ஹோட்டல் சுவையில் மணமணக்கும் காளான் கிரேவி!

hotel taste...
Mushroom Gravy!
Published on

சப்பாத்திக்கு எப்போதும் ஒரே மாதிரி சைட் டிஷ் சாப்பிட்டு போர் அடித்து விட்டதா? அப்படியானால் ஒரு முறை சற்று வித்தியாசமாக ரெஸ்டாரண்ட் சுவையில் காளான் கிரேவி முயற்சி செஞ்சு பாருங்க. இதை பூரி, சப்பாத்தி போன்ற வற்றுடன் வைத்து சாப்பிட சூப்பராக இருக்கும். குறிப்பாக குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய வகையில் இருப்பதால், நிச்சயம் ஒரு முறையாவது இதை நீங்கள் முயற்சித்துப் பார்க்க வேண்டும். 

தேவையான பொருட்கள்

காளான் - 1 கப்

வெங்காயம் - 1

தக்காளி - 1

மல்லித்தூள் - ½ ஸ்பூன் 

மிளகாய் தூள் - 1 ஸ்பூன் 

மஞ்சள் தூள் - ½ ஸ்பூன் 

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன் 

கரம் மசாலா - 1 ஸ்பூன் 

கசூரி மேத்தி - ½ ஸ்பூன் 

முந்திரி - 5

தண்ணீர் - தேவையான அளவு

கொத்தமல்லித் தழை - சிறிதளவு

காளான் கிரேவி செய்முறை: 

முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் ஏலக்காய், கிராம்பு, சீரகம், பட்டை சேர்த்து தாளிக்க வேண்டும். 

பின்னர் அதில் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்குங்கள். 

இதையும் படியுங்கள்:
புரதம் நிறைந்த கொண்டைக்கடலை: இனிப்பு முதல் காரம் வரை சுவைமிகு ரெசிபிகள்!
hotel taste...

பின்னர் அதில் தேவையான அளவு உப்பு மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து வதக்குங்கள். அடுத்ததாக தக்காளியை நன்கு அரைத்து இதில் சேர்த்து வதக்கவேண்டும்.

மசாலா வாசனை வெளியேறும்போது காளானை சேர்த்து கிளறி, சிறிதளவு தண்ணீர் சேர்த்து ஐந்து நிமிடம் வேக விடுங்கள். பிறகு முந்திரிப் பொடி, கரம் மசாலா சேர்த்து கிளறி கெட்டியாகும் வரை நன்கு வேகவிட்டு, இறுதியில் கசூரி மேத்தி கொத்தமல்லித் தழை தூவி இறக்கினால், அட்டகாசமான சுவையில் ரெஸ்டாரண்ட் ஸ்டைல் காளான் கிரேவி வீட்டிலேயே தயார். 

-கிரி கணபதி

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com