இன்றைக்கு சுவையான வெஜிடபிள் பாயா மற்றும் தக்காளி ரசம் வீட்டிலேயே சுலபமா எப்படி செய்யறதுன்னு பாக்கலாம் வாங்க.
வெஜிடபிள் பாயா செய்ய தேவையான பொருட்கள்;
துருவிய தேங்காய்-1கப்.
பச்சை மிளகாய்-2
முந்திரி-4
சோம்பு-1 தேக்கரண்டி
மஞ்சள் தூள்-1/4 தேக்கரண்டி.
பட்டை-1
கிராம்பு-1
ஏலக்காய்-1
இஞ்சிபூண்டு பேஸ்ட்-1 தேக்கரண்டி.
உப்பு- தேவையான அளவு.
எண்ணெய்- தேவையான அளவு.
வெங்காயம்-1
தக்காளி-1
பீன்ஸ்-1கப்.
கேரட்-1கப்.
பட்டாணி-1கப்.
உருளை-1கப்.
தண்ணீர்- 2 கப்.
வெஜிடபிள் பாயா செய்முறை விளக்கம்;
முதலில் மிக்ஸியில் 1கப் துருவிய தேங்காய், 2 பச்சை மிளகாய், 1 தேக்கரண்டி சோம்பு, 4 முந்திரி பருப்பு, ¼ தேக்கரண்டி மஞ்சள் தூள் இதில் தண்ணீர் சிறிது விட்டு நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
இப்போது அடுப்பில் கடாயை வைத்து 2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு பட்டை1, கிராம் 1, ஏலக்காய் 1 சேர்த்து பெரிய வெங்காயம் 1, தக்காளி 1 சேர்த்து நன்றாக வதக்கவும். இப்போது 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு பேஸ்ட், தேவையான அளவு உப்பு சேர்த்து கிண்டி விட்டு 1 கப் பீன்ஸ், 1 கப், பச்சை பட்டாணி, 1 கப் உருளை, 1 கப் கேரட் சேர்த்து 2 நிமிடம் வதக்கி விட்டு அரைத்து வைத்திருக்கும் பேஸ்ட்டை சேர்த்து இரண்டு கப் தண்ணீர் சேர்த்து பத்து நிமிடம் கொதிக்கவிட்டு எடுத்தால் சுவையான வெஜிடபிள் பாயா தயார். இந்த ரெசிபியை இட்லி, இடியாப்பத்திற்கு தொட்டு சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். நீங்களும் வீட்டில் ஒருமுறை இந்த ரெசிபியை முயற்சித்து பாருங்கள்.
தக்காளி ரசம் செய்ய தேவையான பொருட்கள்;
தக்காளி-4
மிளகு-1 தேக்கரண்டி.
ஜீரகம்-1 தேக்கரண்டி.
வரமிளகாய்-2
பூண்டு -5
கடுகு-1 தேக்கரண்டி.
வெந்தயம்-1 தேக்கரண்டி.
வரமிளகாய்-2
பெருங்காயத்தூள்- சிறிதளவு.
கருவேப்பிலை-சிறிதளவு.
புளி-எழுமிச்சை அளவு.
உ.பு- தேவையான அளவு.
மஞ்சள் தூள்-1/4 தேக்கரண்டி.
எண்ணெய்- தேவையான அளவு.
கொத்தமல்லி- சிறிதளவு.
தக்காளி ரசம் செய்முறை விளக்கம்;
முதலில் நான்கு தக்காளியை எடுத்து நன்றாக 10 நிமிடம் தண்ணீரிலே வேகவைக்கவும். பிறகு அதன் தோலை மட்டும் நீக்கி விடவும். இப்போது இதை மிக்ஸியில் சேர்த்து தண்ணீர் சிறிது ஊற்றி அரைத்து வைத்துக் கொள்ளவும்.
இப்போது மிக்ஸியில் 1 தேக்கரண்டி சீரகம், 1 தேக்கரண்டி மிளகு, பூண்டு 5, வரமிளகாய் 2 நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளலாம். அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து எண்ணெய் 2 தேக்கரண்டி ஊற்றி கடுகு 1 தேக்கரண்டி, வெந்தயம் 1 தேக்கரண்டி, வரமிளகாய் 2, கருவேப்பிலை சிறிதளவு, பெருங்காயம் சிறிதளவு சேர்த்து அரைத்து வைத்திருக்கும் மிளகு கலவையை சேர்த்து அத்துடன் அரைத்து வைத்திருக்கும் தக்காளியை சேர்த்து அரைமணி நேரம் ஊற வைத்த புளி கரைச்சலை இத்துடன் சேர்த்து தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள் ¼ தேக்கரண்டி சேர்த்து கொதிக்கவிட்டு கொத்தமல்லி சேர்த்து இறக்கவும். அவ்வளவுதான் சுவையான தக்காளி ரசம் தயார். நீங்களும் வீட்டில் இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க.