இனிப்பும் புளிப்பும் சேர்ந்த சுவையான குஜராத்தி கடி (khadi) செய்யலாம் வாங்க!

இனிப்பும் புளிப்பும் சேர்ந்த சுவையான குஜராத்தி கடி (khadi) செய்யலாம் வாங்க!
foodopium.in

தேவையான பொருள்கள்;

1. கடலை மாவு 5 டீஸ்பூன்

2. புளிக்காத தயிர் – இரண்டு கப்

3. நெய் - இரண்டு டீஸ்பூன்

4. சீரகம் - அரை டீஸ்பூன்

5. கடுகு - அரை டீஸ்பூன்

6. கறிவேப்பிலை -சிறிதளவு

7. உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

8. சர்க்கரை - 2 டீஸ்பூன்

9.இஞ்சி – ஒரு துண்டு

10. பச்சை மிளகாய் – 4

11. சாதம்- இரண்டு ஸ்பூன்

செய்முறை;

ஞ்சியை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாய்களை அதனுடன் சேர்த்து மிக்சியில் விழுதாக அரைத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் கடலை மாவை கொட்டி தயிரை அதில் கலந்து நன்றாக அடித்துக் கொள்ளவும். அதில் மூன்று கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கி தனியாக வைக்கவும்.

இதையும் படியுங்கள்:
ஆடை மற்றும் அணிகலன்கள் நழுவாமல் ‘நச்’ என்று இருக்க இந்த ஃபேஷன் டேப் பெஸ்ட்!
இனிப்பும் புளிப்பும் சேர்ந்த சுவையான குஜராத்தி கடி (khadi) செய்யலாம் வாங்க!

ஒரு கடாயில் நெய்யை சூடாக்கி கடுகு போட்டுப் பொரிந்ததும் சீரகம் போட்டு பொரிக்கவும். சாதத்தை அதில் போட்டு சில நொடிகள் வதக்கவும். பின்பு அதில் தயிர் சேர்த்த கடலை மாவுக் கலவையையும் சேர்க்க வேண்டும். கறிவேப்பிலை உப்பு, இஞ்சி பச்சை மிளகாய் விழுதை சேர்த்து சிறிது நேரம் கிளறவும். பின்னர் சர்க்கரையைப்  போட்டு கிளறி இரண்டு நிமிடம் நன்றாக கொதிக்க விடவும். அடுப்பை சிம்மில் வைத்து 10 நிமிடங்கள் வரை குஜராத்தி கடியை கொதிக்க விடவும். கொத்தமல்லி  தூவி பரிமாறவும். இது  கிச்சடியுடன் பரிமாற ஏற்றது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com