உங்க அப்பம் இனி 'Super Soft'! 10 நிமிடத்தில் மிருதுவான அப்பம் செய்வது எப்படி?

Appam
Appam
Published on

சிலர் வீடுகளில் பண்டிகை நாட்களில் செல்லும் போது அப்பம் சாப்பிட தருவார்கள். அது பஞ்சு போல் மெதுவாக இருக்கும். கோவில் பிரசாத அப்பமும் மிருதுவாக இருக்கும். ஆனால் நாம் செய்தால் மட்டும் கல்லு போல் ஆகி விடுகிறது என்று கவலைப்படுகிறீர்களா?

இதோ மிருதுவான மைதா அப்பம் செய்வது எப்படி என்று பார்ப்போம்...

தேவையானவை

மைதா - 1 கப்

ரவை - 1/2 கப்

சர்க்கரை - 1/2 கப்

உப்பு - 1 சிட்டிகை

ஏலக்காய் - 5

காய்ச்சி ஆற வைத்த பால் - 1/2 கப்

பொரிக்க எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை

மைதாவை நன்கு சலித்து அதனுடன் ரவை, சர்க்கரை, 1 சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு கலந்ததும் இதனுடன் காய்ச்சி ஆற வைத்த பாலை சேர்த்து கட்டிகள் இன்றி நன்றாக அடித்துக் கலக்கவும். மிகவும் கெட்டியாக இருக்கும் பட்சத்தில் சிறிது சிறிதாக நீரூற்றி இட்லி மாவு பதத்திற்கு மிகவும் தளறாமலும் கெட்டியாகவும் இல்லாதவாறு கரைத்துக் கொள்ளவும். இதை அப்படியே ஒரு அரை மணி நேரம் ஊற விடவும். இதனால் ரவையும் மைதாவும் நன்கு பதமாக ஊறி மிருதுவான அப்பம் கிடைக்கும்.

இப்போது ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் வைத்து எண்ணெய் காய்ந்ததும் ஒரு சிறு குழி கரண்டியால் ஒவ்வொரு அப்பமாக ஊற்றி எடுக்கவும். ஒரு அப்பம் ஊற்றிய பின் அது மேலே எழுந்து வந்ததும் தான் மறுபடியும் ஊற்ற வேண்டும். இல்லை எனில் இரண்டும் ஒட்டிக்கொண்டு சரியாக வராமல் போய்விடும். அப்பம் என்றாலே மிதமான தீயில் பொறுமையாக சுட வேண்டிய ஒரு பண்டம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எண்ணெய் வடிந்ததும் எடுத்து சாப்பிடலாம். இதில் மைதா வேண்டாம் நினைத்தால் கோதுமை மாவு சேர்க்கலாம். ஆனால் கொஞ்சம் சுவை மாறும்.

இதையும் படியுங்கள்:
அளவோடு சமைக்க! சுவையோடு முடிக்க! சமைக்கும் முன் அறிய வேண்டியவை!
Appam

அடுத்து வெல்ல மாவு அப்பம் செய்முறை...

தேவையானவை

இட்லி அரிசி - 1 கப்

வெல்லம் - 1/2 கப்

ஏலக்காய் - 6

உப்பு - 1 சிட்டிகை

துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்

வெந்தயம் - 1 டீஸ்பூன்

உளுந்து - 2 டீஸ்பூன்

கோதுமை மாவு - 1 கைப்பிடி அளவு

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை

இட்லி அரிசியை வெந்தயம் சேர்த்து நன்கு ஊற வைத்து அதனுடன் பொடித்த வெல்லம் சேர்த்து மிக்ஸியில் அல்லது கிரைண்டரில் போட்டு அதிக நீர் விடாமல் மைய அரைக்கவும். இறுதியாக தேங்காய் துருவல் மற்றும் ஏலக்காய் தூள், கோதுமை மாவு கலந்து வைக்கவும்.

இதையும் படியுங்கள்:
மராட்டியத்தின் ஸ்பெஷல் ஸ்வீட் பன்லூ: ஈஸியாகச் செய்து, ருசித்து மகிழலாம்!
Appam

இப்போது அடுப்பினில் கடாய் வைத்து மிதமான சூட்டில் ஒவ்வொரு அப்பமாக பொரித்து எடுக்கவும். இந்த அப்பம் ஒரு நாள் இரண்டு நாட்களுக்குள் பஞ்சு போல் இருக்கும். எனினும் நீண்ட நாட்கள் வைத்திருக்க முடியாது. சிறிது கெட்டித்தன்மை ஆகிவிடும். காரணம் நாம் சேர்த்து இருக்கும் இட்லி அரிசி. இருப்பினும் இது ஆரோக்கியமான விதத்தில் செய்யப்பட்ட அப்பம் ஆகும். சிலர் அப்பம் மிருதுவாக இருக்க வாழைப்பழம் ஒன்று சேர்த்தும் செய்வர். குழந்தைகளுக்கு இரும்பு சத்து மிகுந்த இந்த அப்பம் அனைவரின் உடல் நலனுக்கும் ஏற்றதாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com