மதுரை ஸ்பெஷல் பால்பன்னும், பட்டணம் பக்கோடாவும் செய்யலாம் வாங்க!

sweet & kaaram recipes...
healthy snacksImage credit - youtube.com
Published on

பால் பன்

தேவையான பொருள்கள்:

மைதா-2 கப் 

 சர்க்கரை -2  கப் 

 பால் -3 டேபிள்ஸ்பூன் 

 தயிர்-1/4 கப் 

நெய் -4 டேபிள் ஸ்பூன் 

 சோடா உப்பு -1/4 டேபிள் ஸ்பூன் 

 எண்ணெய் - பொரித்தெடுக்க தேவையான அளவு 

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் மைதா,ஒரு கப் பொடித்த சர்க்கரை, பால், தயிர்,நெய் சோடா உப்பு சேர்த்து மாவை நன்கு கலந்து எடுத்துக் கொள்ளவும். (தேவைப்பட்டால் சிறிது தண்ணீர்  சேர்த்துக் கொள்ளலாம்.)

மற்றொரு வாணலியில்  1  கப் சர்க்கரை,1/2கப் தண்ணீர் சேர்த்து  ஒட்டும்  பாகு பதத்திற்கு சர்க்கரை கரைசலை  காய்ச்சி எடுத்துக் கொள்ளவும். பின் ஒரு வாணலியில் எண்ணெய்  ஊற்றி எண்ணெய்  நன்கு சூடானவுடன்  கலந்து வைத்த மாவை சிறு சிறு உருண்டைகளாக (போண்டா சைஸ்) எண்ணெயில் போட்டு மிதமான சூட்டில் பொரித்து எடுக்கவும். ஓரளவு ஆறியவுடன் தயாரித்து வைத்த சர்க்கரை பாகில்  போட்டு ஒரு சுழற்று சுழற்றி எடுத்தால் சுவையான மதுரை ஸ்பெஷல் பால்பன் ரெடி!

பட்டணம் பக்கோடா:

தேவையான பொருள்கள்:

கடலை மாவு -3/4 கப் 

 பொட்டுக்கடலை மாவு -1/2கப் 

 அரிசி மாவு-1/2 கப் 

 சோடா உப்பு-1/4 டேபிள் ஸ்பூன் 

 நெய்-3 டேபிள்ஸ்பூன் 

 பெரிய வெங்காயம் -1

 பச்சை மிளகாய்-2

 பூண்டு-2 பல் 

 சோம்பு-1/2 டேபிள் ஸ்பூன் 

 இஞ்சி - சின்ன துண்டு

 மிளகாய்த்தூள் -1/2 டேபிள்ஸ்பூன் 

 பெருங்காயம்-1 சிட்டிகை

 எண்ணெய் - பொரித்தெடுக்க தேவையான அளவு  

உப்பு- தேவையான அளவு

இதையும் படியுங்கள்:
ரசகுல்லாவிற்காக இரண்டு மாநிலங்கள் சண்டைப் போட்டுக் கொண்ட கதை தெரியுமா?
sweet & kaaram recipes...

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் நெய், சோடா மாவு சேர்த்து  நன்கு கலக்கி கொள்ளவும். டேஸ்ட் பதத்துக்கு வந்தவுடன் அதனுடன் எடுத்து வைத்த  அனைத்து மாவுகளையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின் அதனோடு அரைத்த இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய்,சோம்பு, நறுக்கிய வெங்காயம், பெருங்காயம், மிளகாய் தூள்,உப்பு சேர்த்து  கலந்து கொள்ளவும். அதனோடு சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து சப்பாத்திமாவு பதத்திற்கு நன்கு கலந்து எடுத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணெய்  ஊற்றி எண்ணெய்  நன்கு சூடானவுடன் கலந்து வைத்த மாவை எடுத்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் சுவையான பட்டணம் பக்கோடா ரெடி! தேங்காய் சட்னியுடன் சேர்த்து சாப்பிட சுவை  அட்டகாசமாக இருக்கும்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com