

ஃப்ரூட் ஜாம் இருந்தால் அதை ஒரு டீஸ்பூன் எடுத்து பாலில் கலந்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி சில்லென்று கொடுக்க, பால் குடிக்க அடம் பண்ணும் குழந்தைகள் கூட சட்டென குடித்துவிடுவர்.
ஒரு பங்கு புழுங்கல் அரிசி, 1/4பங்கு பச்சரிசி, 1/4பங்கு ஜவ்வரிசி இவற்றை ஒன்றாக ஊறவிட்டு ஊறியதும் ஒரு பிடி பழைய சாதம், தேங்காய் பால் சேர்த்து அரைத்து உப்பு சேர்த்து கரைத்து அடுத்த நாள் ஆப்பமாக ஊற்ற சுவை சூப்பராக இருக்கும்.
முதல் நாள் மீதமிருந்த சாதத்தை மிக்ஸியில் ஒரு பங்கு சிறுதானிய மாவு, மல்ட்டி க்ரெய்ன் ஆட்டா மாவு ஒரு பங்கு சேர்த்து உப்பு போட்டு நன்கு கலந்து அதனுடன் வெங்காயம், ப மிளகாய் கருவேப்பிலை, சீரகம் சேர்த்து கலந்து சற்று நேரம் கழித்து ஊற்ற சுவையான, சத்தான தோசை காரச் சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
எந்தவித ரோஸ்ட் செய்யும் போதும் ப்ரெட் க்ரம்ப்ஸ், வறுத்து அரைத்த எள் வேர்க்கடலை பொடித்ததை கலந்து அதை சேர்த்து வறுக்க சுவை நன்றாக இருக்கும்.
பாயஸமோ, புட்டிங்கோ செய்யும்போது பழங்களை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி தேனில் குழைத்து அதனுடன் எசென்ஸ் அல்லது பாதாம் பவுடர் சேர்த்து கலந்து பரிமாற சுவை சூப்பராக இருக்கும்.
கோதுமை மாவு, மைதா மாவு டப்பாவில் 2,3சி மிளகாய் அல்லது பிரிஞ்சி இலையை போட்டு வைக்க வண்டுகள் வராது.நீண்ட நாட்கள் இருந்தாலும் மக்கிய வாடை வராது.
ப மிளகாயை கீறி விதைகளை நீக்கிவிட்டு சமைக்க காரம் இருக்காது.
பூரி பொரித்து நீண்ட நேரம் உப்பலாகவே இருக்க மாவுடன் சூடான எண்ணையோ, பூரி பொரித்து, அந்த பொடியையோ சேர்க்க க்ரிஸ்பாகவே இருக்கும்.
பீட்ரூட், கேரட், பூசணி அல்வா செய்ய காயை பாலில் வேகவிட்டு வெந்ததும் பால்கோவா, சர்க்கரை சேர்த்து கலந்து செய்ய சுவை நன்றாக இருக்கும்.
எலுமிச்சம் பழம் நீண்ட நாள் கெடாமல் இருக்க பழத்தை உப்பில் வைக்க ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.
இட்லி உப்புமா செய்யும்போது எப்போதும் செய்வதுபோல் கடுகு தாளித்து செய்வதை விட காய்கறிகளை துருவிக்கொண்டு, வெங்காயம், ப மிளகாய் நறுக்கி வைக்கவும். தாளிக்கையில் பட்டை, சோம்பு, கரம் மசாலா சேர்த்து நறுக்கியவற்றை சேர்த்து வதக்கி உப்புமா, உப்பு சேர்த்து நன்கு கிளறி கறிவேப்பிலை, கொஞ்சம்மல்லி, புதினா சேர்த்து கலந்து பரிமாற சுவை வித்தியாசமாய் நன்றாக இருக்கும்.
கறிவேப்பிலை, நெல்லிக்காய் சாறை ரெகுலராக அருந்த சமையலில் கறிவேப்பிலை சேர்த்து செய்ய வேண்டியதில்லை.
வாசனை மூலிகைகளை (தைம், ஓரிகனோ) போன்றவற்றை ஒருமுறை வாங்கி ஃப்ரிட்ஜில் வைத்து சமையலில் அவ்வப்போது புது ரெசிபிகளாக டிரை பண்ணி சமைக்க, சமையல், சாப்பாடு ஒரே சுவையில் போரடிக்காது.
சூப் செய்து குழந்தைகளுக்கு கொடுக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள அவர்கள் பால், எனர்ஜி டிரிங்க்ஸ் என குடிக்கவில்லை என்றாலும் பிரச்னை இல்லை.
காய்கறி சாலட், நான்வெஜ் சூப் என குழந்தைகளுக்கும், வளரும் சிறுவ, சிறுமியருக்கு கொடுக்க குழம்பு, வறுவல் என சாப்பிட வேண்டும் என அவர்களை வற்புறுத்த வேண்டியிருக்காது.
பொடி தோசை செய்ய வழக்கமான இட்லி பொடி, மிளகாய் பொடி உபயோகிப்பதுபோல நூடுல்ஸில் வரும் பொடி, பால் பாஜி பொடி இவற்றை கொண்டு வெங்காயம், பமிளகாய் அரிந்ததை கலந்து வைத்துக்கொண்டு தோசை மேல் இந்த பொடியை தூவி நெய் விட்டு ரோஸ்ட் ஆக கொடுக்க சுவை சூப்பராக இருக்கும்.
எலுமிச்சம் பழத்தில் ஜுஸ் போடும்போது இளநீர் வழுக்கை கொஞ்சம் சுக்குத்தூள் புதினா இலை கட் பண்ணி சேர்த்து கலந்து பரிமாற சுவை நன்றாக இருக்கும்.