் செரிமானமாகும். இது வயிற்றை சுத்தப்படுத்தி மலச்சிக்கலை தீர்க்கிறது. இந்த கீரையில் விட்டமின் ஏ,பி, சி, இரும்புச்சத்து, பொட்டாசியம், மாங்கனீசு போன்ற சத்துக்கள் சிறுகீரையில் ஏராளமாக உள்ளது. இத்தகைய பயன்களை கொண்ட கீரையை வைத்து ஒரு ரெசிப்பி செய்யலாம் வாங்க.
கீரை வடை செய்ய தேவையான பொருட்கள்:
உளுந்து-1/4கப்.
கடலை பருப்பு-1கப்.
ஜீரகம்-1 தேக்கரண்டி.
சோம்பு-1 தேக்கரண்டி.
இஞ்சி-1 துண்டு.
பூண்டு-5 பல்.
பச்சை மிளகாய்-1
வெங்காயம்-1
எண்ணெய்- தேவையான அளவு.
கீரை வடை செய்முறை விளக்கம்;
முதலில் 2 மணி நேரம் ஊறவைத்த ¼ கப் உளுந்து, 1 கப் கடலை பருப்பு தண்ணீரை நன்றாக வடிகட்டி விட்டு மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து எடுத்து கொள்ளவும்.
இப்போது அதில் ஜீரகம் 1 தேக்கரண்டி, சோம்பு 1தேக்கரண்டி சேர்த்துவிட்டு சிறுகீரையை அலசிவிட்டு நன்றாக பொடி பொடியாக நறுக்கிய கீரை 1கப், 5 பூண்டு பல் இடிச்சு சேர்த்துக் கொள்ளவும் .பொடியாக வெட்டி வைத்த பச்சை மிளகாய் 1, வெங்காயம் 1,தேவையான அளவு உப்பு, இஞ்சி 1 துண்டு தட்டி சேர்த்து கொள்ளவும். இப்போது இதையெல்லாம் நன்றாக பிசைந்து விட்டு மீடியம் சைஸில் தட்டி எண்ணெய்யில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து கொள்ளவும். இப்போது டீக்கடையில் செய்வது போலவே சுவையான கீரை வடை தயார். இதில் கீரை சேர்ப்பதால் உடலுக்கு ஆரோக்கியம். கீரை சாப்பிடாத குழந்தைகளுக்கு இப்படி செய்து தரலாம். நீங்களும் வீட்டில் முயற்சித்து பார்த்துவிட்டு சொல்லுங்க.
தேங்காய் பர்பி செய்ய தேவையான பொருட்கள்;
துருவிய தேங்காய்-2 கப்.
துருவிய வெல்லம்- 1கப்.
ஏலக்காய் தூள்-1 தேக்கரண்டி.
நெய்-2 தேக்கரண்டி.
கோவா-1/2 கப்.
தேங்காய் பர்பி செய்முறை விளக்கம்;
முதலில் ஃபேனில் இரண்டு தேக்கரண்டி நெய் சேர்த்து அதில் துருவி வைத்திருக்கும் 2 கப் தேங்காய்யை சேர்த்து நன்றாக பொன்னிறமாக வறுக்கவும். இப்போது அதில் 1 கப் துருவிய வெல்லம் சேர்த்து கொள்ளவும். கோவா ½ கப் சேர்த்து நன்றாக கிண்டவும். கடைசியாக ஏலக்காய் பவுடர் 1 தேக்கரண்டி சேர்த்து கிண்டி இறக்கவும். இப்போது இந்த கலவையை ஒரு டிரேயில் சிறிது நெய் தடவி விட்டு மாற்றி வைத்து ஆறியதும் துண்டுகளாக வெட்டி பரிமாறவும். சுவையான தேங்காய் பர்பி தயார். இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். நீங்களும் வீட்டில் ஒருமுறை முயற்சித்து பார்த்துவிட்டு சொல்லுங்க.