ஸ்வீட் கார்ன் மக்ரோனி சாலட் எப்படி செய்யறது?

Macaroni Masala
Macaroni Masala
Published on

மக்ரோனி மசாலா

தேவையான பொருட்கள்;

மக்ரோனி-  ஒரு கப்

தக்காளி - இரண்டு

பெரிய வெங்காயம்- ஒன்று

இஞ்சி பூண்டு பேஸ்ட்- ஒரு ஸ்பூன்

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

கருவேப்பிலை - சிறிதளவு

கரம் மசாலா - அரை ஸ்பூன்

மிளகாய் தூள் - ஒரு ஸ்பூன்

செய்முறை;

ஒரு வாணலியில் மூன்று கப்  தண்ணீர் ஊற்றி அதில் மக்ரோனியைப் போட்டு வேகவைக்கவும். பின் அந்த தண்ணீரை வடித்து விடவும். குளிர்ந்த தண்ணீர் ஊற்றி மேக்ரோனியைக் கழுவவும். அதில் இரண்டு ஸ்பூன் சமையல் எண்ணெய் விட்டு மிக்ஸ் செய்யவும். தக்காளி மற்றும் பெரிய வெங்காயத்தை  நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு பேனில் சிறிதளவு எண்ணெய் விட்டு கடுகு பொரிந்ததும் நறுக்கிய வெங்காயம், தக்காளி துண்டுகள் கருவேப்பிலை சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும். இஞ்சி பூண்டு பேஸ்ட், கரம் மசாலா தூள், மிளகாய் தூள் போட்டு உப்பு போட்டு வதக்கவும். பின் வேகவைத்த மேக்ரோனியை அதில் கொட்டி நன்றாக கிளறவும். இப்போது சுவையான மக்ரோனி மசாலா ரெடி. இதை சாஸ் தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும்.

ஸ்வீட் கார்ன் மக்ரோனி சாலட்

தேவையான பொருட்கள்;

மக்ரோனி - ஒரு கப்

ஸ்வீட் கான் - 1

கேரட்    -  1

குடைமிளகாய் -1

தக்காளி -1

கரம் மசாலா - 1 ஸ்பூன்

எலுமிச்சை சாறு - ஒரு ஸ்பூன்

மல்லித்தழை - சிறிதளவு

மிளகுத்தூள் - அரை ஸ்பூன்

சீரகத்தூள் - 1 ஸ்பூன்

உப்பு எண்ணெய் - தேவையான அளவு

இதையும் படியுங்கள்:
விழித்திருந்தால் வெற்றி நிச்சயம்!
Macaroni Masala

செய்முறை;

மக்ரோனியை தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும். தண்ணீரை வடித்து விட்டு குளிர்ந்த நீரில் அதை கழுவவும். ஸ்வீட் கார்னை உதிர்த்து அவற்றை ஒரு வாணலியில் போட்டு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். பின் நீரை வடித்து கார்னை தனியாக வைக்கவும்.

தக்காளி, மல்லித்தழையை பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கேரட்டையும் துருவிக் கொள்ளவும். 

ஒரு அகலமான பவுலில் வெந்த மேக்ரோனியை போட்டு இதனுடன் ஸ்வீட் கார்னையும் போட்டவும். அதில் துருவிய கேரட் நறுக்கிய தக்காளி குடைமிளகாய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து எல்லாவற்றையும் ஒன்றாக மிக்ஸ் செய்து கொள்ளவும். இப்போது ஸ்வீட் கார்ன் மக்ரோனி சாலட் ரெடி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com